இன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் பிரதமர் !!

இன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் பிரதமர் !!

இன்று நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்ற உள்ளார். கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஆண்டு பொதுக்கூட்டம் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பங்கேற்காமல், மெய்நிகர் முறையில் நடைபெற உள்ளது.மெய்நிகர் முறை என்பது உலக தலைவர்கள் அனைவரும் தங்களது உரைகளை முன்கூட்டியே வீடியோவாக பதிவிட்டு, அதனை அக்கூட்டத்தில் ஒளி பரப்பும் வகையில் நடத்தப்படயிருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சிகள் இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 85,362 பேர் பாதிப்பு: 1,089 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 85,362 பேர் பாதிப்பு: 1,089 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,03,933 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,089 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85,362 … Read more

திமுகவில் சேர்ந்தார் எடப்பாடிபழனிசாமி! கலைகட்டும் திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை! 

திமுகவில் சேர்ந்தார் எடப்பாடிபழனிசாமி! கலைகட்டும் திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை! 

தமிழகத்தில் மிக பிரபலமாக உள்ள இரு கட்சிகள் திமுகவும் அதிமுகவும் தான். இதில் திமுக சார்பில் ‘எல்லாரும் நம்முடன்’ என்ற பெயரில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மொபைல் எண்ணை கொடுத்து OTP பெற்று ஆன்லைன் மூலம் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக முடியும். முதல் மூன்று நாட்களிலேயே ஒரு லட்சத்தையும் தாண்டி உறுப்பினர்கள் சேர்ந்ததால் திமுக பெருமையில் கொக்கரித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு எளிமையாக திமுகவில் உறுப்பினராகலாம் என்பதை அறிந்த மக்கள் பலரும் … Read more

அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா பாதிப்பு!

அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா பாதிப்பு!

பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் … Read more

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும் அதிலிருந்து முற்றிலும் மக்களை பாதுகாக்கவும் கோவாக்சின் எனும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் எனும் நிறுவனத்தின் சார்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாகும். இந்த நிறுவனத்தில் முற்றிலும் பாதுகாப்பான முறையில்    இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும்  பீகார் போன்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனம் இம்மருந்தை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்தியாவின் 12 மாநிலங்களில் சுமார் 375 பேர் மீது … Read more

எஸ். பி. பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நாட்டு தலைவர்கள்!

எஸ். பி. பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நாட்டு தலைவர்கள்!

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கலை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இசை உலகின் சகாப்தமாக திகழ்ந்த எஸ்பிபியின் மறைவினால் அவரது வசீகரமான இனிய குரலை இனி கேட்கும் வாய்ப்பை இந்திய இசை உலகம் இழந்துவிட்டது.  … Read more

அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம் தமிழகத்தில் அமைக்கப்படுமா? பிரதமரின் பதில் என்ன?

அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம் தமிழகத்தில் அமைக்கப்படுமா? பிரதமரின் பதில் என்ன?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம் தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கூறியுள்ளார். இக்கலகத்தை நடப்பு நிதியாண்டிலேயே நிறுவ கோரியும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு சித்தா, யோகா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி மற்றும் உனானி போன்ற மருத்துவ துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது என்றும் சித்த மருத்துவ கழகத்தை தமிழ்நாட்டில் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து … Read more

தமிழகத்தில் விதிமுறைகளுடன் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் விதிமுறைகளுடன் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் இயங்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதியில் துவங்க இருப்பதாகவும் அந்த அனைத்து பள்ளிகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசிடமிருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே விருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. … Read more

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல் !!

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல் !!

விவசாய மசோதாவுக்கு எதிர்த்து இந்திய நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் 3 விவசாய மசோதாக்கள் நிறைவேற்றியதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஞ்சாப் ,ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த விவசாயிகள் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்த … Read more

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றம் :! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றம் :! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

B.E, B.Tech பொறியியல் படிப்பிற்கான மாணவர் தரவரிசை பட்டியல் வருகின்ற 28- ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முதற்கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த கலந்தாய்விற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்கள், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் ஆகும். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள், தங்களது சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் … Read more