கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!

Photo of author

By Parthipan K

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!

Parthipan K

Atrocity committed by two teachers in Coimbatore district! A schoolgirl sought help from Child Line!

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவியர் அவரது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் தாவரவிய ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டதாகவும் ஏதேனும் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அதற்கு இரட்டை அர்த்தத்தில் பதில் அளிப்பதாகவும் கூறி மத்திய அமைச்சகத்தின் சைல்ட் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

மேலும் அந்த புகாரின் பேரில் சைல்டு லைன் மற்றும் குழந்தைகள் நல குழுவினர் அந்த  மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள் மேலும் குழந்தைகள் நல குழுவினர் அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் கோவை சித்ரா பகுதி சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகய இருவரையும் கோட்டூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களின் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.