மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

0
97
#image_title

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது.

முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை

தேவையான பொருட்கள்:-

* முடக்கத்தான் கீரை – 1 கப்

* சீரகம் – 1 தேக்கரண்டி

* மிளகு – 1/2 தேக்கரண்டி

* சின்ன வெங்காயம் – 4

* கல் உப்பு – தேவைக்கேற்ப

* பூண்டு – 2 பற்கள்

* சமயல் எண்ணெய் – 1 தேக்கரண்டி

* தோசை மாவு – 4 குழி கரண்டி

செய்முறை:-

1. அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மிளகு,சீரகம்,பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

2.அடுப்பை அணைத்து விட்டு முடக்கத்தான் இலைகளை சேர்க்க வேண்டும்.அந்த கடாய் சூட்டில் அவற்றை வதக்கினாலே போதும்.

3.இவை ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி மைய்ய அரைத்து கொள்ள வேண்டும்.

4.இதனை ஒரு பவுலில் சேர்த்து அதில் தேவைக்கேற்ப உப்பு கலந்து 3 முதல் 4 குழிக்கரண்டி மாவு சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

5.அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடான பிறகு அதில் தயார் செய்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை மாவை ஊற்றி தோசை வார்த்து கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த தோசையை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தோம் என்றால் தீராத மூட்டு வலிக்கு கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Previous articleஉடல் எடையை குறைக்கும் வரகு நெல்லிக்காய் சாதம் – சுவையாக செய்வது எப்படி?
Next articleசூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!