தினமும் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

தினமும் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்த உலகில் பெரும்பாலான வீடுகளில் 1 கப் டீயுடன் தான் அந்த நாள் தொடங்குகிறார்கள். இவை உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் மூலிகை டீ, க்ரீன் டீ, சுக்கு டீ, தேயிலை டீ என பல வகைகள் இருக்கிறது.

இதில் ஒரு சில டீ உடலுக்கு புத்துணர்வு அளித்தாலும் சில உடலுக்கு கேடு விளைவிக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது. என்ன காரணத்தை சொன்னாலும் நம் மக்களால் டீ குடிக்கும் பழத்தை மட்டும் விடவே முடியாது. எனவே ஒரு நாளைக்கு 1 கப் அளவு டீ அருந்துவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

அதிகப்படியான தேநீர் பருகுவதால் ஏற்படும் தீமைகள்:

**ஒரு நாளைக்கு 2க்கும் மேற்பட்ட டீ அருந்துவது தூக்கமிமைக்கு வழி வகை செய்யும். இதனால் உரிய நேரத்தில் தூக்கம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம்.

**கோடை காலங்களில் அதிகப்படியான டீ குடிப்பது நீரிழப்புக்கு வழி வகுக்கும்.

**டீயில் உள்ள அதிகளவு டானின்கள் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.

**அதிகளவு டீ அருந்துவதால் வயிறு எரிச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் செரிமான கோளாறுக்கும் இவை வழிவகுத்து விடும்.

**அல்சர், குடல் புண் உள்ளிட்ட பாதிப்பு இருக்கும் நபர்கள் டீ குடிப்பதை தவிர்த்தல் நல்லது.