Home Blog Page 128

உணவு இடைவேளையை தடுத்து நிறுத்திய முதலாளிக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய மேலாளர்!!

0

மதிய உணவு இடைவேளை எடுக்க விடாமல் தடுத்த தனது முதலாளிக்கு ஒரு ஊழியர் அளித்த வெளிப்படையான பதில் Reddit பயனர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மேலாளர் ஒருவருக்கு மதிய உணவு இடைவேளை மறுக்கப்பட்டது பற்றிய ரெடிட் பதிவும் , அந்த ஊழியர் தனது முதலாளிக்கு அளித்த பதிலானது பெரும்  விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலாளரின் அறிவுறுத்தலுக்கு அந்த தொழிலாளி அளித்த வெளிப்படையான பதில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

“மதிய உணவு இடைவேளையை நிறுத்திவிட்டேன்,” என்று ஒரு ரெடிட் பயனர் எழுதினார், அந்த சம்பவம் அவர்களின் நண்பருடன் நடந்தது என்று கூறினார்.

“என் நண்பர் ஒரு நடுத்தர நிறுவனத்தில் பணிபுரிகிறார், இன்று அவர் மதிய உணவு இடைவேளைக்குச் சென்று கொண்டிருந்தார், எப்படியோ அவரது மேலாளர் முதலில் தனது வேலையை முடிக்கவும், பின்னர் மதிய உணவு இடைவேளைக்குச் செல்லவும் என உத்தரவிட்டார், ஆனால் அவர் மிகவும் பசியுடன் இருந்தார், பசியால் துடித்தார், அவரது மேலாளர் அவருக்கு மதிய உணவு இடைவேளையை மறுத்தபோது, அவர் கோபமடைந்ததாக ரெடிட் பயனர் எழுதினார்.

மேலாளரின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பணியாளர், “கானே கே லியே ஹாய் தோ காமா ரஹா ஹு, அவுர் யஹான் ஆப் முஜே கானா கானே சே ஹி ரோக் ரஹே ஹோ (நான் உணவு உண்பதற்காக சம்பாதிக்கிறேன், இங்கே நீங்கள் சாப்பிடுவதைத் தடுக்கிறீர்கள்)” என்று பதிலளித்ததாக அந்த நபர் கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேலாளர் பணியாளரைப் புறக்கணிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்கள் இது ரீதியாக கருத்து தெரிவித்தது,

மேலாளருக்கு புரியும் படி பணியாளர் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல், அந்த மேலாளர் வேறு யாரிடமும் அதே விஷயத்தைச் சொல்வதற்கு முன்பு இருமுறை யோசிப்பார்” என்று குறிப்பிட்டார்.

இன்னொருவர் நினைவு கூர்ந்தார், “எனது தற்போதைய நிறுவனத்தில் மட்டுமே இது நடந்தது, ஆனால் அது வேறு விதமாக இருந்தது. எனது மேலாளர் போன் செய்து, முதலில் அதை அனுப்பிவிட்டு பின்னர் சாப்பிடுவது முக்கியம் என்று கூறினார். நான் சாப்பிடும் நேரத்தில் இருந்தேன், ஆனால் நான் சென்று பணியை முடிக்க வேண்டியிருந்தது. நான் என் உணவை நடுவில் விட்டுவிட்டேன், நான் வீட்டிற்கு வந்ததும், ஒரு குழந்தையைப் போல அழுதேன். பின்னர் என் அம்மா, ‘பேட்டா கானே கே லியே ஹி காமா ரி ஹை அண்ட் கானே பி நி தேரே தோ ஈஸ் கைசே சலேகா’ என்று கூறினார், பின்னர் நான் என் மேலாளருக்கு புத்திசாலித்தனமாக பதிலளிக்க ஆரம்பித்தேன்.”

மூன்றாமவர், “உங்கள் நண்பர் ஒரு துணிச்சலான மனிதர். சில வருடங்களுக்கு முன்பு, நானும் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்தேன். எனக்காக நிற்க முடியாமல் போனதற்கும், என் மேலாளர் என்னை மோசமானவராக நடத்த அனுமதித்ததற்கும் நான் இன்னும் வருந்துகிறேன்!” என்று கூறினார்.

நான்காவது ஒருவர் எழுதினார், “அவர் சரியானதைச் செய்தார், ஆனால் நிச்சயமாக மேலாளர் அவர் மீது வெறுப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் இந்த விஷயங்களை நினைவில் வைத்து சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார்கள்.”

