கடுமையான வாயுத் தொல்லையா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் பலனைக் காண முடியும்!!

Photo of author

By Divya

கடுமையான வாயுத் தொல்லையா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் பலனைக் காண முடியும்!!

பெரும்பாலான மக்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:-

*செரிமானக் கோளாறு

*வேலை பளு

*மன அழுத்தம்

*மலச்சிக்கல்

*முறையற்ற உணவு முறை

வாயுத் தொல்லையை சரி செய்வது எப்படி?

அதிக மருத்தவ குணம் கொண்ட ஓமம் வாயுத் தொல்லைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

ஓமத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்:-

*பாஸ்பரஸ்

*கால்சியம்

*கரோட்டின்

*இரும்புச்சத்து

*தயாமின்

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 1 தேக்கரண்டி

*மிளகு – 6

*வெல்லம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி ஓமம் மற்றும் 6மிளகு சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து அதை நன்கு ஆறவிடவும். அடுத்து ஒரு உரல் எடுத்து அதில் ஆறவைத்துள்ள பொருட்களை போட்டு இடித்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் இடித்து வைத்துள்ள ஓமம், மிளகு துளை சேர்த்து கொதிக்க விடவும். இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தோம் என்றால் உடலில் உள்ள மொத்த பிரச்சனைகளும் குணமாகி விடும்.

மற்றொரு தீர்வு:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1 தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான தீயில் கருகி விடாமல் வறுத்து அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு உரலில் போட்டு இடித்து கொள்ளவும். இந்த ஓமம், சீரகத் தூளை மோரில் கலந்து பருகினால் வாயுத் தொல்லை, வயிறு மந்தம், உடல் சூடு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.