அரசு பேருந்திற்கு வழிவிடாமல் சென்று இளைஞர்கள் அட்டகாசம்!

அரசு பேருந்திற்கு வழிவிடாமல் சென்று இளைஞர்கள் அட்டகாசம்!

அரசு பேருந்திற்கு வழிகொடுக்காமல் எட்டு கிலோ மீட்டர் தூரம் இரண்டு பைக்கில் சென்ற ஐந்து இளைஞர்கள் அட்டகாசம்: இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் – பத்தனம்திட்டாவிற்கு செயின் சர்வீஸ் நடத்தும் அரசு பேருந்து நேற்று மதியம் கொல்லத்திலிருந்து பயணிகளுடன் பத்தனம்திட்டாவிற்கு புறப்பட்டது. பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன் இரு பைக்கு களில் 5 இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்கள் பேருந்துக்கு வழிகொடுக்காமல் மெதுவாகவும் சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் … Read more

தி கேரளா ஸ்டோரி- திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

தி கேரளா ஸ்டோரி- திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

தி கேரளா ஸ்டோரி- திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது. கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட மாலை முற்றுகையிட முயன்ற போது எஸ்டிபிஐ கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஹிந்தி மொழியில் இன்று திரையிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் மாலில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் … Read more

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மரங்களை வெட்டியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் வேதனை!

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மரங்களை வெட்டியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் வேதனை!

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விவசாயிகள் வளர்த்த உயர்ஜாதி மரங்களான செம்மரம், தேக்கு போன்ற மரங்களை வெட்டுவதற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அரசு வஞ்சிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை. திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை செல்லக்கூடிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் To மதுரை தேசிய … Read more

ஜிப்மரில் சிகிச்சை கட்டணம் முறையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜிப்மரில் சிகிச்சை கட்டணம் முறையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தனியாருக்கு விற்பனை செய்ய மோடி அரசு திட்டம் என ஜிப்மரில் சிகிச்சைக்கு கட்டணம் முறையை அறிவித்த ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மருத்துவமனை முன்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கு ஏழை எளிய மக்களிடம் கட்டணம் வசூல் செய்யும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் … Read more

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு!! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!!

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு!! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!!

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி! சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மும்பை, டெல்லியில் இருந்து … Read more

ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது!

ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது!

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் பேருந்தில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த பொங்களுரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை சக பயணிகள் அடித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடும் வீடியோ வெளியாகி உள்ளது மேலும் அந்த வாலிபரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஜனா ஷ்விங்க் (20). இவர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த … Read more

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கொரோனா விதிகளை மீறி, மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேட்டை கண்டித்தும், மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் தற்போதைய அமைச்சர்  சிவசங்கருக்கு எதிராக அரியலூரில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த … Read more

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி!! இருவர் கைது!

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி!! இருவர் கைது!

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் இருவர் கைது. மேலும் ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு சங்கமம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதில் நூற்றுக்கணக்கானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்நிலையில் பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் … Read more

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து முடிகண்டநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்ததின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது. ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது என … Read more

மாணவிகளுக்கு பாலில் தொல்லை அளித்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஜாமீன் மனு வாபஸ்!!

மாணவிகளுக்கு பாலில் தொல்லை அளித்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஜாமீன் மனு வாபஸ்!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார், கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ம் … Read more