மழை வெள்ள பாதிப்பு! டெல்டா மாவட்டங்களில் நாளை பார்வையிடும் ஓபிஎஸ் இபிஎஸ்!

மழை வெள்ள பாதிப்பு! டெல்டா மாவட்டங்களில் நாளை பார்வையிடும் ஓபிஎஸ் இபிஎஸ்!

மழைக்காலம் என்று வந்துவிட்டாலே அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்வதற்கு வேறு விஷயமே தேவைப்படாது என்று ஒரு சிலர் தெரிவித்தாலும், இந்த மழைக் காலங்களில் தான் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரையில் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் ஒரு பொன்னான காலமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மற்ற சமயங்களில் அமைச்சர்களும், முதலமைச்சரும், சாதாரண பொதுமக்களை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சந்திப்பது இல்லை. ஆனால் இந்த மழைக்காலங்களில் மட்டும் எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவாவது சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல … Read more

முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடாதீர்கள்! ஓபிஎஸ் காட்டமான பதில்!

முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடாதீர்கள்! ஓபிஎஸ் காட்டமான பதில்!

கடந்த மூன்று தினங்களாக சென்னையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நிவாரணப் பொருட்களையும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார். இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தியாகராய நகர் சூளைமேடு போன்ற பகுதிகளை ஓபிஎஸ் பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் நீங்களும், எதிர்க்கட்சித் தலைவரும் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்வது விமர்சனத்திற்கு உள்ளாகின்றது என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதற்கு பதில் தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு … Read more

நாட்டில் வெகுவாக குறைந்த தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

நாட்டில் வெகுவாக குறைந்த தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

நாட்டில் கடந்த சில தினங்களாக நோய்த் தொற்று பாதிப்பு உயர்ந்து வந்த சூழ்நிலையில், நேற்று 12516 ஆக குறைந்தது இதில் கேரள மாநிலத்தின் பங்களிப்பு மட்டுமே 7224 என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இன்று மேலும் 16 ஆயிரத்து 250 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 250 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகிவிட்டது. … Read more

உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 கோடியை கடந்தது!

உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 கோடியை கடந்தது!

உலகம் முழுவதும் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் நோய் தொற்று பிறந்த நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 25.21 கோடியைத் தாண்டியிருக்கிறது. இதனடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது 25 கோடியே 31 லட்சத்து 82 … Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன்தினம் வரை கடந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்று புறநகர் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்ற சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, பல மாவட்டங்களில் மழை நீர் வடியாமல் இருக்கின்ற சூழ்நிலையில், மேலும் ஒரு … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த சூழ்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அன்றைய தினம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கிருந்து … Read more

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வீடியோ பதிவுடன் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது நடந்து முடிந்த இருக்கக் கூடிய சூழ்நிலைகள் பல பகுதிகளில் மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை இந்த சூழ்நிலையில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் உள்ளிட்டவற்றில் பங்குபெறும் வார்டு … Read more

டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்ட விவசாயிகளை சந்தித்து மழை சேத விபரங்கள் தொடர்பாகவும், நிவாரண பணிகள் தொடர்பாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கேட்டறிய உள்ளார் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின். குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீரை விரைந்து வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவை பிறப்பித்தார் 6வது தினமாக நேற்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான மருத்துவ முகங்களை அவர் தொடங்கி வைத்தார் அதன் பிறகு செங்கல்பட்டு … Read more

வைகை அணையில் இருந்து இன்று திறக்கப்படும் நீர்! பெரு மகிழ்ச்சியில் மதுரை சுற்றுவட்டார விவசாயிகள்!

வைகை அணையில் இருந்து இன்று திறக்கப்படும் நீர்! பெரு மகிழ்ச்சியில் மதுரை சுற்றுவட்டார விவசாயிகள்!

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் இன்று தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட இருக்கக்கூடிய செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, தாலுகா வைகை அணையில் இருந்து 58 கிராம திட்ட கால்வாய் 300 மில்லியன் கன அடி தண்ணீரை என்று முதல் நாள் ஒன்றுக்கு ஒரு வினாடிக்கு 250 கன அடி வீதம் திறந்துவிட அனுமதி வழங்கி தமிழக அரசு சார்பாக ஆணை … Read more

கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 6வது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!

கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 6வது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் வங்கக்கடலில் ஏற்பட்ட இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றிய கூடிய மாவட்டங்களில் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற அந்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றார். இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கின்ற நிவாரண முகாமில் வண்டலூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசித்து வரும் இருளர் மற்றும் … Read more