30 வயதில் முதுகு வலி ஏற்படுகின்றதா! இதை குணப்படுத்த சில டிப்ஸ் இதோ!!
முதுகு வலி என்பது வயதானவர்களுக்கு ஏற்படும். ஆனால் முதுகு வலி தற்போதைய காலத்தில் அனைவருக்கும் ஏற்படுகின்ற ஒன்றாக தற்பொழுது மாறி வருகின்றது. அதிகமாக 30 வயதில் இருக்கும் நபர்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள்.
இதில் ஐடி துறையில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் முதுகு வலி என்பது அதிகம் இருக்கும். இந்த முதுகு வலியை சரிசெய்ய உதவும் சில டிப்ஸ் பற்றி அடுத்து பார்க்கலாம்.
30 வயதில் ஏற்படும் முதுகு வலியை குணப்படுத்தும் சில டிப்ஸ்…
* முதுகு வலியை குணப்படுத்த மென்மையான மெத்தைகளில் படுப்பதை தவிர்த்து கடினமான மெத்தைகளில் படுக்கலாம். படுக்கையில் இருந்து வேகவேகமாக எழுந்திருக்காமல் படுக்கையின் ஓரத்திற்கு வந்து பின்னர் கால்களை தரையில் ஊன்றி எழுந்திருக்க வேண்டும்.
* அதிக சாலைகள் கொண்ட பைகளை ஒரே தோளில் சுமந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
* வாகனங்கள் மூலமாக அகதிக தூரம் செல்லும் பொழுது தொடர்ந்து அமர்ந்து செல்லாமல் சிறிது இடைவெளி விட்டு பின் பயணத்தை தொடரலாம்.
* கால்களை நேராக வைத்த நிலையில் எடை அதிகம் உள்ள பொருட்களை தூக்கக் கூடாது. எடை அதிகம் உள்ள பெரும்பாலான தூக்கும் பொழுது முழங்கால்களை சற்று மடக்கி பொருட்களை உடலின் அருகே இருக்குமாறு வைக்க வேண்டும்.
* கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் முதுகுப் பகுதி வலிமை பெரும். எலும்புகள் வலிமை பெறுகின்றது.
* முதுகு எலும்புகளை பலப்படுத்த கால்சியம் நிறைந்த ஈரல், மீன், பாலாடை, அத்தி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம்.
* உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் உள்ள கீரை வகைகளையும் சாப்பிட வேண்டும். அந்த வகையில் வெந்தயம் கீரை, முள்ளங்கி கீரை, பால் கீரை, வெங்காயத் தாள், முருங்கை இவற்றை உட்கொள்வதால் இதில் உள்ள சத்துக்கள் முதுகு பகுதியை பலப்படுத்துகின்றது.