Home Blog Page 178

சுருண்ட நரம்புகள் நேராக.. இந்த இரண்டு வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்!!

0

உங்களில் பலர் சில நேரம் நரம்பு சுருட்டல் பிரச்சனையை சந்தித்திருப்பீர்கள்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ட்ரை பண்ணுங்க.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உலர் திராட்சை – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்து அதில் 10 உலர் திராட்சை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.இந்த உலர் திராட்சை பானத்தை மறுநாள் காலையில் பருகிவிட்டு உலர் திராட்சையை மென்று சாப்பிட வேண்டும்.

இல்லையேல் இந்த உலர் திராட்சையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் கலந்து பருகலாம்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நரம்பு சுருட்டல்,நரம்பு தளர்ச்சி பிரச்சனை முழுமையாக குணமாகும்.

நரம்பு சுருட்டல் குணமாக மற்றொரு வீட்டு வைத்தியம்:-

1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
3)துளசி இலைகள் – 20
4)வசம்புத் தூள் – கால் தேக்கரண்டி

கிண்ணத்தில் மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.

பிறகு துளசி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை மஞ்சள் தூளில் போட்டு கலக்குங்கள்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி வசம்புத் தூளை கொட்டி கலக்குங்கள்.இந்த கலவையை நரம்பு சுருட்டல் மீது பற்றுப்போட்டு வந்தால் அவை சீக்கிரமாக குணமாகும்.

பேம்லி மெம்பர்ஸ் ஒரே சோப் பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த ஆபத்து ஏற்படலாம்!!

0

உடல் அழுக்குகளை போக்க சோப் பயன்படுத்தி குளிக்க வேண்டியது முக்கியம்.சோப் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.தற்பொழுது பல பிராண்டுகளில் சோப் கிடைக்கிறது.சில குடும்பம் ஒரே பிராண்ட் சோப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.இன்னும் சில குடும்பத்தில் ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

இப்படி ஒரே சோப்பை பலர் பயன்படுத்துவது நல்லதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.ஒரே சோப் பயன்படுத்துவதால் சருமம் என்னாகும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.ஒரே சோப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள்,வைரஸ் போன்ற தொற்றுகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவிவிடும்.

ஒருவருக்கு தேமல்,படர் தாமரை போன்ற சருமப் பிரச்சனை இருந்தால் அவர்கள் பயன்படுத்தும் சோப்பை நாம் பயன்படுத்தினால் எளிதில் அவை தொற்றிவிடும்.ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றவர் பயன்படுத்தினால் பாலியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றவர் பயன்படுத்தினால் கிராஸ் இன்பெக்சன் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவொருவருக்கும் சரும வகை ஒரே மாதிரி இருப்பதில்லை.ஒருவருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கலாம்.ஒருவருக்கு வறண்ட சருமம் இருக்கலாம்.எனவே அவரவர் சரும வகையை பொறுத்து சோப் வாங்கி பயன்படுத்துங்கள்.

அனைவரும் ஒரே சோப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு அவரவருக்கென்று தனி சோப் வாங்கி பயன்படுத்துவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.அதேபோல் சருமத்திற்கு சோப் பயன்படுத்திய பிறகு அதை தண்ணீர் ஊற்றி கழுவி ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.இப்படி செய்தால் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் உருவாகாமல் இருக்கும்.அதேபோல் குளித்த முடித்தவுடன் சோப்பை பாக்ஸில் போட்டு மூடி வைக்க வேண்டும்.

இந்த கஷாயம் ஒரு கிளாஸ் குடித்தால்.. கிட்னியில் ஒரு கல் கூட இருக்காது!!

0

தற்பொழுது சிறுநீரக கல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது.இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் சிறுநீர் கழிப்பதில் கடும் சிரமம் ஏற்படும்.சிறுநீரக கற்களை கரைக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

சிறுநீரக கல் அறிகுறிகள்:-

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் உணர்வு

அடிவயிற்று வலி

இடுப்பு பகுதியில் இழுத்து பிடித்தல்

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)மூக்கிரட்டை கீரை – ஒரு கப்
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

மூக்கிரட்டை கீரையை ஒரு கைப்பிடி அளவு பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் மூக்கிரட்டை கீரையை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

மூக்கிரட்டை கீரை பானம் இரண்டு நிமிடங்கள் கொதித்த பிறகு அரை தேக்கரண்டி சீரகம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.இதனை கிண்ணத்திற்கு வடிகட்டி பருகினால் கிட்னி கற்கள் கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு பாத்திரம் ஒன்றில் இதை போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.