எடப்பாடி கோட்டையில் கருணாநிதி சிலைக்கு நேர்ந்த விபரீதம்.. சேலத்தில் தொடர் பரபரப்பு!!

சேலம் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதிக்கு அருகில் அண்ணா பூங்கா உள்ளது. அங்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் திருவருள் சிலையானது வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வருடங்களுக்கு முன்பு 75 ரூபாய் செலவில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு மை ஊற்றி சென்றுள்ளனர். இதனால் அச் சுற்று வட்டார பகுதியில் பரப்பரப்பாக காணப்படுகிறது.

இது ரீதியாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தற்சமயம் திமுக ஆட்சி மீது தொடர் அதிருப்தியில் பொதுமக்கள் உள்ளனர். தொடர்ந்து கொலை கொள்ளை வழக்கு அதிகரித்திருப்பதால் இந்நிலை உண்டாகியுள்ளது. மேலும் சேலம் மாவட்டமானது எடப்பாடியின் கோட்டை என்பதால் இந்த வேலையை அவர் ஆதரவாளர்கள் யாரேனும் செய்திருப்பாளர்களா என்று சந்தேகப்படுகின்றனர். இது ரீதியாக திமுக மேலிடத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக ஆட்சி மீது மக்கள் பெரிதான பிடிப்பு இல்லை என்பதும் அப்பட்டமாக தெரிகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு மை போட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணவனுடன் உள்ள கள்ள உறவை விட்டுவிட கெஞ்சிய மனைவி! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த 43 வயதான நபர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே சென்றுள்ளது.

 

இந்நிலையில் அந்த கணவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அந்த பழக்கம் அதிகமாகி கள்ளக்காதலில் முடிந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த கள்ள காதல் சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் தெரிந்து விட்டது.

 

இந்த கள்ளக்காதலை தயவுசெய்து விட்டுவிடுங்கள் என்று தனது கணவரிடம் கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால் கணவர் இந்த கள்ளத்தொடர்பை விடுவதாக தெரியவில்லை. இந்நிலையில் அந்த பெண் தனது கணவரின் கள்ளக்காதலிக்கு போன் செய்து உங்களிடம் பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். அந்த பெண்ணும் இவரை சந்திக்க சென்றுள்ளார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், தயவு செய்து என் கணவரை விட்டு விடு என்று காலில் விழாத குறையாக அந்த பெண் கணவனின் கள்ள காதலியிடம் கெஞ்சியுள்ளார்.

 

சரி இனி உங்கள் விசயத்தில் தலையிட மாட்டேன் என்று பாசாங்கு செய்வதை போல சொல்லிவிட்டு அந்த பெண் சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்து இரண்டே நாட்களில் அந்த பெண்ணின் கணவர் தனது செல் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்துவிட்டார். கள்ளக்காதலியை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவருடைய நம்பரும் ஸ்விட்ச் ஆப். இதனால் செய்வதறியாது அந்த பெண்ணும், அவருடைய குழந்தைகளும் காவல் நிலையம் சென்று காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனால் கோவை சரவணம்பட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மலையாள படத்தை பார்த்து காப்பி”ப” வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?

0

மலையாள மொழியில் அண்மையில் “ஸ்தாணர்த்தி ஸ்ரீகுட்டன்” என்னும் படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்கள் பள்ளியில் அமரும் முறையில் மாற்றம் செய்து எல்லோரும் சமம், பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மோசமான மாணவர்கள் கிடையாது என்பதை மாணவர்களும் உணரவேண்டும் என்பதற்காக “ப” வடிவில் மாணவர்களை அமரவைத்து ஆசிரியர் மாணவர்களுக்கு இந்த படத்தில் பாடம் எடுப்பார்.

