Home Blog Page 120

தமிழக வெற்றி கழகம் இக்கட்சியுடன்தான் கூட்டணியா …!இதனை பற்றி விஜய் அவர்கள் இரண்டாம் மாநாட்டில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ….

0

மதுரை:இரண்டாம் மாநாட்டின் தேதி மற்றும் இடத்தை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக மதுரை காவல் கண்காணிப்பாளர்களால் தேதியை மாற்றுமாறு தமிழக வெற்றி கழகத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு தவெகவின் தலைவர் விஜய் அவர்கள் ஆகஸ்ட் 21யில் இரண்டாம் மாநாடு நடைபெறும் என உறுதியாக அறிவித்திருந்தார்.இம்மாநாடு சுமார் 500 ஏக்கர் அளவில் மக்கள் அமர்வதற்கும்,வாகனங்களை நிறுத்துவற்கும் மேலும் விஜய் அவர்கள் நடைபயணம் மேற்கொள்வதற்கும் பிரம்மாண்டமாக ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமன்றி இம்மாநாட்டில் விஜய் அவர்கள் மட்டுமே பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் இம்மாநாட்டிற்கு பல்வேறான நிபந்தனைகள் மதுரை காவல் கண்காணிப்பாளர்களால் விதிக்கப்பட்டுள்ளன.”மாநாட்டிற்கு வரும் போதும் செல்லும் போதும் ஊர்வலமாக செல்ல கூடாது ,சாதி மத இது போன்று மோதலை ஏற்படுத்தும் வகையில் பேச கூடாது,சரியான நேரத்திற்கு வர வேண்டும்,யாரு தலைமையில் வருகின்றனர் என்பதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். இது போன்று 26 நிபந்தனைகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த இரண்டாம் மாநாட்டில் முக்கிய சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதுமட்டுமன்றி கூட்டணி பற்றி அறிவிப்பை வெளியிடுவார் என தவெகவினரால் பேசி வருகின்றன.இந்நிலையில் முதல் மாநாட்டில் அறிவித்தப்படி திமுக எதிரி என்பதால்  தவெக இக்கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை,இதுமட்டுமன்றி அதிமுக கூட்டணிக்காக தவெகவினரை ஒரு சில முறை கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்திருந்தனர் இக்கட்சி பாஜகயுடன் இணைந்து இருப்பதால் இக்கட்சியுடனும் தவெகவினர் கூட்டணி அமைப்பதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளது.தவெக-விசிக கூட்டணி அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டன ஆனால் திருமாவளவன் இதை பற்றி பேசவே இல்லை எனவே இக்கட்சியுடன் கூட்டணி என்பது வாய்ப்புகள் குறைவுதான்.

2026 ஆம் ஆண்டில் 234 தொகுதிகளிலும் தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது தனித்தே போட்டியிடும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் இதுமட்டுமன்றி பல்வேறு புதிய வேட்பாளர்களை அறிவிப்பார் எனவும் பேசப்பட்டு வருகின்றன.

திமுக வில் முக்கிய இடத்தை பெற்ற அதிமுக புள்ளி!! உடனடியாக எடப்பாடி காட்டிய அதிரடி!!

0

ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் தொடர உள்ள நிலையில் நிர்வாகிகள் கட்சித் தாவும் நிலையானது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து எடப்பாடி காலம் வரை பார்த்த அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பியும் மூத்த நிர்வாகியுமான மைத்ரேயன் தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார்.

