Home Blog Page 138

இனிதான் ஆட்டம் ஆரம்பம்! அன்புமணிக்கு எதிராக களமிறங்கும் டீம் – ராமதாஸ் உத்தரவு 

தமிழக அரசியலில் பாமக உட்கட்சி விவகாரம் தான் தற்போது ஹாட் டாப் என நாள்தோறும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில் மருத்துவர் ராமதாஸ் தனக்கான ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது எனவும் இனிமேல் நிறுவனரான எனக்கே அனைத்து அதிகாரமும் உண்டு என அவர் களத்தில் இறங்கி அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கியும், தனக்கான ஆதரவாளர்களை நியமித்தும் வருகிறார். அந்த வகையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் சிலர், பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் என பலரும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பாட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவராக இருந்தவர்களை நீக்கி தொண்டி ஆனந்தன் என்பவரை தலைவராக நியமித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சோழன் குமார் வாண்டையார் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணமாக பாட்டாளி சமூக ஊடகப்பேரவையை கட்டமைத்ததில் இவருடைய பங்கு அதிகம் எனவும், சிலரின் தூண்டுதலால் குறிப்பாக தற்போது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளராக செயல்படும் சிலரின் தூண்டுதலால் அவருடைய பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளனர். இதனால் பாஜகவிற்கு சென்ற அவர் திடீரென்று மருத்துவரை சந்தித்தது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சோழன் குமார் வாண்டையாருக்கு பாட்டாளி சமூக ஊடகப்பேரவை ஒருங்கிணைப்பாளர் பதவியை மருத்துவர் ராமதாஸ் வழங்கியது விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கூட்டத்தை நடத்தினார். அடுத்த நாளே மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவர் தொண்டி ஆனந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் உள்ளிட்டோர் ஊடகத்தில் எவ்வாறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் இனிமேல் தான் அன்புமணி ராமதாசுக்கு எதிரான செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்றும் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் தான் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேலம் அருள் எம் . எல் . ஏ பேச்சும் அமைந்தது என்று கூறப்படுகிறது.

இதுவரை அன்புமணி ராமதாஸ் தரப்பு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமை பண்பு இல்லாதவர் என்ற குற்றசாட்டை மட்டுமே மருத்துவர் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பினால் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக பக்கம் சாயும் தவெக! ஸ்டாலினை சந்திக்க விஜய் பிளான் – இறுதி நேரத்தில் மாறும் ஆட்டம் 

0

தமிழகத்தில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய நிலையில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடருகிறதா இல்லையா என இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனியே களம் காணும் சூழல் நிலவி வருகிறது. இதில் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் தன்னுடைய முதல் மாநாட்டில் பேசிய போது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகளை நேரிடையாக எதிர்த்து விமர்சனம் செய்தார்.

அதே போல தங்களுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என அறிவித்து கூட்டணிக்கு தயாராக உள்ளதை தெளிவுப்படுத்தினார். திமுக பாஜக கட்சிகளை விமர்சனம் செய்ததால் அக்கட்சிகளுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. அதே போல அதிமுகவை எங்கயும் விமர்சனம் செய்யாத காரணத்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருந்ததாகவும், இதற்காக சில கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளான ஆட்சியில் பங்கு, முதல்வர் பதவி உள்ளிட்ட காரணங்களால் இழுபறியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான் நிலைமையை சுதாரித்து கொண்ட பாஜக அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தது. இதனால் அதிமுக தவெக கூட்டணியானது பேச்சுவார்த்தைகளுடன் முடிந்து போனது. இந்நிலையில் தான் தவெக தனியாக போட்டியிடுமா அல்லது அறிவித்தது போல கூட்டணி அமைத்து போட்டியிடுமா என விவாதங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. உயர்மட்ட நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, அருண்ராஜ் உள்ளிட்டோருடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் பல கட்ட ஆலோசனைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில திமுக கூட்டணி பக்கம் போகலாம் என்று கொடுத்த ஆலோசனையின் பேரில் எதாவது ஒரு மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதுகுறித்து பேச முதல்வரிடம் அனுமதி வாங்கி அவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பலரும் பரந்தூர் விமான நிலைய பிரச்சனையை கையில் எடுக்கலாம் என கூறியதால் இது தொடர்பாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பானது பரந்தூர் விமான நிலையம் சார்ந்த பிரச்சனைக்காக என வெளியில் தெரிந்தாலும், உள் அரங்கில் திமுக கூட்டணிக்குள் தவெக நுழைவதற்கான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கு முன் தனிக் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில் பின்னர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். அதே போல விஜய் திமுகவை விமர்சனம் செய்திருந்தாலும் கட்சியின் நலன் கருதி திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இதற்கு வழக்கம்போல மற்ற திமுக கூட்டணி கட்சியினர் கூறும் பாஜக எதிர்ப்பை காரணமாக கூறிவிடலாம் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமதாஸ் குழந்தையா? அப்போ குழந்தை அறிவித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா? அருள் கிடுக்குப்பிடி கேள்வி

