ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா

ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று மட்டும் அங்கு 549 பேருக்கு புதிதாகக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் மெல்பர்ன் நகரில் முடக்கம் நடப்பிலிருந்தாலும் நோய்ப்பரவல் குறைந்ததாகத் தெரியவில்லை. மெல்பர்னில் இரண்டாம் கட்ட கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். கடந்த மூன்று வாரமாக ஆஸ்திரேலியாவில் கிருமிப்பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாள்களில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் அடையாளம் காணப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் … Read more

சீனாவிலிருந்து வரும் மாணவர்களைக் குறிவைத்து கடத்தல் மோசடி

சீனாவிலிருந்து வரும் மாணவர்களைக் குறிவைத்து கடத்தல் மோசடி

ஆஸ்திரேலியாவில் மோசடிக்காரர்கள் சீனாவிலிருந்து வரும் மாணவர்களைக் குறிவைத்து கடத்தல் மோசடியில் சிக்கவைக்கின்றனர். அதில் சிக்கும் மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பெருமளவில் பிணைத்தொகை அளிக்கவேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளனர். பல சம்பவங்களில் மிரட்டப்பட்ட மாணவர்கள் தாங்கள் கடத்தப்பட்டதைப் போன்று போலியாக ஒளிப்பதிவுசெய்து சீனாவிலுள்ள குடும்பத்தினருக்கு அனுப்பிப் பணம்பெறவேண்டிக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு 8 சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. அவற்றில் ஒன்றில் மீட்புத் தொகையாக சுமார் 2 மில்லியன் டாலர் அளிக்கப்பட்டது. பொதுவாக அந்த மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி … Read more

ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது

ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது

2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த, கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் 2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த இதற்கு முன்னர் விருப்பம் தெரிவித்துள்ளன. வட-தென் கொரியாக்கள் இணைந்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கலாம் என்ற ஊகமும் நிலவுகிறது.   கத்தார், 2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தும் போட்டியில் பங்கேற்று, இரண்டு முறையும் அதன் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதில் தனக்கு நல்ல அனுபவமும் … Read more

பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட தோக்கியோ விளையாட்டரங்குகள்

பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட தோக்கியோ விளையாட்டரங்குகள்

தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட விளையாட்டரங்குகள் தற்போது பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. அந்த அரங்குகளில் வீரர்களும் பயிற்சியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களை அடுத்த மாத மத்தியில் திறந்துவிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய்ப்பரவல் நிலைமையைப் பொறுத்துத்தான் விளையாட்டு அரங்குகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தோக்கியோ திட்டமிட்டிருந்தது. கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 10 … Read more

லட்சக்கணக்கில் மோசடி செய்த அழகி

லட்சக்கணக்கில் மோசடி செய்த அழகி

ஆந்திரப்  பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர், திருமண தகவல் மேட்ரிமோனி இணைய தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஐதராபாத்தில் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.விடுமுறை முடிந்ததும், சொப்னாவை, ஆஞ்சநேயலு டென்மார்க்கிற்கு அழைத்துள்ளார். ஆனால் சொப்னாவோ, எனக்கு வேலை தான் முக்கியம் என்று கூறி, டென்மார்க் செல்ல மறுத்து, ஹைதரபாத்திலே தங்கியுள்ளார். அதன் பின் … Read more

பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி.

பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி.

பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லம், அவருக்குப்பின் பா.ஜனதா தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியது. இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற இருக்கும் பா.ஜனதா எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்து உள்ளார். அவரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதில் அளித்து பிரியங்கா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ள  எம்.பி “புற்றுநோய்க்கான … Read more

நான்காவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

நான்காவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க 98 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். இன்றைய கடைசி நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு … Read more

உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி. அறிவிப்பு

உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி. அறிவிப்பு

2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.  உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் … Read more

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் சவுதம்டனில் முறையே வருகிற 30-ந் தேதி, ஆகஸ்டு 1 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் … Read more

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் வீரியம் அதிகரித்து வருகிறது. இதனால் இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.  வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன.  இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது. தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை … Read more