அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Photo of author

By Parthipan K

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Parthipan K

Updated on:

attention-government-bus-drivers-and-conductors-shock-news-published-by-the-department-of-transport

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

அரசு பேருந்துகளில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.அதனை தடுக்க போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது.அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் பயணம் செய்தார்கள்.

அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் செய்தார்கள்.அதில் சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி நடனமாடியபடி சென்றனர்.அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இந்நிலையில் போக்குவரத்து கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தான் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்துநர்கள் பள்ளி ,கல்லூரி மாணவர்களிடம் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய கூடாது என அறிவுறுத்த வேண்டும்.அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால் காவல் மற்றும் அவசர காவல் உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.