பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாட பிள்ளையாராக மாறி கோரிக்கை விடுத்த மக்கள்?

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்ததுள்ளது.நோய் பரவுதலின் வீரியத்தை தடுக்கும் வகையில் அனைத்து மதம் சார்ந்த விழாக்களும் ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 24ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் நிலையில்,மதுரை மாவட்ட மக்கள்,விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கொரோனாவை விரட்ட யாகம் வளர்க்க அனுமதி கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புள்ளையார் வேஷம் போட்டுக்கொண்டு மனு அளிக்க சென்றனர்.பிள்ளையார் வேடத்தில் வந்த அவர்களை கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

உலகின் பணக்காரன் முதல் ஏழை வரை மனிதர்களாய் பிறந்தவர் அனைவரும் பாடுபடுவது அந்த ஒரு ஜான் வயிற்று உணவுக்கு தான்.ஆனால் தற்போது இருக்கும் சூழலில் நாம் எதுக்காக சம்பாதிக்கிறோம் என்பதனை மறந்து விடுகின்றோம்.ஏனெனில் நாம் முறையாக சாப்பிடுவதையே விட்டு விட்டோம் என்றே கூறலாம்.எத்தனை பேருக்கு தெரியும் நாம் உட்கார்ந்து சாப்பிடும் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்று?வாங்க அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 1.கிழக்கு திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் நல்ல ஞானம் … Read more

சற்று முன் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு?

1985 ஜூன் முதல் 1986 மார்ச் வரை மாநில முதல்வராக இருந்த மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் – க்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.89 வயதாகும் அவர் தற்போது உயிரிழந்து விட்டதாக … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு?

கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.பின்பு கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு காலாண்டு அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேட்டில் மதிப்பெண் அடிப்படையில் பொது தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் … Read more

மக்களே தவற விட்டுவிடாதீர்கள்?இன்று முதல் புதிய திட்டம் வினியோகம்?

கொரானாத் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நியாயவிலை கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் டோக்கன் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக் கவசங்கள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த வாரம் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அரிசியை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களும் விலையுடன் டோக்கன் முறையில் வழங்கப்படும் என்றும்,இதற்கான டோக்கன் ஆகஸ்ட் 1ம் தேதி … Read more

பணியின் போது விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை செலவை அரசே ஏற்கும்:!! முதல்வர் பழனிசாமி அசத்தல்!

நெல்லை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளருக்கு மருத்துவமனை சிகிச்சை செலவு முழுவதும் அரசு ஏற்றுக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவிப்பு. நெல்லை மாவட்டம் கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் சுய உதவி குழுவின் மூலமாக சென்னை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட நுண் உரங்களை தயாரிப்பில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் பணிசெய்து வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக அவர் வேலை செய்யும் பொழுது இயந்திரத்தில் கை சிக்கி கை முற்றிலும் சிதைந்து விட்டது. … Read more

ஆன்லைனில் அதிகம் பொருட்களை வாங்குபவரா நீங்க?மக்களே உஷார்! கொள்ளை கும்பல் உலா?

ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மோகம் முந்தைய கால கட்டங்களை விட தற்போது பலமடங்கு அதிகரித்து உள்ளது.இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கொள்ளைக் கும்பல் உறுதி செய்யப்பட்ட நிறுவனங்களை போன்றே லோகோவை வைத்துக்கொண்டு மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றது.உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இந்த சில விஷயங்களை கவனித்து வாங்குங்கள். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும் எதை செய்யக்கூடாது? நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விரும்பினால் … Read more

ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க முடியவில்லையா:?அப்போ இந்த தெய்வ வழிபாட்டை செய்து பாருங்கள் எப்படியாப்பட்ட வேலையும் உங்கள் கைவசம்!!

ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் அவர்களின் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்களின் குடும்பத்திலேயே சந்தோசம் நிலவாது.மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையே வெறுப்பாகிவிடும்.நல்ல வேலை கிடைக்க நிரந்தரமான வேலை கிடைக்க இந்த தெய்வங்களை வழிபடுங்கள்.நல்ல வேலைக்கும்,நிரந்தரமான வேலைக்கும் தெய்வவழிபாடு ஒரு பாலமாக இருக்குமே தவிர தெய்வ வழிபாடு செய்தாலே எல்லாம் கிடைக்கும் என்பது முட்டாள்தனமான எண்ணமாகும். தெய்வத்தை எந்த அளவுக்கு நம்பி வழிபாடு செய்கிறோமோ அதே அளவுக்கு அந்த வேலைக்கு உண்டான முயற்சியையும் … Read more

மருத்துவர்கள் அருகில் செல்லாமலேயே கொரோனச் சிகிச்சை அளிக்கும் புதியக் கருவி?அசத்தும் தமிழ்நாடு!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் இந்த வைரஸ் விட்டுவைப்பதில்லை அவர்கள் எவ்வளவு பாதுகாப்பான உடை அணிந்து சிகிச்சை அளித்தாலும் எப்படியாவது ஒன்று அந்த வைரஸ் அவர்களிடம் பரவி விடுகிறது. இந்த பரவுதலை தடுக்கும் விதத்தில் மருத்துவர்களின் நலன் கருதி சென்னை ஐஐடி-யுடன்சேர்ந்து ஹெலிசன் நிறுவனம் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்து. இந்தக் கருவியை தொற்று பாதித்தவர்களின் விரலில் பொருத்தினால் மட்டுமே போதுமானது இதில் இருக்கும் ரிமோட் சென்சாரின் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் :? சற்று முன் வானிலை மையம் அறிவிப்பு?

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் மேற்கு மலைத் தொடரை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.ஆனால் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் நீலகிரி,தென்காசி,தேனி நெல்லை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு … Read more