கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

Photo of author

By Savitha

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

Savitha

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை புனித யாத்திரை சென்றது.

அந்த குழுவில் கிருஷ்ணகிரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனான முனீஸ்வரன் மற்றும் அவனது தாத்தா, பாட்டி, மாமா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

சபரிமலை செல்லும் வழியில் அதிர பள்ளிக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர். அப்போது அவர்களில் ஒருவராக இறங்கிய முனீஸ்வரன் கால் தவறி ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென  நீரில் மூழ்க தொடங்கியுள்ளார்.

உடனே கூட வந்து இருந்த  ஐயப்ப பக்தர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு  நீரில் மூழ்கிய முனீஸ்வரனை  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே,  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற முனீஸ்வரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக அதிரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் சடலம் நாளை உடல்கூர் ஆய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.