இருபது ரூபாய் கடன் தராததால் கொலை முயற்சி! கோவை மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்!
கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் (30). இவர் அதே பகுதியில் பில்டராக பணியாற்றி வருகிறார். இவரின் உறவு முறையில் சகோதரரான ஏபெல்ராஜ் (35) இவரும் சார்லஸ்வுடன் வெல்டராக பணியாற்றி வருகிறார்.மேலும் ஏபெல்ராஜ் மது போதைக்கு அடிமையானவர்.
இந்நிலையில் நேற்று ஏபெல்ராஜ் மது அருந்துவதற்காக சார்லஸ்யிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். சார்லஸ் யிடம் 500 ரூபாய் நோட்டு மட்டுமே அவரது பாக்கெட்டில் இருந்தது. அந்த 500 ரூபாயை எடுக்க மனம் இல்லாததால் சார்லஸ் தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். சார்லஸ் அவ்வாறு கூறியவுடன் ஏபெல்ராஜ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அந்த வாக்குவாதமானது கைகளப்பாக மாறியது. ஆத்திரமடைந்த ஏபெல்ராஜ் கோபமடைந்து தகாத வார்த்தையால் சார்லஸை திட்டியதுடன் அவர் கையில் வைத்திருந்த அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியை கொண்டு சார்லஸையை தாக்கினார்.
இதில் காயம் அடைந்த சார்லஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சார்லஸ் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏபெல்ராஜை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.