நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!!
இன்றைய காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண நோயாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-
*உடலில் இன்சுலின் குறைபாடு
*பரம்பரை தன்மை
*அதிகளவு இனிப்பு சாப்பிடுதல்
*உடல் பருமன்
*மன அழுத்தம்
*அடிக்கடி கர்ப்பம் அடைதல்
*உயர் இரத்த அழுத்தம்
*இரத்த மிகை கொழுப்பு
*சினைப்பை நீர்க்கட்டி
*சோம்பலான வாழ்க்கை முறை
சர்க்கரை நோய் அறிகுறிகள்:-
*அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல்
*அதிகப்படியான உடல் சோர்வு
*தண்ணீர் தாகம் அதிகரித்தல்
*கண் பார்வை மங்குதல்
*அதிகப்படியான தலைவலி
இந்த சர்க்கரை நோய் பாதிப்பை சரி செய்ய இயற்கை வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:-
*கொய்யா இலை
*தண்ணீர்
செய்முறை:-
முதலில் கொய்யா இலையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள கொய்யா இலைகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும். கொய்யா இலை சாறு கொதிக்கும் நீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து 2 நிமிடம் ஆற விட்டு வடிகட்டி பருகவும். ஒவ்வொரு நாளும் இதை செய்து பருகி வந்தால் விரைவில் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுக்குள் வரும்.