Home Blog Page 174

உங்களுக்கு அடிக்கடி யூரின் வருதா? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

0

உடலில் குவியும் கழிவுகளை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி வருகின்றோம்.நாம் சிறுநீர் வெளியேற்றும் போது அதன்நிறம்,வாசனை மற்றும் அளவு ஆகியவற்றை அவசியம் கவனிக்க வேண்டும்.சிலருக்கு குறைவான அளவு சிறுநீர் வெளியேறும்.

தண்ணீர் பருகாமை,உடல் சூடு காரணங்களால் குறைவான அளவு சிறுநீர் வெளியேறும்.அதேபோல் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகளவு சிறுநீர் வெளியேறும்.அளவிற்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுகிறது என்றால் நிச்சயம் நீங்கள் அலட்சியம் எதுவும் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

டயாலிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்கும்.அதேபோல் சிறுநீர்ப்பாதையில் தொற்றுகள் இருந்தால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணங்கள்:

1)மருந்து பக்க விளைவுகள்
2)சிறுநீர் பாதை தொற்று
3)நீரிழிவு நோய்
4)கர்ப்பம்
5)வயது முதுமை
6)சிறுநீர் கல்
7)ஈஸ்ட் தொற்று
8)பாக்டீரியா தொற்று
9)சிறுநீரக புற்றுநோய்
10)அதிக தண்ணீர் பருகுதல்

அடிக்கடி சிறுநீர் வருவதை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:

**நெல்லிக்காய்
**சீரகம்
**தண்ணீர்

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து நெல்லிக்காய் மற்றும் சீரகத்தை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படாமல் இருக்கும்.

**துளசி
**தண்ணீர்

ஒரு கைப்பிடி துளசியை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.இதனை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து வடித்து பருகினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படாமல் இருக்கும்.

நாள்பட்ட வெள்ளைமுடி 5 நிமிடத்தில் கருப்பாக.. ஒரே ஒரு பீட்ரூட் போதும்!!

0

உங்கள் தலையில் புதிதாக எட்டி பார்த்துள்ள வெள்ளை முடி அதாவது இளநரையை மீண்டும் கருமையாக மாற்ற கெமிக்கல் இல்லாத ஒரு நேச்சுரல் ஹேர் பேக் ட்ரை பண்ணுங்கள்.

இதை தயாரிக்க பீட்ரூட்,செம்பருத்தி இலை உள்ளிட்ட ஆறு பொருட்கள் தேவைப்படுகிறது.நீங்கள் தொடர்ந்து இந்த ஹேர்பேக் பயன்படுத்தி வந்தால் உங்கள் நரைமுடி கரு கருன்னு மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)செம்பருத்தி இலை – நான்கு
3)மாவிலை – நான்கு
4)நெல்லிக்காய் – நான்கு
5)மருதாணி இலை – ஒரு கப்
6)காபி தூள் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2.பிறகு நான்கு செம்பருத்தி இலை,நான்கு மாவிலை,நான்கு நெல்லிக்காய்,ஒரு கப் மருதாணி இலை ஆகியவற்றை காய்ந்த நிலையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

3.காய வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு பீட்ரூட் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

4.இப்பொழுது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அரைத்த பொருட்கள் அனைத்தையும் கொட்டி கிளறுங்கள்.பிறகு இரண்டு தேக்கரண்டி காபி தூளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு தயாரித்த கலவையை ஆறவிடுங்கள்.

5.பிறகு இதனை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடுங்கள்.தயாரித்த ஹேர்பேக் முடியில் நன்கு ஊறிய பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசுங்கள்.இவ்வாறு செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடி கருப்பாக மாறும்.

6.இந்த ஹேர் பேக்கை ஒருமுறை பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை முடி கருமையாக இருக்கும்.தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரைமுடி நிரந்தரமாக கருமையாகும்.

இதை தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கனவு வந்தால் என்ன பலன் கிடைக்கும்?

0

மனிதர்களுக்கு கனவு வருவது பொதுவான ஒரு விஷயமாகும்.சிலது நல்ல கனவாக இருக்கலாம்.சிலது பயம் ஏற்படுத்தும் கெட்ட கனவாக இருக்கலாம்.ஆனால் எந்த கனவாக இருந்தாலும் அதற்கு என்று பலன்கள் இருக்கின்றது.உங்களுக்கு வரும் கனவுகளுக்கான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கனவில் இறந்தவர்கள் அழுவது போன்று வந்தால் அது உங்களுக்கு கெட்டது நடப்பதற்கான அறிகுறியாகும்.இந்த கனவு வந்தால் அருகில் இருக்கின்ற கோயிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்வது நல்லது.

