அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

Photo of author

By Divya

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

Divya

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

நவீன காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.

இதை சரி செய்ய சீரகம், ஓமம், மிளகு உள்ளிட்ட பொருட்களை வறுத்து பொடித்து சூடு நீரில் கலந்து பருவகுவது நல்லது. இந்த சூரணம் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*ஓமம்

*மிளகு

*சோம்பு

*சுக்கு

*இந்துப்பு

*நெல்லிப் பொடி

செய்முறை…

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 4 தேக்கரண்டி சீரகம், 3 தேக்கரண்டி ஓமம், 3 தேக்கரண்டி கரு மிளகு, 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு ஈரமில்லா மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து இதில் 1 தேக்கரண்டி இந்துப்பு, 1 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி, 1 தேக்கரண்டி சுக்குப் பொடி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டு பின்னர் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தயார் செய்து வைத்துள்ள சூரணத்தை சேர்த்து கலக்கி பருகவும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் இடுப்பு வலி பிரச்சனை விரைவில் சரியாகிவிடும்.