இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

சமீபத்தில் பாதுகாப்பு கருதி சீனா தொடர்புள்ள 59 மொபைல் ஆப்களை இந்திய அரசு தடை செய்து அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமான டிப்டாப் ஆப்பும் மேலும் இதுபோல சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான சில அப்ளிகேஷன்களும் தடைசெய்யப்பட்டன. இதனையடுத்து டிக் டாக் உள்ளிட்ட சில ஆப்கள் மீண்டும் இந்தியாவிற்கு செயல்பாட்டிற்கு வருமா என்று அதன் பயனாளர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிக் டாக் அப்ளிகேஷன் செயல்பாட்டை இந்தியாவில் கொண்டு வர ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக … Read more

இந்தியாவில் செயல்படுத்தப்படும் தனியார் ரயில்களை இயக்க 23 நிறுவனங்கள் ஆர்வம்

Private Companies are Interested to Run Train

நாடு முழுவதும் உள்ள 12 பெரும் நகரங்களிலிருந்து 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட விண்ணப்ப கூட்டம்  காணொலி காட்சி மூலமாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்தக் காணொளி காட்சி கூட்டத்தில், மேதா, பாரத் போர்ஜ், ஸ்டெர்லைட் பவர், எல்&டி உள்ளிட்ட 23 நிறுவனங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன. இந்த திட்டத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் தனியார் முதலீட்டுடன் … Read more

கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

Corona Positive for Russian President-News4 Tamil Online Tamil News

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதமானது 70 சதத்தை நெருங்குகிறது,அதேபோல இறப்பு விகிதமானது தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது. ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் நாளுக்கு … Read more

தொலைதூரத்தில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் புதிய வசதி! அசத்தும் தேர்தல் ஆணையம்

Election Commission-News4 Tamil Online Tamil News

தேர்தல் நேரத்தில் பணிச் சூழல், கல்வி, மருத்துவ சிகிச்சை அல்லது பிற காரணங்களால் பலர் வெளியூர் செல்வதால் அவர்கள் சார்ந்த தொகுதியில் வாக்களிக்க முடியாமல் போகிறது. இதனை சமாளிக்கும் விதமாக எங்கிருந்தாலும் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இது குறித்து நேற்று தமிழ்நாடு மின்னணு நிர்வாக முகமையுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் இணையவழி பயிலரங்கை நடத்தியுள்ளது. தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் தொழில்நுட்பத்தின் அம்சங்கள்: பிளாக்செயின் தொழில்நுட்ப வாய்ப்புகளை ஆராய்தல்” என்ற தலைப்பில் … Read more

தேர்தலுக்காக திமுகவினர் போட்ட நாடகம்! அம்பலப்படுத்திய ஹச் ராஜா

H Raja Says Next Arrest will Be Dayanidhi Maran-News4 Tamil Online Tamil News

திமுகவின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அங்கு சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு பற்றி கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது தனக்கு இந்தி தெரியாது தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் தெரியும், அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா? என்று … Read more

திமுக கொண்டு வந்த சட்டத்தை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

குடும்ப சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டமானது கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

உலகமே எதிர்பார்த்த மகிழ்ச்சியான அறிவிப்பை சற்று முன் வெளியிட்ட ரஷ்ய அதிபர்

Vladimir Putin-News4 Tamil Online Tamil News

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளையெல்லாம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள சூழலில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய சூழலில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் போட்டி போட்டு சோதனைகளை முடித்து, … Read more

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

MK Stalin

குடும்ப சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டமானது கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

ரயில் போக்குவரத்து தொடங்குமா? ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Indian Railways-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் வெளி மாநிலங்களில் பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.அதே நேரத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தும் வழக்கம் … Read more

காஷ்மீரில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பல்

Anti Social Group Attacked Police in Kashmir

காஷ்மீரில் காவல்துறையினர் மீது சமூக விரோத கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த 18 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திலுள்ள படோட் நகரில் ஆக்கிரமிப்பு காரியங்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.  காவல்துறையினர் வருவதை அறிந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் சிலருடன் இணைந்து கொண்டு கும்பலாக காவல் துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட … Read more