இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது!

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்க்கெழும்பு பகுதியை சேர்ந்த விசைப்படகை இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுற்றி வளைத்து பிடித்தது இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது படகு மற்றும் 150 -கிலோ மீன் பறிமுதல் தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட இலங்கை மீனவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது அப்போது … Read more

முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்!

முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்! திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1348வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க வருபவர்கள் ஆரவாரம் இன்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் மாலை அணிவித்து செல்ல வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தினர். மேலும் இருசக்கர வாகனங்களில் … Read more

ஞானவாபி மஸ்ஜித் விவாகரத்தில் அனைத்து உரிமை மனுக்களையும் இணைத்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம்!!

ஞானவாபி மசூதி விவாகாரத்தில் உரிமையியல் மனுக்கள் அனைத்தையும் வாரணாசி மாவட்ட நீதிமன்ற ஒன்றாக இணைத்தது. வாராணசி ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிங்கார கௌரி அம்மன், விநாயகர், ஹனுமன் ஆகியவற்றுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரியும், டெல்லியை ராக்கி சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்த உரிமையியல் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதை எதிர்த்து மசூதி கமிட்டி வாராணசி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த மனுக்கள் … Read more

பாளையங்கோட்டை வ.உ.சி தரைக்கூரை இடிந்து விபத்து- அ.தி.மு.க.வினர் மனு!

பாளையங்கோட்டை வ உ சி மைதான பார்வையாளர் அரங்கு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய கோரி அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையாளர் அறைக்குள் புகுந்து முற்றுகையிட்டு மனு அளித்ததால் பரபரப்பு. பாளையங்கோட்டை பகுதியில் 14.95 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வ உ சி மைதானத்தின் பார்வையாளர் மாடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக நெல்லை … Read more

எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா!!

எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா! கர்நாடக சட்டமன்றத் கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று எடியூரப்பா மகன் விஜயேந்திரா கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். அவர் பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்பாக சட்டமன்ற வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து நட்பு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். சபாநாயகர் தேர்வுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய … Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!! அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54638 விண்ணப்பம். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நேற்று மாலை வரை 301466 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 246295மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54638 விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் … Read more

கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!!

கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது! 2019ம் ஆண்டில் சீனாவில் தொடங்கிய கோவிட்19 தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இன்று வரை உள்ளது. இதற்கு மத்தியில் கோவிட் 19 தொற்றை விட பயங்கரமான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நோய் தொற்று ஏற்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் … Read more

இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி!!

இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று மீண்டும் தோனியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் தோனி … Read more

பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பபு – மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியினர் மனு!!

நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் செலவு செய்தால் தான் பள்ளிக்கு செல்ல முடியும் என்பதால் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் தங்கள் பிரச்சனைகள் … Read more

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி – விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக கூறி விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வருடத்தோடு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை … Read more