Home Blog Page 108

தொடரும் அ.தி.மு.க பிரிவினை.. தி.மு.க-வில் இணைந்த முக்கிய புள்ளி!

0

ADMK DMK: அனைவரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில், அனைத்து முன்னணி கட்சிகளிலும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளும், வெற்றி பெறுவதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக தற்போது செயலிழந்து உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைவர்களின் நீக்கமே என்று அதிமுக உள்வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர்களின் பிரிவினையால் பலவீனமடைந்த அதிமுக, இப்போது மேலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதிமுக-வில் இருந்து 5000 ஆதரவாளர்களுடன் ஒரு முக்கிய புள்ளி திமுக-வில் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு, பெரிய அதிர்ச்சியாக உள்ளதோடு, தமிழ்நாட்டு அரசியலிலும் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. திமுக-வுக்கு இது ஒரு பெரிய பலமாகும். ஏற்கனவே கூட்டணியில் பலமாக இருக்கும் திமுக, மக்கள் மத்தியிலும் வலுவான கட்சியாக மாற வாய்ப்பு உள்ளது.

ஓ.பி.எஸ்-இன் ஆதரவாளர்கள் 100 பேர் தற்போது இ.பி.எஸ் தலைமையில் இணைந்தாலும், அதனை விட பலமடங்கு ஆதரவாளர்கள் அதிமுக-வில் இருந்து மாறி திமுக-வில் இணைவது இ.பி.எஸ்-க்கு மிக பெரிய சவாலாக அமையும். இதனால் அதிமுக மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது.

மீண்டும் தலை தூக்கும் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் தலைமைக்கு நெருங்கும் ஆபத்து!!

0

ADMK: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. குறிப்பாக இ.பி.ஸ் பதவி ஏற்ற பிறகு சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னிர்செல்வம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்ததாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனை ஒரு வாரத்திற்கு முன் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி மேலும் அதிர்ச்சியை கூட்டினார்.

ஆனால் பலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தற்போது புதிய திருப்பமாக ஒ.பி.எஸ்-யின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இ.பி.எஸ் தலைமையில் இணைந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் , செங்கோட்டையன் கட்சிப் பொறுப்பிலிருந்தவரை தங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

இதனால்தான் ஓ.பி.எஸ் தலைமைக்கு மாறினோம். தற்போது அதிமுக பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டதால் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நீக்கப்பட்டபின் அதிமுக-வில் ஏற்பட்ட மாற்றம் ஓ.பி.எஸ் அணியினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்துள்ளது.

இது இ.பி.எஸ் தலைமையிலான வலிமையை மீண்டும் கூட்டியுள்ளதாக அதிமுக-வினர் கூறுகின்றனர். இந்த சேர்க்கை அதிமுக-வில் பல மாதங்களாக இருந்த வந்த உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய சூறாவளி.. திணறும் அ.தி.மு.க _ தி.மு.க! குஷியில் த.வெ.க

0

T.V.K: தமிழக அரசியலில் தற்போது புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.
திமுக -அதிமுக என்ற மிகப்பெரும் திராவிட கட்சிகள் நீண்ட காலமாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், தற்போது மூன்றாவது வலுவான சக்தியாக நடிகர்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே அதிமுக 5 அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் அவர்கள் தவெக-வுடன் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி தொடர்பாக டி.டி.வி தினகரன், செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் , ஆகியோரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்பொழுது அந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.டி.வி தினகரனிடம் இது குறித்து கேட்டபோது கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை ஆனால் அதற்கான ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று கூறி இருந்தார். இரண்டாவதாக ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறினார்.

செங்கோட்டையன் எடப்பாடிக்கு விதித்திருந்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படவில்லை எனில், ஒத்த கருத்துள்ள அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். அதனால் இவர்கள் மூவரும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் அது, ஆளும் கட்சியான திமுக-விற்கும், எதிர்கட்சியான அதிமுக-விற்கும் சவாலாக இருக்கும் எனவும், அதேசமயம் தவெக-விற்கு சாதகமாகவும் அமையும் என்ற கருத்து நிலவுகிறது. இந்த கூட்டணி வரவிருக்கும் தேர்தலில், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைமுகமாக தாக்கிய முதலமைச்சர்.. த.வெ.க-வை குறிவைத்த ஸ்டாலின் !

