தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மரங்களை வெட்டியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் வேதனை!

0
168
#image_title

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விவசாயிகள் வளர்த்த உயர்ஜாதி மரங்களான செம்மரம், தேக்கு போன்ற மரங்களை வெட்டுவதற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அரசு வஞ்சிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை.

திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை செல்லக்கூடிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் To மதுரை தேசிய நெடுஞ்சாலை ஜல்லிப்பட்டி பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பளவில் நாவல் பழம், நெல்லிக்காய், முள் சீதாப்பழம் மற்றும் செம்மரங்கள் 9 ஆகியவற்றை பயிரிட்டு வளர்த்து வந்த நிலையில், செம்மரங்கள், தேக்கு, தவிர இடத்திற்கும் பிற மரத்திற்கும் அரசு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் செம்மரத்திற்கு 87 லட்சம் நிவாரணம் கொடுப்பதாக வனத்துறை, வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி சென்றனர்.

தற்போது செம்மரங்கள் 9 க்கு ரூபாய் மூன்று லட்சம் மட்டுமே தருவதாக கூறியுள்ளனர்.இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மரங்களை வெட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இழப்பீடு கிடைக்காமல் மரங்களை வெட்டினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயி ஜெயக்குமார் வேதனை தெரிவித்தார்.

இதே போல் கன்னிவாடி பகுதியில் உள்ள விவசாயி ரிச்சர்ட் மரிய செல்வம் என்பவர் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரம் பயிரிட்டு வளர்த்து வந்த நிலையில் அதற்கும் உரிய இழப்பீடு வழங்காமல் மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதால் தனது குடும்பத்துடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதாக விவசாயி வேதனை தெரிவித்தார்.

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பொழுது நிலம் மற்றும் நிலத்தில் விளையக்கூடிய விளைபொருள்கள் விலை உயர்ந்த மரங்கள் போன்றவற்றை வருட வயதிற்கு தகுந்தாற்போல் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு அதனை கையகப்படுத்தி அதற்குரிய வேலைகளை செய்வது வழக்கமான ஒன்று.

ஆனால் தற்போது விவசாயிகளை வஞ்சித்து இடங்களை சொற்ப பணத்தைகொடுத்து விவசாயி வயிற்றில் அடித்து பிடுங்கும் நிலை வேதனை தருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

author avatar
Savitha