Home Blog Page 177

எச்சரிக்கை மணி.. இந்த 05 அறிகுறிகள் இருந்தால்.. சீக்கிரம் மாரடைப்பு வரக் கூடும்!!

0

இதய நோய் பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறி வருகிறது.தற்பொழுது இளம் தலைமுறையினர் பலருக்கு இதய நோய் ஆபத்தாகி வருகிறதுஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் மாரடைப்பு அதிகரிக்கிறது.

முன்பைவிட தற்பொழுது உணவுக் கலாச்சாரம் மோசமாக இருப்பதால் எளிதில் ஆபத்தான நோய் பாதிப்புகள் அண்டுகிறது.கொழுப்பு உணவுகள்,எண்ணெய் உணவுகள்,துரித உணவுகளால் இதய ஆரோக்கியம் மோசமாகி பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

அதேபோல் மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் இதய ஆரோக்கியம் பாழாகிறது.இதனால் எந்த நேரத்திலும் மாரடைப்பு சந்திக்க வேண்டிய சூழலில் இந்த தலைமுறையினர் உள்ளனர்.

உலகில் இதய நோய் பாதிப்பு நோய்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.இந்த நோய் எந்தஒரு அறிகுறியையும் எளிதில் வெளிக்காட்டாது.நன்றாக இருக்கும் ஒருவர் திடீரென்று சரிந்து உயிரை விடுவதை அடிக்கடி செய்திகளில் கவனித்திருப்பீர்கள்.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இதய நோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது.

நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியது முக்கியம்.ஒருவேளை உங்கள் இதயம் பலவீனமாக இருந்தால் அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் வைத்து.

இதய பலவீனத்தை உணர்த்தும் 05 முக்கிய அறிகுறிகள் இதோ:

1)நெஞ்சு பகுதியில் அசௌகரிய உணர்வு

2)நெஞ்செரிச்சல்

3)தலைச்சுற்றல்

4)தொண்டை வலி

5)தோள்ப்பட்டை வலி மற்றும் கை வலி

இந்த ஐந்து அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இறுக்கமான ஆடை அணியும் ஆண் பெண்.. இந்த விஷயத்தை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0

மனிதர்களுக்கு உடை மானம் காக்கும் விஷயமாக உள்ளது.முன்பெல்லாம் ஆடை நாகரிகம் நன்றாக இருந்தது.ஆனால் தற்பொழுது ஆடை கலாச்சரம் என்ற பெயரில் நாகரிகமற்ற உடைகள் அணிவது வழக்கமாக மாறி வருகிறது.

தற்பொழுது இளம் தலைமுறையினர் இறுக்கமான உடைகள் அணிவதை விரும்புகின்றனர்.லெகின்,ஜெகின் போன்ற இறுக்கமான கீழாடையை பெரும்பாலான பெண்கள் அணிகின்றனர்.அதேபோல் ஆண்களும் இறுக்கமான ஆடைகள் அணிவது வழக்கமாகி வருகிறது.

இறுக்கமான ஆடை அனைவருக்கும் பொருத்தமாக இருக்காது.சிலருக்கு இவை அசௌகாரியத்தை ஏற்படுத்தலாம்.உடலை ஒட்டிய நிலையில் அணியும் ஆடைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நீங்கள் நீண்ட நேரம் இறுக்கமான ஆடை அணிந்தீர்கள் என்றால் நிச்சயம் வயிறு அழுத்தம் ஏற்பட்டு வலி,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படலாம்.

இறுக்கமான ஆடைகள் இரத்த ஓட்டத்தை பாதிக்கச் செய்யும்.உடலுடன் ஒட்டிய ஆடைகள் அணிந்தால் தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஆண்களுக்கு இறுக்கமான ஆடை ஆண்களின் விந்தணு உற்பத்தியை குறைக்கும்.பெண்கள் இறுக்கமான ஆடை அணிவதால் ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இறுக்கமான நைலான் துணிகளை அணிந்தால் தோல் சிவத்தல்,தோல் எரிச்சல்,பாக்டீரியா தொற்றுகள் ஏற்படலாம்.

நாம் இறுக்கமான ஆடைகளை அணிந்தால் வியர்வை வெளியேறாமல் உடலிலேயே தங்கி சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இறுக்கமான ஆடைகளால் தொற்று பாதிப்புகள் ஏற்படலாம்.இறுக்கமான ஆடைகள் தொடை,அக்குள் போன்ற பகுதிகளில் அதிக எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம்.

