வேர்க்கடலையை அரைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
122
#image_title

வேர்க்கடலையை அரைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

வேர்க்கடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேர்க்கடலையில் செய்யப்பட்ட பண்டம் விருப்பமான ஒன்றாக இருக்கின்றது. வேர்க்கடலையில் புரதம், இரும்பு, செலினியம், வைட்டமின்கள் பி1, பி3, பி9 மற்றும் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

வேர்க்கடலையை நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

வேர்க்கடலை பேஸ்ட் நன்மைகள்:-

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது.

மூளைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.

உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது.

இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

மார்பக புற்று நோய் பாதிப்பை தடுக்கிறது.

கண் தொடர்பான நோய் பாதிப்புகளை குணப்படுத்துகிறது.

செரிமானக் கோளாறை சரி செய்ய உதவுகிறது.

சிறுநீரக கல் பாதிப்பை தடுக்கிறது.