முதன் முதலில் இவர் அரசியலுக்குள் நுழைந்த போது பாஜகவில் காலடி எடுத்து வைத்தார். அங்கு இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது தான் அதிமுகவில் சேர்ந்தார். நாளடைவில் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக பிரிந்தது, அச்சமயம் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் துணை நின்றார். இப்படியே சிறிது காலம் சென்ற நிலையில் மீண்டும் தொடங்கிய இடமான பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

ஆனால் அதுவும் சிறிது காலத்திற்குத்தான் நீடித்தது. அதனையடுத்து எடப்பாடிக்கு பதவி அதிகாரம் ஆகவே மீண்டும் அதிமுகவில் இணைந்து இவருக்கு எம்பி பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் அதிமுகவை விட்டு, தன்னை திமுகவில்  இணைத்துக் கொண்டார். இது ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி அவரை அடிப்படை உறுப்பினர் பதவியி என கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளார். மேற்கொண்டு திமுகவில் இணைந்ததற்கான காரணமாக அவர் கூறுவதாவதாவது, 2026 ஆம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் அதுதான் விதி அது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் ஸ்டாலின், அடுத்த ஆண்டும் அவரே தான் ஏற்றுவார். கல்வி என தொடங்கி தொழில் வரை அனைத்திலும் முன்னணியில் தமிழகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அந்த வகையில் என்னையும் திமுகவின் சிப்பாய்களில் ஒருவராக இணைக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

நான் உயிரோடு இருக்கும் வரை கூட்டணி என்பது கிடையாது தனித்து மட்டுமே என் மக்களுக்காக தேர்தலில் போட்டியிடுவேன் -சீமான்

0

சென்னை:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது’அதிமுக கூட்டணியுடன் இருக்கின்றன மேலும் சுற்று பயணம் மேற்கொண்டும் கூட்டணி இணைக்கவும் முயற்சிக்கின்றன, திமுகவும்  கூட்டணியில் இருக்கின்றார்கள் நீங்கள் தவெகயுடன் கூட்டணி இணையபோவதாக  பலரும் கூறுகின்றன தவெகயுடன் இணைவீர்களா இல்லை மற்ற கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டன.

இந்த கேள்விக்கு பதில் கூறும்வகையில் அவர் கூறியதாவது,நடிகர் விஜய் அவர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார் இதனால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுகள் குறைய வாய்ப்புகள் உள்ளன என பலரும் தவறான தகவல் பரப்பி வருகின்றன இதற்கு பயந்து நான் கூட்டணிக்கு ஓட மாட்டேன் நான் என் மக்களுக்கானவன் எனது தோல்வியும் வெற்றியும் மக்களுக்கானது என கூறியுள்ளார்.

இதுமட்டுமன்றி நான் கட்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே தனித்து தான் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்கிறேன் இது போன்று பல கட்சிகளை பார்த்துவிட்டேன் நான் செத்து சாம்பல் ஆனாலும் தனித்து தான் என் மக்களுக்காக போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் சீமான் அவர்கள் கோபி,சுதாகர் மீது வழக்கு போடுவதெல்ல்லாம் சமூக  திண்டாமையை காட்டுகிறது சமூகத்தின் சாதி கொடுமையை காட்டுகிறது பெருமை என்பது எதில் இருக்க வேண்டுமோ அதில் இருக்க வேண்டும் சாதி, மதத்தில் ஒருபோதும் இருக்க கூடாது என கூறியுள்ளார்.

 

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

இந்திய ரெயில்வே புதிய ‘RailOne’ சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இலவசமாக OTT மூலமாக படம், தொடர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

2025 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமான ‘RailOne’ எனும் புதிய சூப்பர் ஆப், தற்போது பயணிகளுக்கு இலவச OTT (Over-The-Top) பொழுதுபோக்கு சேவையை வழங்குகிறது. இதன் மூலம் ரெயில் பயணத்தின் போது திரைப்படங்கள், வலைத் தொடர்கள், ஆவணப்படங்கள், ஆடியோ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை இலவசமாக அனுபவிக்கலாம்.