0

TVK DMK: நடிகர் விஜய் அரசியலில் குதித்ததிலிருந்தே களத்திற்கு வராமல், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துகளையும், விமர்சனங்களையும் கூறி வந்தார். இதனால் அவர் work from home என்ற விமர்சனத்துக்கும் ஆளாக்கப்பட்டார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்களை சந்திக்க மாநாட்டையும், பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

தவெக சார்பில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளையும், திருச்சியில் இன்று காலை நடைபெற்ற பிரச்சாரத்தையும் குறிவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் “கொள்கையில்லாத கூட்டம் என்றும், புதிய எதிரிகள்” என்றும் தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக சாடியுள்ளார். தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் முதலமைச்சரை “அங்கிள்” என்றும், தனது அரசியல் எதிரி திமுக தான் என்றும் நேரடியாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் மறைமுகமாக பேசி இருப்பது அவருக்கு விஜய்யின் மேல் இருக்கும் பயத்தை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. கரூரில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் விழா தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் மற்றக் கூட்டத்தை போல் இல்லாமல், நம் கூட்டம் முடிந்து நாம் திரும்பும் போது கொள்கை பட்டாளமாக தான் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்று திருச்சியில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் நிறைய அத்துமீறல் நடந்ததை சுட்டிக்காட்டும் விதமாக இது உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் விஜய் ஸ்டாலின்-யை கடுமையான முறையில் விமர்சித்த போதும் கூட அவர் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாதது, தவெக-வின் மேல் இருக்கும் பயத்தை கட்டுவதாக பலரும் கூறி வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் மறைமுக பேச்சு உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

H3N2 எச்சரிக்கை: சாதாரண காய்ச்சலைவிட ஆபத்தானது – அறிகுறிகள் & பாதுகாப்பு வழிகள்

0

டெல்லி: கடந்த வாரத்தில் டெல்லியில் காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மருத்துவர்கள் கூறுவதுபடி, தற்போது பதிவாகும் நோய்களில் சுமார் 90% இன்ஃப்ளூயன்சா தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் பங்காஜ் சிங் கூறியதாவது:

“H3N2 (இன்ஃப்ளூயன்சா A இன் துணை வகை) சம்பவங்களை சமாளிக்க டெல்லி மருத்துவமனைகள் முழுமையாக தயாராக உள்ளன.”

H3N2 என்றால் என்ன?

  • இது இன்ஃப்ளூயன்சா A வைரஸின் துணை வகை. உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய பருவகால காய்ச்சல்களுக்கு இதையே காரணமாகக் குறிப்பிடுகிறது.

  • பாதிக்கப்பட்டவர் இருமல், தும்மல், பேசுதல் ஆகியவற்றின் மூலம் வெளியேறும் சுவாச துளிகள் வழியாக மற்றவர்களுக்கு எளிதில் பரவும்.

  • மேலும், கதவுக் கைத்தூண் போன்ற மேற்பரப்புகளில் வைரஸ் ஒட்டியிருந்தாலும் அது தொடுவோருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்

H3N2 வைரஸ் தாக்கம் ஏற்பட்ட 1–4 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். சில சமயங்களில் நிமோனியா போன்ற சிக்கல்களாகவும் மாறக்கூடும்.

முக்கிய அறிகுறிகள்:

  • திடீர் அதிக காய்ச்சல்

  • தொடர்ச்சியான இருமல், தொண்டை வலி

  • மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு

  • உடல் வலி, தசை வலி

  • தலைவலி மற்றும் பல நாட்கள் நீடிக்கும் சோர்வு

5 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், குளிர், தொண்டை வலி நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சர் கங்காராம் மருத்துவமனை மருத்துவர் அம்புஜ் கார்க் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மருத்துவர் கார்க் பரிந்துரைகள்:

  • பொது இடங்களில் முகக்கவசம் அணியவும்

  • சத்தான உணவு, சூடான தண்ணீர், வெந்நீர் பால் பருகவும்

  • தும்மும், இருமும் போது வாய், மூக்கு மூடிக்கொள்ளவும்

  • அடிக்கடி கைகள் சோப்பு, நீர் கொண்டு கழுவவும்

டெல்லியில் நிலைமை

  • H3N2 காய்ச்சலுக்காக மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பங்காஜ் சிங் உறுதியளித்துள்ளார்.

  • மருத்துவமனைகள் முழுமையாக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

H3N2 வைரஸ், சாதாரண பருவகால காய்ச்சலைவிட நீண்ட நாட்கள் நீடிக்கும். உடனடியாக கண்டறிந்து, பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் பெரும் ஆபத்து ஏற்படாது.

திணறும் திமுக!! அரசியல் களத்திலும் ஹீரோவாகும் விஜய்.. மவுசு குறையும் உதயநிதி!!