தமிழகத்தில் மற்ற அரசியல் விவகாரங்களை விட பாமக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்பா மகனின் அதிகார போட்டியாக ஆரம்பித்த விவகாரம் தற்போது நிர்வாகிகள் இரு அணியாக பிரிந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். அதே போல அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனக்கு ஆதரவான நபர்களின் பதவியை மருத்துவர் ராமதாஸ் பறித்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். இந்நிலையில் அதிகாரப் பூர்வமாக கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது, யார் நியமித்த நிர்வாகிகளை பின் தொடருவது என பல்வேறு குழப்பங்கள் கட்சியில் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் குழந்தையாக மாறி விட்டார். அவரை சுற்றியுள்ள 3 பேர் அவர்களின் சுயநலத்திற்காக கட்சியை பயன்படுத்துகின்றனர் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையான அவர் நியமித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா என கிடுக்கி பிடி கேள்வியை எழுப்பியுள்ளார். ஏற்கனவே காலையில் பால் போடுபவர், இலந்தை பழம் விற்றவர்களை அழைத்து வந்து பதவி கொடுத்துள்ளனர் என்று பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்து ராமதாஸ் அவர்களை குழந்தை என பேசிய விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!

0

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளில் திமுக மும்மரம் காட்டி வருகின்றது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் வீடு தோறும் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதும், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர்கள், அணி செயலாளர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில் ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கை முயற்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் மன்மொழி மானம் காப்பதற்கான அனைவரையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சியாக பார்க்க வேண்டும். அதனால் சாதி, மதம், கட்சி சார்பு என்று எந்த ஒரு வேறுபாடும் பார்க்காமல் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு இழைக்கப்படக்கூடிய அநீதிக்கு எதிராக மக்களை ஒன்று சேர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் ஓரணியில் தமிழ்நாடு தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன்.

38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் இது குறித்து செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அதன் பிறகு ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டங்களை ஒவ்வொரு மாவட்ட கழகத்திலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜூலை மூன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சியினர் வீடுகளுக்கும் நேரில் சென்று பேச வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லாமல் அனைவரையும் ஒன்று இணைக்கும் பணி என ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போதை பொருள் விவகாரம்; நடிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் சீமான்!

0

தமிழகத்தில் போதை பொருள் தொடர்பான அண்மையில் நடத்தப்பட்ட கைதானது மிகப் பெரிய அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற மோதலில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய செல்போன் உரையாடல்களை வைத்து பிரதீப் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கானா நாட்டைச் சேர்ந்த ஜானிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நுங்கம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான் போதை பொருட்கள் பயன்படுத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஆனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்த பொழுது அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பிரதாப் தயாரிப்பில் நடித்த படத்துக்காக சுமார் பத்து லட்சத்தை கேட்க சென்றபோது, அவர் கொக்கைன் போதை பொருள் கொடுத்து பழகியதாகவும் அதன் பிறகு தானே கேட்கும் அளவுக்கு அடிமையானேன், தெரியாமல் தவறு செய்து விட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மகனை கவனித்துக் கொள்ள ஜாமீன் வேண்டுமென்றும் ஸ்ரீகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது அதேபோல தான் நடிகர் கிருஷ்ணாவையும் காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

இரைப்பை அலர்ஜி மற்றும் வேகமான இதயத்துடிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றேன். அதனால் போதை பொருள் எடுத்துக் கொள்ள முடியாது என கிருஷ்ணா விளக்கம் தந்துள்ளார். போலீசார் அவரிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்திய பொழுது அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் மட்டும்தான் போதை பொருள் பயன்படுத்துகின்றார்களா.

இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா, கொக்கைன்  போன்ற போதை பொருள் கலாச்சாரம் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றது. ஏன் இவர்களை மட்டும் கைது செய்தீர்கள் போதை பொருள் பயன்படுத்திய மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்; பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!

0

திமுக கடந்த தேர்தலின் பொழுது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலமாக மகளிர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது.

பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தது. அதனால் கடந்த 2023 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியில் இருந்து தகுதி வாய்ந்த மகளிர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இத்திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 15ஆம் தேதி முதல் முதல்வர் முகாம் நடைபெறும், இந்த முகாமில் கலந்து கொண்டு மீண்டும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கூடுதல் பெண்கள் பயன்பெறும் வகையில் நான்கு சக்கரம் வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களின் பெண்களும் இந்த மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது வரை நான்கு சக்கர வாகனம் இருந்தால் தகுதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை அகற்றப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பெண்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசுத் துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

அதிமுக-தவெக கூட்டணி; வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா!

0

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. யார் கூட்டணியில் யார் சேருவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் அவருடைய இலக்கு 2026 தேர்தல் தான் என ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கூறிவரும் நிலையில் அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என தற்போது வரை புதிராகவே இருக்கின்றது.

விஜய் சார்பாக தொண்டர்கள் அனைவரும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதனால் மக்களின் ஆதரவு விஜய்க்கு முழுவதுமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் 2026 அதிமுகவுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

மக்களுடனான கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கான நிறைய வாய்ப்புகளை மக்கள் கொடுத்துள்ள நிலையில் மக்களோடு கூட்டணி தான் எங்களுக்கு வேண்டும் அரசியல் கூட்டணியில் பயணிக்க நாங்கள் வரவில்லை மக்களுடனான கூட்டணியில் தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம் என கூறியிருக்கின்றனர்.

அதிமுக-பாஜகவில் இருந்து விலகி ஒரு தேர்தலை சந்தித்த நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இரண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அதனால் தவெக-அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு தனியான நம்பர் பிளேட் சிஸ்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கு தனி வகையான பதிவு எண்  (நம்பர் பிளேட்) வடிவமைப்பு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இந்த முன்மொழிவு மூன்று வகை வாகனங்களுக்கும் பொருந்தும்:

  • வணிக வாகனங்கள்

  • தனிப்பட்ட (பிரைவேட்) வாகனங்கள்

  • வாடகை வாகனங்கள் (ரென்டல் காப்கள்)

வணிக ஹைட்ரஜன் வாகனங்களுக்கு:

  • நம்பர் பிளேட்டின் மேல் பகுதி பச்சை, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்கள் கொண்டதாக இருக்கும்.

  • மேலும் இதில் இடம்பெறும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

தனியார் ஹைட்ரஜன் வாகனங்களுக்கு:

  • மேல் பகுதி பச்சை, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்களிலும் – எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் உள்ளதாகவும் இருக்கும்.

வாடகை ஹைட்ரஜன் வாகனங்களுக்கு:

  • மேல் பகுதி கருப்பு, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்களை கொண்டதாக இருக்கும்.

  • மேலும் இதில் இடம்பெறும் எண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இந்த வகைப்படுத்தல்கள் மூலமாக பசுமை எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களை மற்ற வாகனங்களிலிருந்து வேறுபடுத்தவும், எளிதில் அடையாளம் காணவும் முடியும்.

பசுமை சக்திக்காக தொடரும் முயற்சி:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஹைட்ரஜன் எரிபொருளை இந்தியாவின் எதிர்கால எரிசக்தியாக புகழ்ந்து பேசினார். முனிசிபல் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், இதுவே குறைந்த செலவில் சிறந்த மாற்று எரிசக்திக்கான தீர்வாக இருக்கும் எனவும் கூறினார். அவர் சொந்தமாக ஹைட்ரஜன் வாகனமே ஓட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனங்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகள்:

2026 ஜனவரி 1 முதல், எந்த எஞ்சின் அளவையும் பொருட்படுத்தாமல், அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும் (பைக்/ஸ்கூட்டர்) ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக்கப்படுகிறது. இது வாகனம் திடீரென நிறுத்தும் போது சறுக்காமல் பாதுகாப்பாக நிற்க உதவும்.

