தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை -சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை -சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, … Read more

ராஜஸ்தான் அணியை புரட்டிப்போட்ட மும்பை அணி அபார வெற்றி.!!

ராஜஸ்தான் அணியை புரட்டிப்போட்ட மும்பை அணி அபார வெற்றி.!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா … Read more

தமிழகம் முழுவதும் நாளை கோவிலைத் திறக்க பாஜக போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் நாளை கோவிலைத் திறக்க பாஜக போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நாளை அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் … Read more

இன்றைய (06-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.! யாருக்கு அதிஷ்டம்.!!

இன்றைய (06-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.! யாருக்கு அதிஷ்டம்.!!

இன்றைய (06-10-2021) ராசி பலன்கள் மேஷம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள். ரிஷபம் சம வயதினரின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் … Read more

இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!! டாஸ் வென்ற மும்பை பௌலிங் தேர்வு.!!

இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!! டாஸ் வென்ற மும்பை பௌலிங் தேர்வு.!!

இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பௌலிங் தேர்வு. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 51வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் … Read more

போராட எந்த பிரச்சினையும் இல்லை கோயிலை திறக்க போராட்டம்; பாஜகவை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!!

போராட எந்த பிரச்சினையும் இல்லை கோயிலை திறக்க போராட்டம்; பாஜகவை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!!

போராட எந்த பிரச்சினையும் இல்லாததால் அரசியல் கட்சிகள் கோயிலை திறக்க போராட்டம் நடத்தி வருவதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பாஜகவை நேரடியாக விமர்சித்துள்ளார். வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அவர்கள், கடலூர் மாவட்டம் மருதூரில் 5.10.1823 அன்று பிறந்தார். அவரின் 199வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலாரின் இல்லத்துக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று வள்ளலாரின் திருவுருவ படத்திற்கு மாலை … Read more

திருப்பதிக்கு செல்பவர்கள் கட்டாயமாக இதை செய்திருக்க வேண்டும்.! தேவஸ்தானம் அறிவிப்பு.!!

திருப்பதிக்கு செல்பவர்கள் கட்டாயமாக இதை செய்திருக்க வேண்டும்.! தேவஸ்தானம் அறிவிப்பு.!!

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனோ நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக உடன் கொண்டு வர வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான சான்றிதழ் எதுவும் கொண்டுவராத பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். திருப்பதி செல்ல இலவச தரிசன டோக்கன், தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்தி ருக்கும் பக்தர்கள் உட்பட … Read more

அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்.!- அரசு அதிரடி அறிவிப்பு.!!

அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்.!- அரசு அதிரடி அறிவிப்பு.!!

அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அம்மாநில அரசு அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி … Read more

வெறும் ஆறே மணி நேரத்தில்.. 52,000 கோடி இழந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்.!!

வெறும் ஆறே மணி நேரத்தில்.. 52,000 கோடி இழந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்.!!

நேற்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவை சுமார் ஆறு மணி நேரம் முடங்கியதால் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்ததுடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவைகள் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. அதன் காரணமாக, கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.சுமார் 6 மணி நேர முயற்சிக்குப் பின்னர் … Read more

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை தடுக்க விதிகள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் ,பேனர்கள் வைத்தபோது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய … Read more