காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

0
72
#image_title

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நம் முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் தான். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை தலைகீழாக மாறி விட்டது.உடலில் பல்வேறு நோய்களை வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டதால் நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது.

செம்பு, பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்த காரணத்தினால் நம் முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இன்று நாம் பிளாஸ்டிக் குடம், பாட்டில்களில் நிரப்பப்பட்ட தண்ணீரை அருந்தி வருகிறோம். இதனால் நம் உடல் எந்த அளவிற்கு பாதிப்பை சந்திக்கும் என்பது பற்றி யாருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது வருந்த தக்க ஒன்று.

இந்நிலையில் நம் பாரம்பரிய உணவு பாத்திரங்களில் ஒன்றான காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் பலன் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க.

காப்பர் பாத்திரத்தின் நன்மைகள்:-

**காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கி கொண்டால் நம் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறும். எலும்பு தொடர்பான பாதிப்புகள் நம்மை நெருங்காது.

**இந்த பாத்திரத்தில் தண்ணீர் அருந்தினால் இருமல், இரைப்பு வராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

**தயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகள் வராமல் தடுக்கிறது. அதேபோல் இதய எரிச்சல், இருமல், சளி போன்றவை குறைய பெரிதும் உதவுகிறது.

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புயை வழங்க இவை பெரிதும் உதவுகிறது.

**வயிற்றில் உண்டாகும் புண்கள், செரிமான பாதிப்புகளை சரி செய்வதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்த இவை உதவுகிறது.

**இவை உடலில் நல்ல இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

**உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் போன்ற பாதிப்புகளை குணமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

**வயிற்றுக்குள் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழிக்க இந்த இவை சிறந்த தீர்வாக இருக்கும்.