RailOne – ஒரே ஆப்பில் அனைத்து சேவைகள்

பயனருக்கு எளிதான வடிவமைப்புடன் வந்திருக்கும் இந்த RailOne ஆப், பயணிகளுக்கான பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கிறது:

முன்பதிவு செய்யாத (Unreserved) UTS டிக்கெட்

நேரடி ரெயில் நிலவரம் (Live Train Tracking)

புகார் தீர்வு முறை

E-Catering (உணவு ஆர்டர்)

போர்டர் முன்பதிவு

இறுதி கட்ட டாக்ஸி சேவை (Last-Mile Taxi)

டிக்கெட் முன்பதிவு – முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யாத டிக்கெட்டுகள் இரண்டையும் மொபைலில் பதிவு செய்யும் வசதி

RailOne-ல் OTT பொழுதுபோக்கு

RailOne ஆப்பில், WAVES OTT எனும் டிஜிட்டல் தளம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த OTT தளம், பிரசார் பாரதி (Prasar Bharati) மூலம் 2024 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தகவல்கள் கிடைக்கிறது:

நேரடி டிவி

வேண்டுகோள் படி வீடியோக்கள்

ஆடியோ நிகழ்ச்சிகள்

ஆன்லைன் விளையாட்டுகள்

இ-காமர்ஸ் சேவைகள்

மொழி மற்றும் கலாச்சார வளம்

WAVES OTT, படைப்புகளை உருவாக்குநர்கள், பிராந்திய ஒளிபரப்பாளர்கள், கலாச்சார அமைப்புகளுடன் இணைந்து, இந்தியாவின் பல மொழிகள் மற்றும் உள்ளூர் வழக்கு மொழிகளில் தகவல்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

RailOne-ல் இலவச OTT பார்க்குவது எப்படி?

RailOne ஆப்பில் உள்நுழைந்து, பயணத்தின் போது OTT பொழுதுபோக்குப் பகுதியில் சென்று, விரும்பிய திரைப்படம், தொடர், அல்லது நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து பார்வையிடலாம். தற்போது விழாக்கால சலுகை மூலம் இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

RailOne ஆப் – கூடுதல் தகவல்கள்

CRIS (Centre for Railway Information Systems) உருவாக்கியது

முன்பிருந்த RailConnect & UTS பயனர் கணக்குகளை ஆதரிக்கிறது

பல ஆப்புகளை தனித்தனியாக நிறுவ வேண்டிய அவசியமில்லை – இடத்தை மிச்சப்படுத்தும்

IRCTC அங்கீகரித்தது

IRCTC ஆப்பைப் போலவே, வணிக ரீதியாக இணைந்த பிற ஆப்புகளும் இதனுடன் இணைந்து செயல்படுகின்றன.

அப்பா-வை வைத்து விளம்பரம் தேடும் அன்புமணி.. அம்பலமான அரசியல் நாடகம்!!

0

PMK: பாமக-வில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அப்பா மகன் என இருவரும் இதற்கு போட்டிபோட்டுக் கொண்டு தேதியை அறிவித்தனர். இது ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது, ஆனால் ராமதாஸ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கொண்டு அன்புமணி அறிவித்த நாளிலேயே பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.

இதில் அன்புமணி நியமித்த நிர்வாகிகள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். ராமதாஸ் கலந்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் அவருக்கு அன்புமணி பக்கத்தில் தனி இருக்கையை வைத்துள்ளனர். தற்போது அந்த இடம் காலியாக இருப்பது குறித்து செய்திகள் எங்கும் சோசியல் மீடியாவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. மேற்கொண்டு இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் நிர்வாகிகள் அணிந்திருக்கும் பேட்சியில் தொடங்கி கட்டவுட் வரை அனைத்திலும் ராமதாஸ் படம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அன்புமணி, நான் செய்ய வேண்டிய அனைத்து முறைகளையும் மரியாதையும் செய்கிறேன். ஆனால் அதை அவர் தான் மறுத்து வருகிறார் என்பது காட்டும் விதமாக உள்ளது. ஆனால் இதற்கு முன் பல கூட்டங்கள் கூடிய போதும் அவ்வளவு ஏன் சில போஸ்டர்களில் கூட ராமதாஸ் படம் இடம் பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது மட்டும் ஏன் விளம்பர நோக்கத்திற்காக அன்புமணி இப்படி செயல்பட வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாமகவின் உட்கட்சி மோதல் என்பது இறுதி அத்தியாயம் வரை தீரா முடிவாக இருக்கும் என்பது இதை வைத்து பார்க்கையில் புரிந்துக் கொள்ள முடிகிறது. மேலும் இவர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்படவும் அதிக வாய்ப்புள்ளது.