வெந்தய கீரை பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த பானத்தை வடித்து சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் கிட்னி கற்கள் கரையும்.

முக அழகை கெடுக்கும் பூனை முடிகளை வேரோடு அகற்றும் மேஜிக் பேஸ்ட்!!

0

பெண்கள் முகத்தில் ஆண்களை போன்று முடி இருந்தால் நன்றாக இருக்காது.பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.அப்படி இருக்கையில் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற அதிக செலவு செய்து க்ரீம்,பவுடர் பயன்படுத்த வேண்டாம்.இதற்கு வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:-

1)இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு
2)அரை தேக்கரண்டி கடுகு எண்ணெய்
3)கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள்
4)ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பால்

செய்முறை விளக்கம்:-

**முதலில் கோதுமையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இதை ஜல்லடை கொண்டு சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.

**பிறகு கிண்ணம் ஒன்றில் இந்த கோதுமை மாவை கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அரை தேக்கரண்டி கடுகு எண்ணெயை அதில் ஊற்றி கலக்குங்கள்.

**அடுத்து கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் கிழங்கு பொடியை அதில் சேர்க்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பாலை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

**இந்த கலவை பேஸ்ட் பதம் வரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.இதை முகத்தில் வளர்ந்துள்ள தேவையில்லாத முடிகள் மீது அப்ளை செய்து 10 நிமிடங்கள் காயவிட வேண்டும்.பிறகு இதை பெயர்த்தால் தேவையில்லாத முடிகள் அப்படியே நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு
2)ஒரு தேக்கரண்டி சர்க்கரை

செய்முறை விளக்கம்:-

**கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை போட்டு கலந்து கொள்ளுங்கள்.

**அதன் பிறகு காய்ச்சாத பால் சிறிதளவு ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

**பின்னர் இதனை நல்ல தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை எளிதில் அகற்றிவிடலாம்.

வீட்டில் பல்லி கரப்பான் பூச்சி நடமாட்டம் ஸ்டாப் ஆக இதை ஒரு இரவு செய்யுங்கள்!!

0

உங்களில் பலரது வீடுகளில் பல்லி,கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணுங்க.

தேவையான பொருட்கள்:-

1)ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று
2)கற்பூரம் – இரண்டு
3)டாலகம் பவுடர் – ஒரு தேக்கரண்டி
4)வெது வெதுப்பான தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி டால்கம் பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் இரண்டு கற்பூரத்தை இடித்து தூளாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு வெது வெதுப்பான தண்ணீர் ஒரு கிளாஸ் அளவிற்கு ஊற்றி கலக்குங்கள்.இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்கு கலக்குங்கள்.

பிறகு காரப்பன் பூச்சி,பல்லி நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இதை ஸ்ப்ரே செய்யுங்கள்.இப்படி செய்தால் அதன் நடமாட்டம் முழுமையாக ஒழியும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு – ஒரு தேக்கரண்டி
2)புதினா இலைகள் – 10
3)விளக்கெண்ணெய் – 50 மில்லி
4)வெது வெதுப்பான தண்ணீர் – ஒரு கப்
5)ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் 10 புதினா இலைகள் மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகு போட்டு சூடாக்க வேண்டும்.

இந்த எண்ணெய் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து பாடலிலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த எண்ணை ஒரு தேக்கரண்டி அளவு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதனை வீட்டில் பல்லி,கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் நடமாட்டத்தை ஒழித்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)இரண்டு முட்டை ஓடு
2)நான்கு கிராம்பு

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு முட்டை ஓட்டை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு நான்கு கிராம்பை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கரப்பான் பூச்சி,பல்லி நடமாடும் இடத்தில் தூவினால் அவற்றின் தொல்லைகள் ஒழியும்.

தலையில் சிக்கு வாடை வீசாமல் இருக்க.. எண்ணெய் பசை குறைய இந்த பேஸ்டை தடவி குளிங்க!!

