ஜப்பானில் உருவான சக்தி வாய்ந்த புயல்

ஜப்பானில் உருவான சக்தி வாய்ந்த புயல்

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளை, கடந்த வாரம் ‘மேசக்‘ என்ற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜப்பான் இன்னும் மீண்டு வராத நிலையில் அங்கு ஹைசென் என்கிற சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயல் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக  சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்தப் புயல் கரையை ஜப்பான் கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது மணிக்கு 160 கிலோ … Read more

இந்தியாவில் புதிதாக 90,802 பேருக்கு கொரோனா: 1,016 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் புதிதாக 90,802 பேருக்கு கொரோனா: 1,016 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,04,613 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,016 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 71,642 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

கோவையில் வீடு இடிந்து விழுந்ததால் இருவர் பலி

கோவையில் வீடு இடிந்து விழுந்ததால் இருவர் பலி

கோவையில் நேற்று இரவு பெய்த கனமழையால் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் பரிதாபமாக இருவர் உயிரிழந்தனர். கோவை செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு, நேற்று இரவு பெய்த மழையினால் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டின் முதல் தளத்தில், கண்ணன் தனது மனைவி ஸ்வேதா, ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் அவரது தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோர் வசித்து வந்தனர். தரை தளத்தில் ஒரு குடும்பம் … Read more

அமெரிக்காவில் அரங்கேறிய மனதை உலுக்கும் சம்பவம்

அமெரிக்காவில் அரங்கேறிய மனதை உலுக்கும் சம்பவம்

அமெரிக்காவில் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரில் இருந்த இப்ரி காம்ஸ் என்கிற 3 வயது பச்சிளம் குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தது. மேலும் கார் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டை … Read more

தென் அமெரிக்க நாட்டில் 6.4 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாட்டில் 6.4 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு … Read more

எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய விஆா்எஸ் திட்டம்!

எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய விஆா்எஸ் திட்டம்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய விருப்ப ஓய்வூதிய திட்டம் – 2020யை (VRS) அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்களை சரியாகவும், நிறைவாகவும் பயன்படுத்திக் கொள்ள இந்த விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க இருக்கிறது. வங்கியின் செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எஸ்பிஐ மேற்கொள்ள இருக்கிறது. வங்கியில் மனித வளத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதும், செலவுகளைக் குறைப்பதும் … Read more

கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சனா இந்த வீரர்?

கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சனா இந்த வீரர்?

இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்டன் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி கூறுகையில் ‘‘டாம் பாண்டனை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை வெளிநாட்டு வீரர்கள் அணியில் வந்து இணையவில்லை. டாம் பாண்டன் நேரடி ஆட்டத்தை காண உற்சாகமாக இருக்கிறோம். பிக் பாஷில் அவரது ஆட்டம் தனித்துவமானதாக இருந்தது. அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல் ஆட்டங்களும் சிறப்பாக இருக்கும். அவர்கள் இளைஞர்களுக்கு … Read more

நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

 டெஸ்ட் போட்டியில் தற்போது ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இளம் வீரர்கள் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மான கில் போன்றோர் உள்ளனர். முரளி விஜயும் உள்ளார். இதனால் ஷிகர் தவானின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையை விடவில்லை என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷிகர் தவான் பேசும்போது நான் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. அதற்காக நான் மீண்டும் அணிக்கு திரும்புவேன் … Read more

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுவதில் சிக்கல்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுவதில் சிக்கல்

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடு துணை பிசியோதெரபிஸ்ட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் இரண்டு சோதனையின்போது நெட்டிவ் முடிவு வந்தது. 3-வது சோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : நம்பர் ஒன் வீரர் திடீர் தகுதி நீக்கம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : நம்பர் ஒன் வீரர் திடீர் தகுதி நீக்கம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆட்டம் தொடங்கியது முதல் ஜோகோவிச் தடுமாற்றத்துடன் ஆடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் வேகமாக அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த நடுவரின் மீது பட்டதில் அவர் காயமடைந்தார். இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார். ஆனாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஒபன் டென்னிஸ் … Read more