கனவில் ஆலமரம் வந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.அதேபோல் அத்திமரம் கனவில் வந்தால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

உங்கள் கனவில் கடவுள் தோன்றினால் வாழ்வில் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தம்.கனவில் மழை வந்தால் பண வரவு அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் அருவி,குளம் போன்ற நீர்நிலைகள் வந்தால் மங்களகரமான விஷயங்கள் நடக்கும் என்று அர்த்தம்.

கனவில் புலி வந்தால் உங்களுடைய தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் மாம்பழம் வந்தால் உங்கள் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

ஆன்மீக பயணம் மேற்கொள்வது போன்ற கனவு வந்தால் உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் தாமரை பூ வந்தால் உங்களது பிரச்சனைக்கு முடிவு கிட்டப்போகிறது என்று அர்த்தம்.புல்லாங்குழல் கனவில் வந்தால் மங்களகரமான செயல்கள் நடக்கும் என்று அர்த்தம்.

கனவில் யானை வந்தால் உங்கள் வலிமை அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.நிர்வாணமாக இருப்பது போன்ற கனவு உங்களுக்கு வந்தால் கஷ்டம்,அவமானம் வரப் போகிறது என்று அர்த்தம்.திருமணம் நடப்பது போன்ற கனவு வந்தால் வாழ்வில் அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.

மதிய நேர உணவிற்கு பிறகு தூக்கம் சொக்கிகிட்டு வர காரணம் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!!

0

உடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.தினமும் உணவு உட்கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.நமக்கு ஆற்றல் தரும் உணவை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அவை ஆபத்தாக மாறிவிடும்.

சிலர் மதிய நேரத்தில் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.மதிய நேரத்தில் உணவு சாப்பிட்ட பிறகு உடல் சோர்வு,மந்த உணர்வு ஏற்படுவது பொதுவான ஒரு விஷயமாக இருந்தாலும் மதிய உறக்கத்தை அனுபவித்து வருபவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் வர காரணங்கள்:

*இரவு தூக்கமின்மை பிரச்சனை
*தைராய்டு பாதிப்பு
*இரத்த சோகை
*வயது முதுமை

மதிய உறக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்:

நாம் மதிய நேரத்தில் அதிகளவு உணவு சாப்பிட்டால் உடல் சோர்வு ஏற்படும்.இதனால் வேலை மீதான நாட்டம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

மதியம் உணவு சாப்பிட்ட பிறகு உறங்கும் பழக்கம் இருந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும்.இதனால் உடல் எடை கூடிவிடும்.

மதிய உணவு சாப்பிட்டு பிறகு உறங்கினால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.குடல் இயக்கங்கள் மோசமாகி வயிறு உப்பசம்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மதிய உறக்கத்தை கட்டுப்படுத்த வழிகள்:

வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த காய்கறி,பழங்களை சாப்பிட வேண்டும்.

உடலுக்கு தேவையான தண்ணீர் பருக வேண்டும்.இரவில் நேரமாக தூங்க பழக வேண்டும்.அதேபோல் யோகா,தியானம் போன்றவற்றை செய்தால் பகல் நேரத்தில் உடல் சோர்வாகமல் இருக்கும்.

வழியில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்று ஏன் சொல்றாங்கனு தெரியுமா?

0

இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் இந்தியாவில் மட்டும் மூட நம்பிக்கைகளில் மீதான நம்பகத் தன்மை குறைந்தபாடில்லை.நம் மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அனைத்திலும் சகுனம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

சுப நிகழ்வுகளுக்கு செல்லும் போது சகுனம் பார்ப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுப நிகழ்வில் கெட்ட சகுனம் ஏற்பட்டால் அதை நிறுத்திவிடவும் சிலர் தயங்க மாட்டார்கள்.எந்த ஒரு காரியத்திற்கு செல்லும் முன் பூனை குறுக்கே போனால் அது கெட்ட சகுனம் என்று செல்லும் வேலையை நிறுத்தவிடுகின்றனர்.