0

உங்கள் தலையில் வீசும் சிக்கு வாடை,அழுக்கு,எண்ணெய் பசை அனைத்தும் நீங்கி தலை முடி பளபளப்பாக மாற இந்த குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஒரு கப் புதினா தழை
2)இரண்டு தேக்கரண்டி தயிர்
3)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் புதினா தழைகளை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் சிறிதளவு ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு இந்த புதினா விழுதை கிண்ணம் ஒன்றில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டு தேக்கரண்டி தயிரை அதில் ஊற்றி கலக்குங்கள்.அதன் பிறகு எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்து நன்கு கலக்க வேண்டும்.

இதனை தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இப்படி செய்தால் உங்கள் தலையில் இருக்கின்ற எண்ணெய் பசை,அழுக்கு,பொடுகு,வியர்வை வாசனை அனைத்தும் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஒரு கைப்பிடி புதினா இலை
2)இரண்டு தேக்கரண்டி கடலை மாவு

செய்முறை விளக்கம்:-

புதினா இலைகளை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து இதனை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.

இதை கிண்ணம் ஒன்றில் கொட்டி இரண்டு தேக்கரண்டி கடலை மாவு போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு இந்த கலவையை தலைக்கு அப்ளை செய்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.

பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் தலையில் சிக்கு வாடை வராமல் இருக்கும்.

இது தெரியுமா? இந்த ஒரு டீ குடித்தால் தலைவலி சளி காய்ச்சல் அப்போவே குறைஞ்சிடும்!!

0

சில நேரம் அதீத ஒற்றைத் தலைவலி பாதிப்பை பலரும் அனுபவிக்கின்றனர்.இந்த தலைவலியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.தலைவலி பாதிப்பில் இருந்து மீள மூலிகை பொருட்களை பயன்படுத்தி டீ செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கப்
2)ஏலக்காய் – ஒன்று
3)ஜாதிக்காய் பொடி – சிட்டிகை அளவு
4)தேயிலை தூள் – ஒரு தேக்கரண்டி
5)சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி
6)இஞ்சி – ஒரு துண்டு
7)கரு மிளகு – நான்கு
8)பட்டை – ஒரு துண்டு
9)புதினா இலை – நான்கு
10)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் உரலில் ஒரு ஏலக்காய்,ஒரு பீஸ் பட்டை,ஒரு பீஸ் இஞ்சி,நான்கு கருப்பு மிளகு ஆகியவற்றை போட்டு கொரகொரப்பான பக்குவத்திற்கு இடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் பால் ஊற்ற வேண்டும்.ஒரு நிமிடம் கழித்து ஒரு தேக்கரண்டி தேயிலை தூள்,சிட்டிகை அளவு ஜாதிக்காய் தூள் போட வேண்டும்.

பிறகு அரைத்த கலவையை அதில் கொட்ட வேண்டும்.அடுத்து புதினா இலை மற்றும் வெள்ளை சர்க்கரை இரண்டு தேக்கரண்டி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

குறைவான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு மசாலா டீ கொதிக்க வைத்து வடித்து பருகினால் சுவையாக இருக்கும்.இதில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகை பொருட்கள் தலைவலி சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்தக் கூடியவையாகும்.

தலைவலி சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்து கொள்ள இந்த மசாலா பொருட்களை கொண்டு டீ போட்டு குடிக்கலாம்.

அதேபோல் கிராம்பு தேநீர்,செம்பருத்தி தேநீர்,பெருஞ்சீரக தேநீர்,புதினா தேநீர்,மஞ்சள் பால்,க்ரீன் டீ,சாமந்தி தேநீர் போன்றவை தலைவலி,ஒற்றைத் தலைவலி பாதிப்பை முழுமையாக குணப்படுத்தும்.

குக்கரில் சமைக்க கூடாத 05 உணவுகள்!! என்னது குக்கரில் சாதம் சமைக்கவே கூடாதா?

0

நம் அன்றாட சமையலில் குக்கர் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.குக்கர் இருந்தால் நிமிடத்தில் வித விதமான சமையல் செய்துவிடலாம்.இன்றைய இயந்திர வாழ்க்கையில் இதுபோன்ற சமையல் பாத்திரங்களில் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

இப்படி தினசரி பயன்படுத்தி வரும் குக்கரில் சில வகை உணவுகளை சமைத்து சாப்பிட்டால் அவை உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்தவகையில் குக்கரில் எந்தெந்த உணவுகளை சமைத்து சாப்பிடக் கூடாது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுளள்து.

