தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எங்கே? தேடும் தொண்டர்கள்!

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எங்கே? தேடும் தொண்டர்கள்! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக வேட்பமனு தாக்கலானது இந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்பமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 ஆம் தேதியாகும். மார்ச் 20 ஆம் தேதி வேட்பமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும், வேட்பமனுவை திரும்ப பெற மார்ச் 22 ஆம் தேதி தான் கடைசி நாள் எனவும் … Read more

தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Nitin Gadkari Announcement for Vehicle Sales

தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக இருப்பது வீடும்,கார் வாங்குவதும் தான்.அந்த வகையில் அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் பட்ஜெட் தாக்கலின் போது ஆட்டோமொபைல் துறையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்த வாகன அழிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆட்டோமொபைல் துறையினரிடம் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனையடுத்து வாகன விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.இந்நிலையில் … Read more

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!

AIADMK Planned to Distribute Money for Vote In Madurai

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து தமிழக கட்சிகள் அனைத்தும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிராக போட்டியிடுகின்றன.அதிமுக தரப்பில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன.அதிமுக மற்றும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.அதேபோல திமுக தரப்பில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக மற்றும் மதிமுக கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

வன்னியர் வாக்குகள் போனால் என்ன? கொங்கு மண்டல வாக்குகளை அப்படியே அள்ள திட்டமிடும் திமுக! 

MK Stalin

வன்னியர் வாக்குகள் போனால் என்ன? கொங்கு மண்டல வாக்குகளை அப்படியே அள்ள திட்டமிடும் திமுக! சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி நேர்காணல் நடத்தி வருகிறது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. இவருடன் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர். நேற்று 3 வது நாளாக … Read more

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா?

Seat Sharing Problem in DMK Alliance

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா? சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதிமுக தரப்பில் பாஜக மற்றும் தேமுதிகவுடனான பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே செல்கிறது.இந்நிலையில் சுமூகமாக செல்வதாக கருதிய திமுக கூட்டணியிலும் அதிருப்தி உருவாகியுள்ளது.தொகுதி பங்கீடு விவகாரத்தில் கூட்டணி கட்சிகளை திமுக பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகுவதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் குற்றம்சாற்றியுள்ளார். தேர்தல் … Read more

திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன?

Sasikala Quit from Politics

திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன? சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகிய சசிகலா தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின்  எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி … Read more

தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்

TTV Dhinakaran

தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முக்கிய கட்சியான அதிமுகவை பொறுத்தவரை பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிலும், தேமுதிக … Read more

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும் நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கெளதமி கூறியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டியும், மத்திய அரசு மக்களுக்கு செய்து உள்ள திட்டங்களை எடுத்துக் கூறும் வகையிலும் பாஜக சார்பில் கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நேற்று நடைபெற்றது. அந்தப் பேரணியை நடிகையும், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி தொடங்கி வைத்தார். இந்த … Read more

அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள்

Candidate Selection Issue in AIADMK

அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.ஏறக்குறைய அதிமுகவில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது.பாஜக மற்றும் தேமுதிக கட்சிகளுடனான பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தலைமை தங்களது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வேட்பாளர் தேர்வில் தான் … Read more

நடிகர் விமலின் மனைவி தேர்தலில் போட்டி

நடிகர் விமலின் மனைவி தேர்தலில் போட்டி

களவானி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரபல நடிகர் விமல். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அக்‌ஷயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விமலின் மனைவி அக்‌ஷயா மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் அக்‌ஷயா. விமலும் அவரது மனைவி அக்‌ஷயாவும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். அக்‌ஷயாவுக்கு திமுக சார்பில் … Read more