திமுக-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திருமா!! ஸ்டாலினுக்கு வைத்த பெரிய டிமாண்ட்!!

0

VSK DMK: தமிழகத்தில் தொடர் லாக்கப் மரணம் ஆணவக் கொலை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆணவ கொலைகானது சமீபத்தில் அதிகரித்த வண்ணமாக தான் இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கவின் என்பவர் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கவிதை கொலை செய்த சுர்ஜித் கைது போலீசாரின் மகன் என்பதால் வழக்கு திசை மாறி போகும் என பலரும் எண்ணினர்.

இது ரீதியாக பல போராட்டங்கள் நடத்திய பிறகு அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இது ரீதியாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கவன ஈர்ப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளார். இது ரீதியாக தமிழக அரசிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆவண கொலை தடுப்புச் சட்டம் சட்டத்தை உடனடியாக இயற்றும்படி வலியுறுத்தி தமிழகம் எங்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது சென்னையில், சைதாப்பேட்டையில் தற்போது கூச்சல் விட்டு போராட்டம் நடத்துகின்றனர். மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட கவின் குமாரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். கூட்டணி கட்சியின் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாமக-வில் அதிரடி: அப்பா மகன் மோதலின் இறுதி கட்டம்.. அரியணையில் ஏறப்போவது யார்!! வெளியாகும் அறிவிப்பு!!

0

PMK: பாமகவின் பொதுக்குழு கூட்டமானது இன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக அப்பா மகனுக்கிடையே தலைமை பதவிக்கான மோதல் போக்கும் நிலவி வரும் பட்சத்தில் அதற்கான முடிவு இன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்புமணி சார்பாக புதிய நிர்வாகிகள் பலர் அமர்த்தபட்டனர்.

மறுபுறம் ராமதாஸ் சார்பாக நிர்வாகிகள் நீக்கப்பட்டதோடு, நியமிக்கவும் செய்தனர். இது ரீதியான இறுதி கட்ட முடிவானது இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமாம். இதனால் ஒரு சில பதவிகளுக்கு இரு தலைவர்கள் உள்ளது மாற்றப்படும். அதேபோல அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. மேற்கொண்டு அவருக்கு பதில் புதிய நிர்வாகி நியமிக்கப்படுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் அன்புமணி ஆதரவாளர்கள், இனி வேறு தலைவர் என்பதே கிடையாது. கட்சியில் எல்லாமே அவர்தான் எனக் கூறி வருகின்றனர். கட்டாயம் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைமை பதவிக்கு ஒரு முடிவு கொண்டுவரப்படும் என்பது உறுதி. தற்போது எடுக்கப்படும் தீர்மானங்கள் தான் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு ஏதுவாக அமையும்.

இதனால் இவர்கள் முடிவு குறித்து அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அன்புமணி தலைவராக தொடர்ந்தால் கட்டாயம் பாஜகவுடன் இருக்கத்தான் அதிக வாய்ப்பு. அதுவே ராமதாஸ் தற்போது திமுக பக்கம் செல்லலாம் என்று காய் நகர்த்தி வருகிறார். இதன் முடிவானது தலைவர் பதவியை பொறுத்துதான் உள்ளது.

குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர் கைது

0

ஓமலூர் அருகே சொகுசு காரில் 330 கிலோ பான் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் குழுவினர் ஆர்சி செட்டிப்பட்டி மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சொகுசு கார் வேகமாக வருவதை அறிந்து அந்த காரை பிடித்து சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பான் குட்கா போன்ற போதை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து காரையும் கடத்தலில் ஈடுபட்ட நபரையும் ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு ஓமலூர் போலீசார் விசாரணையில் பெங்களூரில் இருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு 330கிலோ பான் குட்கா கடத்தி சென்றதாகவும், கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம் பாலி தாலுக்கா குஜால்பூர் பகுதியைச் சேர்ந்த சௌகாராம் என்பவருடைய மகன் தினேஷ்(22) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சுமார் 10லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் 330கிலோ பான் குட்கா போன்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடத்திய குற்றத்திற்காக ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சேலம்

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அதிகாரிகள் சங்கம் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கிராம வங்கிகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது குறிப்பாக 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு கிராம வங்கிகள் செயல்பட்டு வருகிறது 12 லட்சம் கோடி வணிகம் நடைபெற்று வரும் இந்த வங்கியின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது.

ஒன்றிய அரசு தமிழ்நாடு கிராம வங்கியின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது தொடர்ந்து கிராம வங்கிகளாகவே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர் சங்கம் கிராம வங்கி ஊழியர் சங்கம் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் தலைவர் ஆண்டோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் செயலாளர் அறிவுரை நம்பி அகில இந்திய தலைவர் அஸ்வத், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொருளாளர் லட்சுமி நாராயணன், அதிகாரிகள் சங்க செயலாளர் மெய்ஞான சேகர், உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனை.. தமிழர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றுத் தந்த பிரதமர் மோடி!!

0

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் உலக அரங்கில் ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. தமிழை தேசத்தின் அடையாளமாக முன்னிறுத்தி, பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அரசின் புரட்சிகர முயற்சிகள்

மோடி அரசு தமிழை உலக அரங்கில் உயர்த்துவதற்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உலகளாவிய தமிழ் பெருமை: பிரதமர் மோடி எப்போதுமே, வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தமிழை உலகின் பழமையான மொழிகளில் ஒன்று எனக் கூறி புகழ்ந்து வருகிறார். ஐ.நா. சபை, ஜி20 உச்சி மாநாடுகள் மற்றும் பிற வெளிநாட்டு மேடைகளிலும் தமிழ் கவிஞர்களின் மேற்கோள்களைப் பயன்படுத்தி வருகிறார். பிஜி போன்ற நாடுகளில் முதன்முறையாக இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

காசி – தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்: இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரியப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தச் சங்கமங்கள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். இத்தகைய நிகழ்வுகள் வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஒரு வலுவான கலாச்சாரப் பாலத்தை உருவாக்கியுள்ளன.

தமிழில் உயர்கல்விக்கு வலியுறுத்தல்: மருத்துவக் கல்வியைத் தமிழில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், பல்வேறு மத்திய அரசுத் தேர்வுகள் முதன்முறையாக தமிழில் எழுதும் உரிமை வழங்கப்பட்டது, இது தமிழ் மாணவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தமிழ் கலாச்சாரத்திற்கு மரியாதை

மோடி அரசு தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

செங்கோல், நடராஜர், தமிழ்ப் புனிதங்கள்: புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் சைவ ஆதீனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய சின்னமான ‘செங்கோல்’ தேசிய மரியாதையுடன் நிறுவப்பட்டது. ஜி20 மாநாட்டில் பிரமாண்டமான நடராஜர் சிலை நிறுவப்பட்டு, ஆண்டவனின், “ஆனந்த தாண்டவம்” உலக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.

அகத்தியர், திருவள்ளுவர்: அகத்தியர், திருவள்ளுவர் போன்ற புலவர்களுடன் சேர்த்து, தமிழ் இலக்கியப் பெருமைகளை வெளிக்கொணர பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவர்களைப் பற்றிய புதிய ஆய்வுகளும் வெளியீடுகளும் வெளிவந்துள்ளன.

