இதயத்தில் ஏற்படும் ரத்தகுழாய் அடைப்பு! இதை குணப்படுத்தும் இரண்டு மருத்துவ முறைகள் இதோ!!
நம்முடைய இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய உதவும் இரண்டு வகையான மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
நம்முடைய இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புக்கு காரணம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் தான். இந்த கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் கலந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றது. இந்த ரத்தக் குழாய் அடைப்பு என்பது இதய நோயை ஏற்படுத்துகின்றது.
உடலுக்கு கொழுப்புச்சத்து என்பது தேவை என்றாலும் அதிக கொழுப்புச்சத்து அதிக ஆபத்தை ஏற்படுத்தின்றது. இந்த ரத்தக் குழாய் அடைப்பை சரி செய்ய உதவும் இரண்டு மருத்துவ முறைகளும் அதற்கு தேவையான பொருட்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரத்தக் குழாய் அடைப்பை சரிசெய்யும் மருத்துவ முறைகள்…
வழிமுறை 1..
தேவையான பொருட்கள்…
* ஏலாதி சூரணம்
* குங்கிலிய பற்பம்
செய்முறை…
ஏலாதி சூரணத்தை குங்கிலிய பற்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் வெந்நீர் அதாவது சூடான தண்ணீர் தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஏலாதி சூரணம் மற்றும் குங்கிலிய பற்பம் கலந்த கலவையை வெந்நீரில் கலந்து காலை மற்றும் இரவு என்று இரண்டு வேலைகள் குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவும்.
வழிமுறை இரண்டு…
தேவையான பொருட்கள்…
* இலவங்கப்பட்டை
* ஏலம்
* வெந்தயம்
* செம்பருத்தி பூ
செய்முறை…
இலவங்கப்பட்டை, ஏலம், வெந்தயம், செம்பருத்தி பூ அனைத்தையும் உலர்த்தி பொடி செய்து கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து சிறிய பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த தண்ணீரில் அரைத்து வைத்து பொடியில் சிறிதளவு எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதை குடித்து வந்தாலும் இதயத்தில் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பை சரி செய்யும்.