பிரதமர் மீதான ஊழல் வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன

பிரதமர் மீதான ஊழல் வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன

1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, 1MDB முதலீட்டு நிதியிலிருந்து  நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு 10 மில்லியன் டாலர் தொகை மாற்றிவிடப்பட்டது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகு நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகப் பல்வேறு நபர்களிடம் 1MDB முதலீட்டு நிதி முறைகேடு தொடர்பில் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு … Read more

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக  தீவிர விசாரணை

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக  தீவிர விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  சிவசங்கரனிடம் நடந்து வரும் விசாரணையில் கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தன்னிடம் ஸ்வப்னா சுரேஷ் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் கடத்தல் கும்பல் என தெரிந்திருந்தால் அவர்களுடனான தொடர்பை துண்டித்திருப்பேன் … Read more

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டது AICTE

AICTE

தமிழகத்தில் 2020-2021-ம் ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜீலை 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வினை செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்,இன்று நாடு முழுவதும் பொறியியல் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் மற்றும் அவற்றில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய அகில இந்திய தொழில்நுட்ப … Read more

மீண்டும் வரும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் மற்றுமொரு பேராபத்து! மத்திய அரசு எச்சரிக்கை.

Another disaster from the invading Locusts! Central Govt warning.

ஆப்பிரிக்க கண்டத்தின் சோமாலியாவின் கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் வெட்டுக்கிளிகளால் மற்றும் ஒரு பேராபத்து காத்திருக்கிறது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் புதியதாக கிழக்கு நோக்கி இந்த மாத இறுதிக்குள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளுக்குள் வெட்டுக்கிளிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்சல்மர், பார்மர், ஜோத்பூர், பிகானேர், நகோர், ஜூன் ஜூனு, ஹனுமான் கர், ஸ்ரீ கங்காநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள 32 இடங்களிலும், … Read more

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுள்ளான்!

Actor Dhanus

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் தனுஷ், நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது, எழுத்து, இயக்கம் என சினிமாத்துறையின் பல்வேறு பரிமாணத்தில் இயங்கி வருகிறார்.இவர், தனக்கென ஒரு இடத்தை எப்பொழுதுமே பெற்றிருப்பார்.  2002ல் வெளியான “துள்ளுவதோ இளமை”  கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் தனுஷின் தனித்தன்மை வாய்ந்த குரலினால், புதுப்பேட்டை படத்தில் அவர் பாடிய, “எங்க ஏரியா உள்ள வராதே” என்ற பாடல் மூலம் பரவலாக கவனம் பெற்றது. அதன்பின் “ஆடுகளம்” படத்திற்காக “தேசிய … Read more

நடிகர் சூர்யா கார்த்திக்கு வந்த சோதனை: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

SURIYA

கொரோனா பொது முடக்கத்தான், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் திரையரங்கு அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகிறது இதேபோன்று ஜோதிகா நடிப்பில் வெளியான “பொன்மகள்வந்தாள்” திரைப்படமும் OTT தளத்தில் வெளியானது. இதற்கு பல்வேறு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்பொழுது சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையரங்கில் திரையிடப்பட்ட இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளனர். இது நீண்ட நாட்களுக்கு முன்பு எழுந்த பிரச்சினை என்றாலும், தற்பொழுது … Read more

பாலிவுட் நடிகர், பணக் கஷ்டத்தால் காய்கறி வியாபாரம் செய்யும் அவலநிலை!

Bollywood Actor

 பாலிவுட் நடிகரான கார்த்திகா சகு, ஒடிசா மாநிலத்தில் கரக்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் உள்ளிட்ட சில நடிகர்களுக்கும், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் பாடிகார்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து  பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் “சூரியவன்ஷி” என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.   கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்பட்ட பணக்கஷ்டம் காரணமாக, தற்பொழுது அவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான், அக்ஷய்குமார் … Read more

கும்பலாக வீட்டின் மொட்டை மாடியில் சூதாடிய பிரபல நடிகர் கைது!

Actor shaam

12B, ஏய் ரொம்ப அழகா இருக்கே!, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஷாம்.இவர் தற்பொழுது கொரோனா காலகட்டத்தில் எப்பொழுதுமே வீட்டிலே முடங்கி உள்ளார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க கூட்டம் கூடினாலோ, வெளியே சுற்றினாலும் சென்னை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில்,நடிகர் ஷாம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் கும்பலைக் கூட்டி பணம் வைத்து சூதாடிய விளையாடி உள்ளார். இந்த தகவலை … Read more

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!

GROUB4

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களுக்கான துறையைத் தேர்வு செய்துள்ளனர். அப்படி நெடுஞ்சாலைத் துறையை 105 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்துள்ளனர், எனவே நெடுஞ்சாலைத் துறையில் 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப்பணி  தெரிவு பணி  ஆணைகளை 27.07.2020 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கியுள்ளார்.  மீதமுள்ள துறையை தேர்வு செய்தவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் … Read more

கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காண நாய்களுக்குப் பயிற்சி

கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காண நாய்களுக்குப் பயிற்சி

சிலியின் காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கு, மனிதர்களிடையே கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காணப் பயிற்சியளிக்கப்படுகிறது. பேரங்காடிகள், விமான நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகிய பொது இடங்களை மீண்டும் சுமூகமாகத் திறப்பதில் அந்த மோப்ப நாய்கள் பெரும்பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளை வாசனையின் மூலம் அடையாளம் காணத் தற்போது, 4 நாய்க்குட்டிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு முகர்வதன் மூலம் நாய்களால் கொரோனா கிருமித்தொற்றை அடையாளம் காண முடியும் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. இருப்பினும், முன்னர், புற்றுநோய், … Read more