மிகுந்த வேதனையுடன் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

மிகுந்த வேதனையுடன் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி பணிகளை கவனித்து வருகிறார். அதாவது சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை வழங்கப்பட்டது, அதன்பிறகு இந்தியா வந்தவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக, கட்சி பணிகளை அவருடைய மனைவியும், மகன்களும் கவனித்து வருகிறார்கள். தேமுதிகவின் பொருளாளராக தன்னை நியமனம் செய்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் … Read more

தொடரும் நோய் தொற்று பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்!

தொடரும் நோய் தொற்று பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்!

நோய் தொற்று காரணமாக, நாட்டிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பலவிதமான விஷயங்கள் தள்ளி போய்க் கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் பலரின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் இருந்து வருகிறது. ஆனாலும் நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று மத்திய, மாநில, அரசுகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று முதல் வழக்குகள் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 27ம் … Read more

தயவுசெய்து இதை நிறைவேற்றுங்கள்! தமிழக அரசுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை!

தயவுசெய்து இதை நிறைவேற்றுங்கள்! தமிழக அரசுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை!

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம்29ம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 14வது உறுதியைப் ஒப்பந்தம் தொடர்பாக அரசு போக்குவரத்து துறை பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இதில் 55ற்கும் அதிகமான தொழிற்சங்கங்களின் சார்பாக பங்கேற்றவர்கள் போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் எல்லோரையும் அரசு ஊழியர்கள் ஆக்கி விடவும், 41 சதவீதம் அகவிலைப்படியை வழங்கி விடவும், ஓய்வு பெற்று இருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஆறு வருடங்களாக நிலுவையில் இருக்கின்ற அகவிலைப்படி வழங்கிடவும் 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நோய் தொற்றாலும், இயற்கையான மரணம் … Read more

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்த சாதனை இது தான்! முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்த சாதனை இது தான்! முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் மழை பெய்ய தொடங்கியது பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வடியாமல் இருக்கிறது பல பகுதிகளில் மாநகராட்சி சார்பாக மின் மோட்டார்கள் வைத்து நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மழையின் காரணமாக, வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.அதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். சென்னையில் மழை … Read more

1-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

1-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கான அனுமதியை மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறது. நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்த சூழ்நிலையில், இந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை தற்போது உயர்த்தி வருகின்றனர். தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான … Read more

தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது 17வது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!

தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது 17வது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 76 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு கண்டறிய பட்டிருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் 10 பெண்கள் உட்பட 34 மாணவர்கள் நோய்த்தொற்று பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதோடு 76 புதிய வகை நோய் தொற்று பரவல் கண்டறியப்பட்டிருக்கிறது. இது சமூக பரவலுக்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது. புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள் … Read more

தலைநகர் சென்னையில் சோர்ந்துபோன புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

தலைநகர் சென்னையில் சோர்ந்துபோன புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

புதிய வகை நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, மெரினா கடற்கரை சாலைகளில் வாகன போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் அனைத்து சாலைகளிலும் அத்தியாவசிய பணிகள் மற்றும் முக்கிய தேவைகளுக்காக செயல்படுபவர்களை தவிர மற்ற வாகனங்களில் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடுமையான கட்டுப்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே பெரிய தடையாக … Read more

பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி! மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்!

பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி! மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் 11 மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இதற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே … Read more

சமூக பரவலாக மாறிய ஒமைக்ரான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சமூக பரவலாக மாறிய ஒமைக்ரான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சென்னை ஈஞ்சம்பாக்கம் நோய்த்தொற்று சிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 32மாணவர்களையும் மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சைதாப்பேட்டையில் இருக்கின்ற அரசு மாதிரி பள்ளியில் மாணவர் ஒருவருக்கு நோய் தோற்ற உறுதி செய்யப்பட்டது, இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த 34 மாணவர்களில் ஒரு மாணவி மட்டும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையிலும், மற்றொரு மாணவி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் … Read more

சென்னையில் அரசு பள்ளி விடுதியில் 34 மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவல்!

சென்னையில் அரசு பள்ளி விடுதியில் 34 மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவல்!

சென்னை சைதாப்பேட்டையில் அரசு மாதிரி பள்ளி ஒன்று நடந்து வருகிறது, இந்த பள்ளியில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். அந்த விதத்தில் சிறப்பு பயிற்சி வகுப்பில் படித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மாணவர் ஒருவர் கிருஸ்துமஸ்க்கு வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் பயிற்சி மையத்திற்கு வருகை தந்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும் பயிற்சி … Read more