ராஜேந்திரச் சோழன்: கடல் கடந்து ஆட்சி செய்த ராஜேந்திர சோழனுக்கோ, அவரது தந்தை ராஜராஜ சோழனுக்கோ உரிய முக்கியத்துவத்தை இதுவரை மத்திய, மாநில அரசுகள் செய்தது இல்லை. ஆனால் பிரதமர் மோடி சோழர்களின் பெருமைகளை பல மேடைகளில் பேசியுள்ளார். அதன் உச்சமாக, கங்கைகொண்ட சோழபுரம் சென்று, ஆடித் திருவாதிரை நிகழ்வில் பங்கேற்றதோடு, ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகளை தமிழகத்தில் அமைப்பேன் என வாக்கு கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள்

மோடி அரசு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.

அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு:சேத்தியாத்தோப்பு – சோழபுரம் நான்கு வழி நெடுஞ்சாலைப் பணிகள். தூத்துக்குடி விமான நிலையத்தில் ₹450 கோடி செலவில் புதிய முனையக் கட்டிடம். பம்பன் ரயில் கடல் பாலம் – அதாவது, இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில் பாலம்.

மின்சக்தி, ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்கள்: தமிழகத்தில், மத்திய அரசின் சார்பில், 11 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல திட்டங்கள் தொடர்கின்றன. 77 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பல வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டு, ரூ.4,800 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சூரிய சக்தி வீட்டு மின்திட்டம்: ஆயிரக்கணக்கான வீடுகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.

திமுக மீதான விமர்சனம்

மத்திய அரசின் தமிழ் வளர்ச்சி முயற்சிகள் ஒருபக்கம் என்றால், அதை செய்யவில்லை என்ற விமர்சனத்தை திமுக எதிர்கொள்கிறது. தேசிய கல்விக் கொள்கை (NEP), மும்மொழிக் கொள்கை போன்ற முக்கியமான மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க. அரசு எதிர்ப்பதால், தமிழ்நாட்டுப் பெண்கள் உள்ளிட்ட பலர் பயன்பெறும் திட்டங்கள் தடைபடுகின்றன. வாரிசு அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற விமர்சனங்கள் தமிழக அரசு மீது முன்வைக்கப்படுகின்றன.

திருவள்ளுவர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கியப் பெருமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, தி.மு.க. குடும்ப அரசியல் மற்றும் வம்சாவளிப் பெருமைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முயற்சி எடுக்காத திமுக, கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க கடலுக்குள் இடம் தேடுவது சரியா என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் வந்தபடி உள்ளன.

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டின் தேவைகளுக்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த தி.மு.க. தவறிவிட்டது. பள்ளிக் கல்வித் தரக் குறைவு, மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவதற்கான அடிப்படை ஒருங்கிணைப்புக் குறைவு போன்ற பிரச்சினைகள் உள்ளன என்ற விமர்சனங்களையும் திமுக அரசு எதிர்கொள்கிறது.

உண்மையான பெருமை யாருக்கு?

மோடி அரசு தமிழின் பெருமை, வீரர்களின் பங்களிப்பு, பாரம்பரியம், அரசியல் மற்றும் கல்வி மேம்பாடு எனப் பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. உலக அரங்கில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இதற்கு மாறாக, தி.மு.க. அரசு தமிழ் வரலாறு சார்ந்த வீரர்களையும், பாரம்பரியச் சின்னங்களையும் ஒதுக்கி, மக்கள் மத்தியில் அவர்களது சாதனைகளை மறக்கடிக்க முயற்சி செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

எல்லா ஜாதியினரும் சோழர்கள் எங்கள் ஜாதிக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜாதி பாகுபாடு இல்லாமல் திருமண உறவு வைத்தவர்கள் சோழர்கள். ஆனால் ஏன் அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை ஏன் தரவில்லை திமுக அரசு என்ற கேள்விகளை, மோடி அரசின் தமிழ் முன்னோடிகளை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் எழுப்ப வழி செய்து கொடுத்துள்ளது. தமிழும் தமிழனும் ஒரு தேசத்தின் அடையாளம் என்பதை உலகிற்கு உணர்த்தியது மோடி அரசு போல இதற்கு முன்பு எந்த அரசும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.