 

இந்த படத்தை பார்த்த நம் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறையினர் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் இப்படி மாணவர்களை அமர வைக்க வேண்டும். அப்போது தான் யார் முன் வரிசை, யார் பின் வரிசை என்கிற பாகுபாடு மனப்பான்மை மாணவர்களுக்குள் வராது என்கிற கோணத்தில் இந்த ப வடிவ முறையை பள்ளி வழக்கத்திற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

 

உண்மையில் இந்த முறையை அமல்படுத்துவதால் நிச்சயம் மாணவர்களுக்கு இடையே உள்ள பாகுபாடு மனப்பான்மை முற்றிலும் குறைந்துவிடும். ஆனால் அதைவிட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாணவர்களுக்கு நிறைய பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

 

தொடர்ச்சியாக தினமும் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் இந்த மாதிரி அமர்ந்திருந்தால் குழந்தைகளின் கழுத்து எலும்பு மற்றும் நரம்புகள் பாதிக்கப்படும். கண்ணாடி அணிந்திருக்கும் மாணவர்கள் தங்களின் கண்ணாடி லென்ஸ் வழியாக பார்க்காமல் பக்கவாட்டின் வழியாக பார்ப்பதால் அவர்களின் கண்கள் பாதிக்கப்படும். தலை வலி, கழுத்து வலி பிரச்சனைகள் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். தொடர்ந்து இதே மாதிரி அமர்ந்திருப்பதால் கழுத்து மற்றும் கண்கள் பாதிப்படைய நிச்சயம் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இவ்வளவு பேசுறமே, நம்மால் தொடர்ந்து ஒரு படத்தை டீவியில் பக்கவாட்டில் அமர்ந்து பார்க்க முடியுமா என்பதை யோசித்து பாருங்கள்.

விஜய் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பம்! காரணம் இதுதான்!

0

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வளம் வருபவர் விஜய். கடைசியாக ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கிவிட்டார். தற்போது தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அனுதினமும் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்து வருகிறார்.

விஜய் கட்சி ஆரம்பித்த உடனே நடந்த முதல் மாநாட்டில் தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு எப்போதும் கூட்டணி கதவு திறந்தே இருக்கும் என்றும், கொள்கை எதிரி பாஜகவுடனும், அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார்.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற சிறிய கட்சிகளை கவரும் வகையில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கூட்டணி கொள்கைகளையும் விஜய் வெளியிட்டார். இதனால் எந்நேரத்திலும் சிறு கட்சிகள் விஜய்யின் கூட்டணிக்குள் வந்துவிடும் நிலை தற்போது அரசியலில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக்கொண்டு தான் வருகிறேன். விஜய்யின் அரசியல் நகர்வுகள் சிறப்பாக உள்ளது என்றும், அவருக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் பேட்டி கொடுத்துள்ளார் ஒபிஎஸ். விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி விட்டார். இவரே மீண்டும் அங்கு சென்றாலும் எடப்பாடி இவரை சேர்த்துக்கொள்ள மாட்டார். அதேபோல பாஜகவுடன் இணக்கமாக ஓபிஎஸ் இருந்தாலும் ஓபிஎஸ் பாஜக சேர எடப்பாடி விடமாட்டார். திமுகவுடனும் இவரால் கூட்டணிக்கு செல்ல முடியாது. சீமானுடன் சென்றால் டெபாசிட் கூட தேறாது. இந்த காரணங்களால் தான் ஓபிஎஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் அரசால் புரசலாக பேசிக்கொள்கிறார்கள். ஓபிஎஸ் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது, அவருக்கும் ஜாதி ரீதியான வாக்குகள் அதிக அளவில் இருக்கு என்றும் அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Youtube கொண்டு வந்த புது விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் இதனால் பாதிக்கப்படுவார்கள்?

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நேரத்தில் நிறைய பேர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது பலர் Youtube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை விளையாட்டுக்காக( ஒரு ஜாலிக்காக) பதிவு செய்து வெளியிட்டு வந்தனர். நாளடைவில் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி Youtube, Facebook போன்ற வலைத்தளங்கள் மக்களின் வீடியோவை அங்கீகரித்து அவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் நிறைய பேர் பயனடைந்தனர். பலர் தங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக Youtube ல் சம்பாதிக்க இறங்கிவிட்டனர். பலர் லட்சம் முதல் கோடிகளில் சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டனர். அதாவது தாங்கள் இத்தனை வருடங்களாக செய்துவந்த தொழில் மற்றும் வேலைகளை விட்டுவிட்டு முழு நேரமாக Youtube ல் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில் பல புது விதிமுறைகளை Youtube அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த புது விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனி பணம் கொடுக்க முடியாது என்று Youtube அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகள் பின்வருமாறு : மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான விடீயோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு இனி பணம் கிடைக்காது.

