ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..?

0
46

ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..?

இனிப்பான பண்டங்களை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இனிப்பு பண்டங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஜிலேபி, லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, பாதுஷா ஆகிய இனிப்பு பண்டங்கள் மக்களிடையே அதிகமாக சாப்பிடக்கூடிய பண்டங்களாக உள்ளது. இந்த பண்டங்களை தவிர இன்னும் பல வகையான இனிப்பு பண்டங்கள் உள்ளது. இந்த இனிப்பு பண்டங்களை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடும் பொழுது உடலுக்கு பல தீமைகள் கிடைக்கின்றது. அது என்னென்ன என்று பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் உடலுக்கு ஏற்படும் தீமைகள்…

* ஒரே நேரத்தில் அதிக அளவில் இனிப்பு பண்டங்களை சாப்பிடுவதால் நமக்கு உடல் எடை கணிசமாக அதிகரிக்கும்.

* குழந்தூகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஒரே நேரத்தில் அதிக அளவில் இனிப்பு பண்டங்கள் சாப்பிடும் பொழுது பற்களில் சிதைவு ஏற்படுகின்றது.

* ஒரே நேரத்தில் அதிகளவு இனிப்பு பண்டங்கள் சாப்பிடும் பொழுது நமது மூளை டோபோமைனை அதிகளவு வெளியிடுகின்றது.

* அதிகளவு இனிப்பு பண்டங்களை ஒரே நேரத்தில் சாப்பிடும் பொழுது நமக்கு சருமப் பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

* இனிப்பு பண்டங்கள் அதிகளவு சாப்பிடும் பொழுது பசியை அதிகளவு ஏற்படுகின்றது.

* சர்க்கரை சேர்த்த இனிப்பு உணவுகளை அதிகளவு சாப்பிடும் பொழுது உடலில் அழற்சியை ஏற்படுத்துகின்றது.

* மேலும் அதிகளவு இனிப்பு பண்டங்களை சாப்பிடும் பொழுது அதில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.