0

TVK DMK: தமிழக அரசியல் களத்தில் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரைப்போல களம், சரத்குமார் என மற்ற நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்த போது கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் விஜய்க்கு அலாவதியான வருகையை தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். தனக்கு மார்க்கெட் இருக்கும் போதே அரசியலுக்குள் நுழைவது தான் இதற்கு முக்கிய காரணம். இவர் தனது முதல் மாநாட்டிலேயே கொள்கை மற்றும் அரசியல் எதிரி யார் என்பதை கூறிவிட்டார்.

அந்தவகையில் பாஜக-வை காட்டிலும் திமுக இவரை முடக்குவதையே வேலையாக வைத்துள்ளது. இதனால் அவர் பொதுவெளியில் மக்களை சந்தித்தாலும் அதிக நேரம் ஒதுக்காதது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறது. இவையனைத்தும் தவெக கட்சி மீது திமுக வுக்கு உள்ள அச்சத்தை பார்க்க முடிகிறது. நாளடைவில் துணை முதல்வராக உள்ள உதயநிதிக்கான மவுசும் குறைந்து வருகிறது. விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பு இவருக்கு இல்லை. இதுரீதியான பேச்சு அறிவாலையம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

விஜய் தனது பிரச்சார பரப்புரையை இன்று முதல் திருச்சி மரக்கடையில் தொடங்கியுள்ளார். விஜய்க்கு இணையாக தனது மகனை ஈடு கொண்டு வர வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்பே உதயநிதி தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இம்முறை சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என்பதை விட விஜய்க்கும் உதயநிதிக்கும் தீவீரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உதயநிதியை காட்டிலும் விஜய் ஸ்கோர் செய்தால் திமுக-விற்கே அது பெரும் இழப்பீடை கொடுக்கும்.

கேள்விக்குறியாகும் எடப்பாடி பதவி.. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப்போகும் சசிகலா!!

0

ADMK: அதிமுக-வில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கட்சியும் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இதற்கு காரணம் இ.பி.எஸ்-யின் தலைமையும், கட்சியின் மூத்த அதிகரிகளை அவர் ஒதுக்கி வைத்ததுமே என்று சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் வேண்டுகோளை மறுத்த இ.பி.எஸ் அவரை பதவியிலிருந்து நீக்கி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக 5 அணிகளாக பிரிந்திருப்பதை எதிர் கட்சிகளும் அதிமுக நிர்வாகிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவரான சி.வி. சண்முகம் அவர்களும் பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் ஒருமைப்பாடு அவசியம் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் சசிகலா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது இ.பி.எஸ்-க்கு புதிய அழுத்தமாக உருவாகியுள்ளது. சசிகலா மீண்டும் அதிமுக-வில் சேர்வதை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. “சசிகலா-விற்கு இடமில்லை” என்று இ.பி.எஸ் பலமுறை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சசிகலா மீண்டும் இணைந்தால் அதனால் கட்சி பலப்படும் என்று சிலர் கூற, மற்றொரு புறம் அது இ.பி.எஸ்-யின் தலைமையை பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒற்றுமையை நிலை நிறுத்துவாரா? இல்லை வெளியேறிய தலைவர்களை மீண்டும் இணைக்க கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய்க்கு அடுத்தடுத்து நெருக்கடி.. பிரச்சாரத்துக்கு வந்த சிக்கல்!! தவெக வளர்ச்சியை நசுக்க திமுக நடத்தும் சதி!!

0

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் முன்னணி கட்சிகளுக்கு மிகப்பெரும் போட்டியாக வளர்ந்து வருகிறார். இது அதிமுக-விற்கும், திமுக-விற்கும் பாதகமாக அமைந்துள்ளது. விஜய் நடத்திய இரண்டு மாநாட்டிலும் யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது. இது ஆளும் கட்சியான திமுக-வையும் எதிர்கட்சியான அதிமுக-வையும் கதிகலங்க வைத்தது.

இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு 3 முறை அனுமதி கோரியும் காவல் துறையினர் அனுமதி தராததால், விஜய் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையெல்லாம் தாண்டி இன்று திருச்சியில் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ஆதரவாளர்களும், ரசிகர்களும் திரண்டனர்.