சிலர் பூனை குறுக்கே போனால் உடனே வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தவிட்டு தான் செல்வார்கள்.பூனை குறுக்கே சென்ற காரியம் உருப்படாது என்று சிலர் சொல்கின்றனர்.இதற்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் அறிந்தால் நிச்சயம் உங்கள் மூட நம்பிக்கை உடைந்து போகும்.

முந்திய காலத்தில் இரவில் மாட்டு வண்டி,குதிரை வண்டியில் தான் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.இரவில் குதிரை,மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் வரும் பூனை அதன் கண்களுக்கு தெரியாது.பூனைகள் கண்கள் இருட்டில் மட்டும் லைட் போட்டது போன்று தெரியும் என்பதால் மாடு,குதிரை பயந்து மிரண்டுவிடும்.பூனை மட்டுமின்றி புலி,சிறுத்தை,சிங்கம் போன்ற விலங்குகளுக்கும் இரவில் கண்கள் லைட் போட்டது போன்று மின்னும்.இதனால் எதிரில் வருவது பூனையா இல்லை புலி,சிங்கமா என்பதில் குழப்பம் ஏற்பட்டு அச்சத்தில் மிரளும்.இது நடக்காமல் இருக்க வண்டிக்காரர் சிறிது நேரம் குதிரை,மாடு ஆகியவற்றிற்கு தண்ணீர் குடித்து ஓய்வெடுக்க வைப்பார்கள்.

இந்த நிகழ்வுதான் காலப்போக்கில் பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடிக்க வேண்டும்.சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு வேலையை தொடங்க வேண்டுமென்று மாறிவிட்டது.எனவே இனி பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் பார்ப்பதை தவிருங்கள்.

SC/ST மாணவர்களுக்கு குட் நியூஸ்!! கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

0

ஏழை எளிய மாணவர்களின் நலனிற்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது.அதேபோல் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் வங்கி கணக்கில் உதவித் தொகை செலுத்தி வருகிறது.

மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அதிகரிக்க தமிழக அரசு தொடர்ந்து உதவித் தொகை,ப்ரீ பஸ் பாஸ் வழங்கி வருகிறது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்று சீருடை,புத்தகம் போன்றவற்றை வழங்கி வரும் தமிழக அரசு தற்பொழுது பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலததுறை மூலமாக SC மற்றும் ST மாணவர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவ மாணவியர் இந்த மாத இறுதிக்குள் அதாவது மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான மாணவ,மாணவியர் http://umis.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிரப்பி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

1)வருமானச் சான்றிதழ்
2)சாதி சான்றிதழ்
3)ஆதார் அட்டை
4)வங்கி கணக்கு எண்

2024-2025 ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்லூரி ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரசவத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் குறைய இந்த தவறுகளே காரணம்!!

0

திருமணமான புதியதில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கின்ற அன்பு பிணைப்பு குழந்தை பெற்ற பிறகு குறைந்துவிடுகிறது.குழந்தை பெற்ற பின்னர் கணவன் மனைவிக்கு இடையே ஒரு ப்ரேக் ஏற்படுவது அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது.

குழந்தை பெற்ற பின்னர் கணவன் மனைவிக்கு புதிய பொறுப்புகள் வருகிறது.இருவரின் வாழ்க்கையும் முற்றிலுமாக மாறிவிடுகிறது.கணவன் மனைவிக்கு பொருளாதார ரீதியான தேவை அதிகரிக்கின்றது.குழந்தை பிறப்பதற்கு முன் மற்றும் குழந்தை பிறந்த பிறகு என்று தம்பதிகள் வேறுபட்ட வாழ்க்கையை வாழத் தொடங்குகின்றனர்.

குழந்தை பெற்ற பின்னர் கணவன்,மனைவி தங்கள் பொறுப்பை உணர்ந்து வாழ்க்கையை நகர்த்தினால் உறவில் எந்தஒரு இடைவெளியும் ஏற்படாது.பிரசவத்திற்கு பிறகு பெண்கள் உடல் மற்றும் மனம் சார்ந்த பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

அதேபோல் ஆண்கள் பொருளாதார ரீதியான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.ஆண் மற்றும் பெண் மனநிலை வேறுபட்டு இருப்பதால் சண்டை,மனக்கசப்பு போன்ற விஷயங்கள் ஏற்படும்.குழந்தை பெற்ற பிறகு கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்க நிச்சயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

குழந்தையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.பெண் மட்டும்தான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் இருந்து ஆண்கள் விடுபட வேண்டும்.

