நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

Photo of author

By CineDesk

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள்.

இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.

இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் பத்தொன்பதாம் தேதி சுற்றுலாப்பயணிகள் இதற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

எனவே, இந்த நீர்வீழ்ச்சியின் நுழைவு வாயிலை மூடி வனத்துறையினர் இதற்கு தீவிர பாதுகாப்பு கொடுத்து கண்காணித்து வந்தனர். பிறகு மழையால் நீர்வரத்து அதிகரித்து கடந்த ஜூலை 12  ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வால்பாறை வனப்பகுதி மற்றும் அங்குள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் நுழைவு வாயிலை மூடி வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த திடீர் அறிவிப்பால் நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆவலாக வந்த சசுற்றுலா பயணிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மீண்டும் நீர்வரத்து சரியாக வரும்வரை இந்த தடை நீடிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.