இந்த கூட்டமே அவரின் வெற்றிக்கான முதற்படி என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அடுத்ததாக விஜய் செப்டம்பர்-20 ஆம் தேதி நாகையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. திருச்சி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கபட்ட போதே விஜய் அவர்கள் திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

வாக்குகள் தவெக பக்கம் வந்துவிடுமோ என்ற பயத்தினால் தான் ஆளுங்கட்சி இவ்வாறான மறைமுக வேலைகளை செய்து வருவதாகவும், யாராலும் தவெக-வை வீழ்த்த முடியாது என்றும் கூறினார். தற்போது அதற்கேற்றார் போல் நாகையில் நடைபெறவிருக்கும் பிரச்சாரத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் தவெக-வின் வளர்ச்சியை சிதைக்க திமுக இதனை திட்டமிட்டு செய்து வருகின்றது என்று, தவெக தரப்பினர் கூறி வருகின்றனர்.

அரசாங்கத்தின் அனுமதி மறுப்பின் மூலம் திமுக, தவெக-வை பார்த்து பயப்படுகிறது என்ற உணர்வை தூண்டியுள்ளது. சாதாரண பிரச்சாரத்தை விட “அனுமதி மறுப்பு” என்பதே அதிகளவில் பேசப்படும் என்பதால், இந்த சம்பவத்தினால் விஜய் இன்னும் வளர்ந்து வருவார் என்ற கருத்தும் நிலவுகிறது. எதிர்கட்சிகளுக்கு கூட இல்லாத நிபந்தனைகளும், அனுமதி மறுப்பும் தவெக-விற்கு மட்டும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராமதாஸ் அதிரடி: அன்புமணிக்கு பதிலாக மகள் காந்திமதி – பாமகவில் புதிய பிளவு!!

0

PMK: பாமக-வில் நடைபெற்ற பிரிவுகளின் புதிய திருப்பமாக, தற்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரின் மகள் காந்திமதியை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியின் பதவியில் அமரவைக்க போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. திமுக-வை வாரிசு அரசியல் என்று விமர்சித்து வரும் வேலையில், பாமக-விலும் அந்த நிலையே தொடர்கிறது.

ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தொடக்கத்திலிருந்தே முன்னிறுத்தி வந்தார். தொடர்ந்து அன்புமணியும் தலைமை வகித்து வந்தார். அதற்கு பிறகு ராமதாஸ்-யின் மகள் வழி பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணியின் தலைவர் பதவி கொடுக்கப் பட்டது. இந்த வரிசையில் காந்திமதியும் இணையப் போவதாக கூறப்படுகிறது. இது விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ராமதாஸ் பிரச்சாரத்திற்கு செல்லும் போது சில பிரச்சாரங்களில் காந்திமதியும் இருந்துள்ளார். இதன் காரணமாக சிலர் இதனை ராமதாஸ் திட்டமிட்டு தான் செய்கிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அன்புமணியின் பதவி பறிப்புக்கு பின்னால் காந்திமதியின் சதித்திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் பாமக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் செய்தியாக இது பார்க்கப்படுகிறது.

ஒருவேளை காந்திமதி பதவிக்கு வந்தால் அது “குடும்ப அரசியல்” என்ற வாதத்தை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது கட்சியை பலப்படுத்துமா? இல்லை மேலும் பிளவை ஏற்படுத்துமா என்பதை வருங்கால அரசியல் தான் தீர்மானிக்க வேண்டும்.

விஜய்க்கு செல்லும் பா.ம.க வாக்குகள்.. முன்னிலையில் உள்ள த.வெ.க !

0

PMK TVK: சமீப காலமாகவே பாமக-வில் ராமதாஸ்-க்கும், அன்புமணி-க்கும் இடையே சச்சரவு நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் அன்புமணியை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு வாக்கு யார் பக்கம் செல்லும் என்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக அரசியலில் பாமக எப்போதுமே ஒரு வலுவான அடித்தளத்தை வைத்திருக்கும் கட்சியாகும். குறிப்பாக வன்னியர் சமூக வாக்குகளை தன் பக்கம் வைத்திருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் பாமக-விற்கு துணையாக இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட பிளவினால் ராமதாஸ் அணியும் அன்புமணி அணியும் தனித்தனி அரசியல் நடைமுறைகளை பின்பற்றுவதாக தெரிகிறது.

இதனால் பாமக வாக்காளர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகின்றனர். இந்த சமயத்தில், விஜய் தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். விஜய் ஏற்கனவே இளைஞர் ஆதரவை அதிகளவில் பெற்றிருக்கும் பட்சத்தில், பாமக பிரிவால் அதிருப்தியில் உள்ள கட்சி தொண்டர்களின் வாக்கும் விஜய் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

பாமக பிளவுப்பட்டதால் வாக்குகள் முழுவதும் விஜய்க்கு மாறுமா என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை, ஆனால் அதிருப்தி அடைந்த வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 2026 தேர்தலை முன்னிட்டு யாருக்கு ஆதரவாக செல்லப் போகிறது என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.