நம்புங்க.. தினமும் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

Photo of author

By Divya

நம்புங்க.. தினமும் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாகவோ, மலம் வழியாகவோ வெளியேற்றி விட வேண்டும். ஆனால் சிறுநீர்கப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம், போன்ற தாது உப்புகள் தேங்கினால் அவை சிறுநீரக கற்களாக மாற அதிக இருக்கிறது.

அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமை, நாள்பட்ட வயிற்றுப் போக்கு, உயர் இரத்த சர்க்கரை உள்ளிட்டவைகளும் சிறு நீரக கல் உருவாக காரணங்களாக சொல்லப்படுகிறது.

விலா எலும்புகளுக்குக் கீழே வலி ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது வலி உணர்வு, இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிற சிறுநீர் உள்ளிட்டவைகள் சிறுநீரக கல் அறிகுறிகள் ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர்

*எலுமிச்சை சாறு

*உப்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இதை பருகவும். இதை காலை நேரத்தில் பருகுவது நல்லது. இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறி விடும். சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கிறது. அதுமட்டும் இன்றி இந்த பானம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.