ஒரே மாதிரியான விடீயோக்களை பதிவேற்றம் செய்தால் பணம் கிடைக்காது. செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ வெளியிடுபவர்களுக்கு இனி பணம் கிடைக்காது. மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்படும் வீடியோக்கள், அடுத்தவர்களின் வீடீயோவை காப்பி அடித்து சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு வீடியோ வெளியிடுவது, தரம் இல்லாத வீடியோக்கள், டெம்ப்ளேட் அடிப்படையில் உருவாக்கப்படும் வீடியோக்கள் வெளியிடுபவர்களுக்கு இனி யூடியூபில் இருந்து பணம் கிடைக்காது என்கிற தகவல்களை Youtube அண்மையில் வெளியிட்டுள்ளது. இதனால் Youtube தான் கதி என்று இருந்தவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து விலக துடிக்கும் காங்கிரஸ்? தவெகவுடன் கூட்டணியா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியையும் தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பேசி வருகிறார் விஜய்.

கொள்கை எதிரி பாஜகவுடனும் மற்றும் அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்ற தன்னுடைய இறுதி நிலைப்பாட்டை அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் கட்சி மீட்டிங்கில் வெளிப்படையாக அறிவித்தார் விஜய். இதனால் திமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு விஜய் எப்போதும் செல்லமாட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது. ஆனால் திமுக மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை தனது பக்கம் இழுக்க ஆரம்பம் முதலே விஜய் வலை விரித்து வருகிறார்.

விசிக, பாமக, காங்கிரஸ், தேமுதிக போன்ற முன்னணி கட்சிகளை விஜய் தனது கூட்டணியில் இணைக்க ஆர்வம் காட்டி வருகிறார். தவெக கட்சியுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தரப்போவதாக விஜய் வெளிப்படையாக அறிவித்தார். தற்போது யாரும் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவிக்காத போதிலும் தேர்தல் நேரத்தில் நிச்சயம் களம் மாறும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியேற முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த சில தேர்தல்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு திமுக மிக சொற்பமான தொகுதிகளையே கொடுத்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2029ஆம் ஆண்டு தேர்தலுக்குள் தமிழகத்தில் காங்கிரஸ் என்னும் கட்சியே இல்லாமல் போய்விடும்.

திமுக எப்போதும் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளையும் ஒதுக்காது, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கொடுக்காது. அதே விஜய்யுடன் சேர்ந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்திலும் பங்கு கிடைக்கும். நாம் விஜய்யுடன் பேரம் பேசி நிறைய தொகுதிகளையும் வாங்கலாம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் விஜய்க்கு ரசிகர்கள் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்காக விஜய்யை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நினைக்கிறார்கள். பீகார் மாநில தேர்தலில் ராகுல் காந்தி பிஸியாக இருப்பதால் அவர் பீஹார் மாநில தேர்தல் முடிந்து வந்த பிறகு இது குறித்து பேசலாம் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். எனவே காங்கிரஸ் தவெக கூட்டணி கூடிய விரைவில் முடிவாகி விடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

மகளிருக்கு ரூ 1500 உரிமைத்தொகை.. ஸ்டாலின் குட்டை உடைத்த எடப்பாடி!!

0

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கியது. அதிலும் பல வரைமுறைகளை அமல்படுத்தியிருந்தது. இதனால் பலருக்கும் உரிமை தொகை கிடைக்காமல் போனது.

நாளடைவில் இந்த திட்டத்தில் விரிவாக்கத்தை ஏற்படுத்தி சில தளர்வுகளை உண்டாக்கினர். தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு சலுகைகளை இத்திட்டத்தின் வழியாக கொடுத்துள்ளது. யாரெல்லாம் புதிய ரேஷன் அட்டையை விண்ணப்பிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இனி உரிமை தொகை கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இது ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து பல அழுத்தங்களுக்கு பிறகு தான் மகளிர் உரிமைத் தொகையை நடைமுறைப்படுத்தியது. தற்போது வரை 75 சதவீத வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.

நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் எண்ணாது?? இந்த ஆட்சியில் விவசாயிகள் பற்றி எந்த கவனமும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் மகளிருக்கு 1500 கொடுத்திருப்போம் என கூறினார். வரப்போகும் தேர்தலில் கட்டாயம் மகளிர் குறித்து உரிமைத் தொகை அதிகமாக வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

விசாரணை வட்டத்துக்குள் வராத நிகிதா! கூலாக அளித்த பேட்டி

 

தற்போது வரை அஜித் குமார் மரணத்தில் சம்பந்தபட்ட நிகிதா விசாரணை வட்டத்திற்குள் வராத காரணத்தால் அவர் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது. கடமைக்காவது கைது பண்ணி விசாரிச்சுட்டு அனுப்பி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்நிலையில் அவர் கூலாக பேட்டி கொடுக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவர் நிகிதா என்கிற கல்லூரி பேராசிரியையின் 10 பவுன் நகையை திருடி விட்டதாக சொல்லி விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து சென்று எந்த வித வழக்கும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை அடித்து துன்புறுத்தி கொலை செய்தனர்.

இதில் சம்மந்தப்பட்ட 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் வழக்கை CBI க்கு மாற்றிவிட்டனர். இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சந்தேகத்திற்கு உரிய வகையில் செயல்பட்ட நிகிதாவை இதுவரை யாரும் கைது செய்யவில்லை.

உண்மையில் நகை தான் காணாமல் போனதா, இல்லை அஜித் மீது இருந்த முன்விரோத பகை காரணமாக நகை காணாமல் போய்விட்டதாக சொல்லி அஜித்தை பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும் என்று நிகிதா செயல்பட்டாரா என்கிற கோணத்தில் இதுவரை காவல்துறையினர் விசாரிக்கவே இல்லை. ஊடகங்களில் சொல்லப்படும் நிகிதாவிற்கு உதவிய அந்த தலைமை செயலக அதிகாரி யார் என்றும் இதுவரை யாரும் விசாரிக்கவில்லை.

அஜித்குமார் இறப்பில் இருந்து சில நாட்கள் தலைமறைவாக இருந்த நிகிதா இப்போது ரொம்ப கூலாக அமர்ந்து நியூஸ் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார். ஒரு வேலை நிகிதாவை காவல் துறையினர் தேடிவருவது உண்மை என்ற போதிலும் காவல்துறையின் கையில் சிக்காத நிகிதாவை எப்படி ஊடக நிருபர்கள் சந்தித்து பேட்டி எடுக்க முடியும்.

நிகிதாவை காவல்துறையினர் கடைசி வரை விசாரிக்கவே இல்லையோ என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது. இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் அரசு கல்லூரிக்கு சென்று அனைவரையும் சந்தித்து விட்டு மீண்டும் தனது விடுமுறையை இன்னும் 20 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டி விண்ணப்பித்து விட்டு வந்திருக்கிறார் நிகிதா. நிகிதாவை கல்லூரியில் பார்த்த பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனது மகனுக்காக உயிரை காப்பாற்றியவரை நடுத்தெருவில் துரத்தி விட்ட வைகோ!!

0

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் எப்படி வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுத்து மேலே கொண்டு வருவார்களோ அதேபோல அரசியலிலும் வாரிசுகள் முன்னுரிமை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். திமுக ஸ்டாலின் உதயநிதி, பாமக ராமதாஸ் அன்புமணி, ஓபிஎஸ் அவருடைய மகன் ஓபி ரவீந்திரநாத் வரிசையில் வைகோவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

வைகோ மகன் துரை வைகோ கட்சிக்குள் வந்தபிறகு அவரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னணி தலைவர்களை மதிக்காமல் தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு பதவி கொடுப்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். வைகோவுடன் ஆரம்பம் முதலே பயணித்தவர் மல்லை சத்யா. இவர் தற்போது மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து வருகிறார்.

தற்போது தனக்கு துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்றப்பார்க்கிறார் வைகோ என்னும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மல்லை சத்யா. குடும்ப அரசியலை எதிர்த்து மதிமுகவை ஆரம்பித்த வைகோ இப்போது துரைவைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார். துரோகி பட்டம் கொடுத்து என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள்.

வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என்று சொல்லும் அளவுக்கு வைகோ துணிந்து விட்டார். வாரிசு அரசியலுக்காகத்தான் என்னுடைய மகனுக்காகத்தான் இதை எல்லாம் செய்தேன் என்று வைகோ என்னை கட்சியை விட்டு துரத்தப்பார்ப்பது மனக்கவலை அளிப்பதாக பேட்டி கொடுத்துள்ளார் மல்லை சத்யா.