1)கீரை
2)மீன் உணவுகள்
3)உருளைக்கிழங்கு
4)பாஸ்தா
5)அரசி

உங்களில் பலர் அரிசிசாதத்தை குக்கரில் தான் சமைப்பீர்கள்.அவசர காலத்தில் குக்கரில் சாதம் செய்து சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை.ஆனால் எப்பொழுதும் குக்கர் சாதம் சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.

குக்கரில் அரிசி சாதம் செய்தால் அதில் ஸ்டார்ச் அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருள் வெளிப்படும்.இவை நமது உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.

அதேபோல் குக்கரில் காய்கறி உணவுகளை செய்து சாப்பிட்டால் அவற்றின் சத்து முழுமையாக குறைந்து ஆரோக்கியம் இல்லாதவையாக மாறிவிடும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவை குக்கரில் சமைத்தால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,புரதம் போன்றவை அதிகம் நிறைந்த மீன் உணவுகளை குக்கரில் சமைத்தால் அவற்றின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.அதிக சுவை நிறைந்த உருளைக்கிழங்கை குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானது அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மிஸ் பண்ணிடாதீங்க.. புற்றுநோய்க்கு நம் வீட்டு சமையலறையில் மருந்து இருக்கு!!

0

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை சிலவகை உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து வருகிறது.நம் அனைவரது வீட்டிலும் முந்தின நாள் மிஞ்சி போன வெள்ளை சாதத்திற்கு தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய சாதமான சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.

சிலர் இந்த பழைய சாதத்தில் தயிர்,வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.சிலர் கருவாட்டு தொக்கு கொண்டு சாப்பிடுவார்கள்.எப்படி சாப்பிட்டாலும் பழைய சாதத்தின் ஆரோக்கிய பலன்கள் நமக்கு முழுமையாக கிடைத்துவிடும்.

பழைய சாதத்தில் புரோபயாட்டிக் என்ற பாக்டீரியா நிறைந்து காணப்படுகிறது.இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு ஆரோக்கிய உணவாகும்.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு கப் பழைய சாதம் சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகள் பழைய சாதம் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல் தினமும் பழைய சாதம் சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் உடலில் உருவாகாமல் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பழைய சாதத்தில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டால் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

பழைய சாதம் உடலுக்கு புத்துணர்வை வழங்குகிறது.தினமும் பழைய சாதம் சாப்பிட்டால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வயிறு எரிச்சல் இருப்பவர்கள் காலை நேரத்தில் பழைய சாதம் உட்கொள்ளலாம்.பழைய சாதத்தில் இருக்கின்ற நல்ல பாக்டீரியா செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் பழைய சாதம் சாப்பிடலாம்.

கொடிய விஷத்தையும் முறிக்கும் தும்பை இலை!! இதன் பயனறிந்து பயன்படுத்துங்கள்!!

0

நம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வரும் மூலிகை இலையான தும்பை பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியவையாக உள்ளது.இந்த இலையை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தீர்வு 01:

தும்பை இலை – 10
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகு – நான்கு
சுக்கு – ஒரு பீஸ்
திப்பிலி – ஒன்று
அதிமதுரம் – சிறிதளவு

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் தும்பை இலை,சீரகம்,,கரு மிளகு ஆகியற்றை போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் சுக்கு,திப்பிலி,அதிமதுரத்தை போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு வடித்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.இந்த பொருட்களை பாலில் காய்ச்சியும் பருகலாம்.

தீர்வு 02:

கருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
தும்பை இலை – ஐந்து

பாத்திரத்தில் கால் தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.அடுத்து அதில் ஐந்து தும்பை இலைகளை போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் விஷக் கடி முழுமையாக குணமாகும்.

தீர்வு 03:

தும்பை இலை – ஐந்து
தேன் – சிறிதளவு

முதலில் தும்பை இலையை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி கலக்குங்கள்.

இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

தும்பை இலையை சீரகத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.