பிரசவித்த பெண்களுக்கு நிச்சயம் எமோஷனல் சப்போர்ட் தேவைப்படுகிறது.குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர்.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம்,மனச் சோர்வு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.பெண்களின் தூக்கச் சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.இதன் காரணமாக உடல் பருமன்,மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

மனைவிக்கு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கணவன் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.இருவரும் தங்கள் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும்.அதேபோல் பொருளாதார பிரச்சனைக்கு இருவரும் சேர்ந்து சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.

இந்த ஒரு ஆவணம் இருந்தால்.. புதிய கேஸ் இணைப்பை எளிதில் பெறலாம்!!

0

தற்பொழுது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புதிய இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.ஏழ்மையில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

இலவச கேஸ் இணைப்பு பெற தகுதி:

1)விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2)விண்ணப்பத்தார் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

3)இதுவரை கேஸ் இணைப்பு பெறாதவராக இருக்க வேண்டும்.

4)மிகவும் பிற்படுத்தப்படுத்த வகுப்பை சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும்.

5)வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பிரதான் மந்திரி உஜ்வலா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

**ஆதார் கார்டு
**ரேஷன் கார்டு
**வங்கி கணக்கு எண்
**இருப்பிடச் சான்றிதழ்

பிரதான் மந்திரி உஜ்வலா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

http://www.pmuy.gov.in/ujjwala2.html என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கேஸ் இணைப்பு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து Register Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு பெயர்,பயன்பாட்டில் இருக்கின்ற தொலைபேசி எண்,மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்சா கோடு ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும்.

பிறகு விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு தேவைப்படும் ஆவணங்களை இணைத்து தேர்வு செய்த கேஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு இலவச கேஸ் அடுப்பு மற்றும் ஒரு சிலிண்டர் வழங்கப்படும்.

தினமும் பால் குடிக்கும் குழந்தைகளின் உயரம் அதிகரிக்குமா? உண்மை என்ன?

0

குழந்தைகளின் எடை மற்றும் உயரம் வயதிற்கேற்றபடி இருக்க வேண்டும்.சிலர் உயரமாக வளர்வார்கள்.சிலர் உயரம் குறைவாக இருப்பவர்கள்.குழந்தைகளின் உயரம் என்பது அவர்களின் மரபணு சார்ந்த ஒன்றாக இருக்கிறது.

குழந்தைகளின் முன்னோர்கள் உயரமாக இருந்தால் அவர்களும் உயரமாக வளர்வார்கள்.ஒருவேளை குழந்தையின் முன்னோர் உயரம் குறைவாக இருந்திருந்தால் குழந்தையும் உயரம் குறைவாக வளரத் தொடங்குவார்கள்.

குழந்தைகள் உடலில் இருக்கின்ற ஹார்மோன்களில் பிரச்சனை இருந்தால் அவர்களின் உயரத்தில் பாதிப்பு ஏற்படும்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களின் வளர்ச்சி தடைபடும்.

குழந்தைகள் உடலில் சுரக்கும் பிட்யூட்டரியின் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கச் செய்துவிடும்.இதனால் குழந்தைகள் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.வளரும் பிள்ளைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் அவசியம் பருக வேண்டும்.குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியம் மேம்பட,எலும்புகள் வளர்ச்சி அடைய கால்சியம் நிறைந்த பால் பருகுவது அவசியமாகிறது.

குழந்தைகளின் எலும்புகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்கும்.பால் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.எனவே குழந்தைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் பால் கொடுப்பதை பெற்றோர் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

குழந்தைகளின் உயரத்தை ஊக்குவிக்கும் பால் குடிக்க கொடுக்கலாம்.இது தவிர புரதம் நிறைந்த முட்டை,சோயா பால்,மீன்,இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.ஊற்றவைத்த சுண்டல்,வேர்க்கடலை,உளுந்து பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உயரம் அதிகரிக்கும்.

மறைக்கப்பட்ட ராஜதந்திரமா? 2008 பெய்ஜிங் காந்தி-பூட்டோ சந்திப்பை காங்கிரஸ் விளக்க வேண்டும்!

