“மைதா பரோட்டோ” பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!!

0
23
#image_title

“மைதா பரோட்டோ” பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!!

இன்றைய நவீன உலகில் மனிதர்களின் வாழ்க்கை இயந்திரமாகி விட்டது.அனைவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்ள முடியும் என்று காலில் சக்கரம் காட்டியது போல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதனால் வீட்டில் சமைக்க கூட நேரம் இல்லாமல் ஹோட்டலில் உண்பதை அனைவரும் வழக்கமாக்கி கொண்டதால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டு வருகிறது.

வீடுகளில் சமைக்கும் உணவுகளை விட ஹோட்டலில் சமைக்கும் உணவு மிகவும் ருசியாக இருக்கும் காரணத்தினால் பலரும் வீட்டில் சமைப்பதையே மறந்து விட்டனர்.ஹோட்டலில் பல விதமான உணவுகள் ருசியாக இருக்க வேண்டும் என்பதினால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

ஹோட்டல் உணவு கெடுதல் என்று தெரிந்தும் ருசிக்காக பலரும்,வெறு வழியின்றி சிலரும் உண்டு வருகின்றனர்.அந்தவகையில் அதிக ருசியை தரும் உணவில் ஒன்றான பாரோட்டாவில் நிறைந்து இருக்கும் ஆபத்து பற்றிய தொகுப்பு இதோ.

அடிக்கடி பரோட்டா உண்பதினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்:-

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பரோட்டா உடலுக்கு கேடு விளைக்கும் ஒன்றாக இருக்கிறது.

*இந்த பரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மைதா மாவனது ரவை,கோதுமையின் வேஸ்டில் தயாரிக்கப்படுகிறது.அதுமட்டும் இன்றி Bran மற்றும் Germ போன்ற பொருட்களை வைத்தும் மைதா தரிக்கப்படுகிறது.

இந்த Bran-ல் அதிகளவு வைட்டமின் பி மற்றும் நார்ப்பொருள் அடங்கி இருக்கிறது.அதேபோல் Germ-ல் கார்போ ஹைட்ரேட் மற்றும் மாவு சத்து அதிகளவில் அடங்கி இருக்கிறது.இந்த இரண்டு பொருட்களும் அதிகளவில் கொழுப்பு சத்துக்களை கொண்டிருக்கிறது.இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

*பொதுவாக உணவகங்களில் இரவு நேரங்களில் தான் பரோட்டா அதிகளவில் கிடைக்கும்.இதனை இரவு நேரங்களில் உண்டால் செரிமான கோளாறு,மலசிக்கல் பாதிப்பு அதிகளவில் ஏற்படும்.உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் குடல் சுத்தம் மிகவும் அவசியம்.ஆனால் பரோட்டா சாப்பிடுவதன் மூலம் செரிமான பாதிப்பு உண்டாவதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெடும் அபாயம் ஏற்படுகிறது.

*அதேபோல் மைதாவில் alaxan என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் இதனை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது நீரிழவு பாதிப்பு ஏற்படும்.அதுமட்டும் இன்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து விடுகிறது.

*மைதா பரோட்டாவை இரவு நேரங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும்.காரணம் இரவு நேரங்களில் இதை அதிகளவில் உண்பதினால் உடலில் மலட்டு தன்மையை ஏற்படுத்திவிடும்.
இதன் காரணமாக வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு ஏற்படத் தொடங்கும்.

*அடிக்கடி மைதா பரோட்டா சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகி விடும்.

*மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா மட்டும் அல்ல இந்த மாவை வைத்து தயாரிக்கும் பிஸ்கட்,கேக் உள்ளிட்ட பொருட்களை தவிர்ப்பதும் உடலுக்கு நல்லது.