மேலும், புதிய இருசக்கர வாகனம் வாங்கும் போது, பாதுகாப்பு தரநிலையை பூர்த்தி செய்யும் இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்க தயாரிப்பாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

இந்த நவீன கட்டுப்பாடுகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் அமையப்பட்டுள்ளது.

பாமக பிளவுக்கு இவங்க தான் முக்கிய காரணம்.. அப்பாவுக்கு சொல்லி தராங்கா!! பாஜகவுடன் கூட்டணிக்கு நான் காரணமில்லை- அன்புமணி!!

0

PMK: பாமக கட்சியில் தலைமைக்காக அப்பா மகனுக்கிடையே போட்டி நிலவில் வரும் வேலையில் ஒருவருக்கொருவர் எதிர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகளை ஒருவர் பணி அமர்த்துவதும் மற்றொருவர் அவரை நீக்குவதென்று செய்து வருவதால் நிர்வாகிகள் அனைவரும் குழம்பி தவிக்கின்றனர். இதற்கு ஒரு முடிவில்லாமல் உள்ளது. அதிலும் ராமதாஸ், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க தனது மனைவியுடன் வந்து மிகவும் வற்புறுத்தி கேட்டதாக செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

தற்போது அதற்கு அன்புமணி மறுப்பு தெரிவித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், எனது அப்பா கூறியது போல் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எதுவும் நான் பேசவில்லை. அவரே தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க சொன்னார். அதேபோல தற்போது விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எனது அப்பா மீது திடீரென்று பாசம் பொங்கி உள்ளது. இவை அனைத்தும் திமுகவின் சூழ்ச்சியால் தான் நடக்கிறது. தற்போது நடைபெற்று வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கியமான மூன்று பேர் தான் காரணம்.

அவர்களின் சுய லாபத்திற்காக ராமதாசை பயன்படுத்துகின்றனர். தற்போது அவருக்கு வயது முதிர்வு ஆகிவிட்டது அதனால் குழந்தையாகவே அவர் மாறிவிட்டார்.அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே. அதிலும் தைலாபுரத்திற்கு சி வி சண்முகம் வந்த போது எதற்காக இங்கு வந்துள்ளார் என்று கேட்டேன். சிவி இங்கு பத்திரிக்கை வைப்பதற்காக தான் வந்தார் என்று ராமதாஸ் கூறினார். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்ததாக அதன் பின்னர் தெரிவித்தனர்.

வயது முதிர்ந்த காலத்தில் மருத்துவர் ராமதாசை 3 பேர் அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உதயநிதி காலில் விழுந்த சேகர்பாபு!! தீயாக பரவும் வைரல் வீடியோ!!

0

DMK: திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் உதயநிதிகிடையே அவ்வபோது தேவையற்ற வாக்குவாதங்கள் நிலவுவதுண்டு. அதிலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் உதயநிதிக்கும் இடையே பெரும் மோதல் போக்கு இருந்தது. இந்த மோதல் போக்கானது உட்க்கட்சிக்குள் முடிந்து விட்டாலும் தற்போது வரை அது ரீதியான பேச்சு இருந்து தான் வருகிறது.

அதிலும் சேகர் பாபு ஸ்டாலின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கம். குறிப்பாக அவரது மனைவிதான் இவருக்கு பெரிய தலைவர் என்றே கூறலாம். இவர்களுக்குள் உருவான மோதல் ஸ்டாலினிடம் செல்வதற்கு முன் அவரது தாயின் ஆதரவு முழுவதுமே சேகர்பாபு பக்கம்தான் இருந்ததாம். சமீபத்தில் கூட துர்கா ஸ்டாலினை வழிய அனுப்பி வைத்த சேகர் பாபு கார் கதவை மூடும் பாணியில் அவர்களது காலை தொட்டு வணங்கினார்.

அந்த வீடியோ இணையத்தில் பரவியது. அதேபோல தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் சேகர்பாபு யாரும் பார்க்கவில்லை என நினைத்து உதயநிதியின் காலை தொட்டு வணங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன் நடந்த விவாதத்திற்கு பொதுவெளியில் இப்படி சேகர்பாபு மன்னிப்பு கேட்பது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.