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் சீனாவின் உலகளாவிய அறிமுக விழாவாகக் கருதப்பட்டது – விளையாட்டு, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச பங்கேற்பின் ஒரு பிரமாண்டமான காட்சிப்படுத்தல் என்றே கருதப்பட்டது. ஆனால் அரங்கத்தின் வெளிச்சத்திற்கு அப்பால், தெற்காசியாவின் மிக முக்கியமான இரண்டு அரசியல் குடும்பங்களுக்கு இடையே அமைதியான மற்றும் அடையாள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடந்தது.

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது, இந்திய தேசிய காங்கிரஸின் அப்போதைய தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருடன் பெய்ஜிங்கில் இருந்தனர். அதே நேரத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அவரது சகோதரிகள் பக்தவார் மற்றும் ஆசிஃபா மற்றும் ஜஹாங்கிர் பதர் மற்றும் ரெஹ்மான் மாலிக் உள்ளிட்ட மூத்த பிபிபி தலைவர்களும் சீன தலைநகரில் கலந்து கொண்டனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) அழைப்பின் பேரில், ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இரு பிரதிநிதிகளும் பெய்ஜிங்கில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்று ரீதியாக அந்தந்த நாடுகளில் செல்வாக்கு மிக்க இரு குடும்பங்களும் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த ஒரு சுருக்கமான சந்திப்பை நடத்தினர். அந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் தாயார் பெனாசிர் பூட்டோவின் படுகொலை குறித்து சோனியா காந்தி பூட்டோ உடன்பிறப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் பொது அறிக்கைகளில், ரெஹ்மான் மாலிக் இந்த சந்திப்பை அன்பானதாகவும் தனிப்பட்டதாகவும் விவரித்தார், எந்த அரசியல் விவாதங்களும் நடத்தப்படவில்லை என்பதை வலியுறுத்தினார். பகிரப்பட்ட துக்கம், குடும்ப நினைவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் சைகை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) CPC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதாகவும், அரசியல் மற்றும் சர்வதேச விஷயங்களில் ஆலோசனைகளை அனுமதிப்பதாகவும் பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் ஒருபோதும் முழுமையாக பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், அது அரசியல் ஆர்வத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது.

அந்த ஆண்டின் பிற்பகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி CPC உடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் முறையான விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இப்போது, ​​18 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்த நிலையில், இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிவந்துள்ளது, இது மீண்டும் கவனத்தையும் விவாதத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படம் – கடந்த வாரத்தில் பரவலாகப் பரப்பப்பட்டது – இது போன்ற முறைசாரா ஈடுபாடுகளின் தன்மை மற்றும் தாக்கங்கள் பற்றிய புதிய கேள்விகளைத் தூண்டியுள்ளது, குறிப்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள உணர்ச்சிகரமான இயக்கவியலைக் கருத்தில் கொண்டு விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்தச் சந்திப்பு ஒரு அதிகாரப்பூர்வ ராஜதந்திர நிகழ்வாக இல்லாவிட்டாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் சீன மண்ணில் நடைபெற்றதும், பிராந்திய செல்வாக்கின் நீண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு அரசியல் வம்சங்களின் வாரிசுகள் இதில் ஈடுபட்டதும் பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

சில விமர்சகர்கள் மற்றும் இணைய பயனர்கள், குறிப்பாக சர்வதேச சூழலில் இந்தியா-பாகிஸ்தான் பிளவின் இரு தரப்பிலிருந்தும் உயர் மட்ட அரசியல் பிரமுகர்கள் இதில் பங்கேற்றதால், சந்திப்பின் நோக்கம் மற்றும் சூழலை தெளிவுபடுத்துமாறு காங்கிரஸ் கட்சியைக் கேட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் புதுப்பிக்கப்பட்ட புழக்கம் குறித்து காங்கிரஸிடமிருந்து இன்னும் முறையான பதில் இல்லை. இந்தப் பதிவு தொடர்ந்து வைரலாகி வருவதால், ஒரு காலத்தில் வெறும் இரங்கல் கூட்டம் என்று விவரிக்கப்பட்டது இப்போது பொதுமக்களின் கூர்மையான ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. திரைக்குப் பின்னால் உள்ள சாத்தியமான அரசியல் சாயங்கள் மற்றும் ரகசிய தொடர்புகள் மீது கவனம் திரும்பியுள்ளது. இன்றைய சூழலில் குறிப்பிடத்தக்க அரசியல் மதிப்பைக் கொண்ட இந்த குறியீட்டு சைகைகளின் தன்மையை காங்கிரஸ் தெளிவாக விளக்க வேண்டும்.