பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
கலைஞர் நூற்றாண்டு விழா வருவதை அடுத்து இந்த ஆண்டிற்கான பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதி சிறந்த இதழியருக்கான விருது வழங்க ஆணை வெளியிடப்பட்டு அந்த வகயில் சென்ற ஆண்டு இந்த கலைஞர் எழுதுகோல் விருது வழங்க தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் பெண்மையை போற்றி சிறந்த பெண் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்க இருப்பதாக அரசு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த விருதிற்கு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விண்ணப்பங்கள் 2022 ஆம் ஆண்டில் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட நிலையில் இன்னும் கூடுதல் விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றனர்.
இந்த விருதுடன் சேர்த்து ரூ.5 லட்சம் பணமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றனர். இந்த விருது பெறுவதற்கான சில தகுதிகளாவன:
- விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- தமிழ் இதழியல் துறையில் 10 ஆண்டுகளுக்கு பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.
- இந்த பத்திரிகை பணியை முழுநேரம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
- மேலும் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியவராக இருக்க வேண்டும்.
- இவரின் எழுத்துக்கள் மக்களிடையே ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இந்த விருதினை பெற விருப்பம் உடையவர்கள் தகுதியான விண்ணப்பங்கள், தனது விரிவான சுய விவரங்கள் மற்றும் அவற்றுக்கான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரிக்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.