எனவே தளர்வான காட்டன் ஆடைகள் அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.ஆடைகளை நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்துங்கள்.நைலான் ஆடைகள் அணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அமலாக்கத்துறை ரைடில்சிக்கும் திரை பிரபலங்கள்…..திருச்சி சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் உள்ள நிலையில் அவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது இந்நிலையில் அவர்கள் பற்றி ஒரு சில தகவல்கள் பரவி வருகின்றது. திருச்சி சூர்யா யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அமலாக்க துறையிடம் சில ஆதாரங்கள் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். உதயநிதியின் நட்பு வட்டம் சிக்கலில் உள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ஜி ஜி மற்றும் ரத்தீஷ் ஆகியோர் மாட்டுவார்கள். உதயநிதி ஸ்டாலின் அரசியலில் தனது திறமைகளை வெளிகாட்டி வரும் நிலையில் இப்போது அவர் குறி வைக்கப்பட்டுள்ளார். இவர்களிடம் கருப்பு பணம் உள்ளது என்றால் அந்த பணத்தை வைத்து தான் சம்பளம் கொடுக்கப்படுமா அதனை தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் வாங்கி இருந்தால் அவர்கள் மாட்டுவார்கள். அந்த பணம் எங்கே சென்றுள்ளது. எந்தெந்த படங்களுக்கு கருப்பு பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது, எப்படி படம் பெற்றுள்ளனர் என அமலாக்கத்துறை விசாரணை செய்வார்கள் அந்த சம்பந்தப்பட்ட பணம் விக்னேஷ் சிவனுக்கும் மற்றும் அட்லி ஆகியோருக்கும் சென்று இருக்கிறதா எனவும் விசாரணை மேற்கொள்வார்கள். மேலும் சினிமா மற்றும் வேறு துறையைச் சேர்ந்த யாராக இருந்தாலும் பணம் எங்கே சென்றுள்ளது என்று விசாரிக்கப்படும்.

உங்களிடம் உள்ள கருப்பு பணம் யாரிடமெல்லாம் சென்றுள்ளது என்று விசாரணை செய்தால் அவர்கள் மேல் இடத்திற்கு செல்வார்கள். இப்போது கிரவுண்ட் ரிப்போர்ட்டை எடுத்து விட்டனர். இதை வைத்து வழக்கை வலுவாக்கி அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல உள்ளனர். திமுக தற்போது அவசர அவசரமாக டெல்லிக்கு செல்ல காரணம் என்ன. இப்போது இருக்கும் நடைமுறையில் சென்றால் திமுக மீண்டும் வெற்றி பெறும். கடந்த தேர்தலின் பொழுது திமுக கொடுத்த வாக்குகளை நிறைவேற்றியுள்ளது. இதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். இதனை மாற்றவே ஸ்டாலின் குடும்பத்தை கைது செய்யவும், பல அமைச்சர்களை கைது செய்யவும் டெல்லி தயாராக உள்ளது. இதுதான் டெல்லியின் பிளான் மற்றும் செந்தில் பாலாஜி முன்னதாகவே சரண்டர் ஆகினார். அவர் டெல்லியிடம் சரண்டர் ஆகியுள்ளார்.

ரத்தீஷ் பற்றி எல்லாம் யாருக்கும் தெரியாது, அவர்கள் பெயரெல்லாம் எப்படி வெளியே வந்தது அவர்களெல்லாம் ஏன் தலைமறைவாக உள்ளனர் என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இவர்களை எல்லாம் அமலாக்கத்துறை ரைடு விடுங்கள் என்று செந்தில் பாலாஜி தான் கூறியிருக்கின்றார். அவர்கள் இத்தனை காலம் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் இப்போது எப்படி வெளியே சிக்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிமுகவை கட்டுப்படுத்தி விட்டனர். அடுத்து திமுகவை அடித்து காலி செய்ய இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். திருச்சி சூர்யாவின் இந்த பேட்டியானது தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!! பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பழைய ஓய்வூதி திட்டம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரவில்லை என பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா மற்றும் பஞ்சாபில் அடுத்தடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 13,000 ஊழியர்களுக்கு கர்நாடகாவில் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பஞ்சாபில் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பஞ்சாபில் சுமார் 2500 அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் மீண்டும் இணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2004 ஜனவரி மாதத்திற்கு முன்னர் வரை பதவிக்கு சேர்ந்த மற்றும் பதவியில் சேர நியமன ஆணை பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ஓபிஎஸ் அல்லது புதிய வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என இரண்டு திட்டத்தில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் எந்த ஓய்வூதிய ஓய்வூதிய திட்டத்தையும் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர்கள் என்பிஎஸ்ஐ தேர்ந்தெடுத்ததாக கருதப்படுவார்கள்.

மேலும் தமிழகத்தில் இந்த திட்டம் அமலுக்கு வருமா என பலரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என கூறப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தற்போது ஆலோசனைகள் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்காக தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தின் கடைசியிலேயே அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் மற்றும் அகவிலைப்படி உயர்வு கோரிக்கைகள் ஏற்பு என பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகின்றது. அதில் ஒன்றாக பழைய ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் அரசுக்கு நிதிய இழப்புகள் ஏற்படலாம் நிதி இழப்புகளை குறைக்கும் வகையில் திட்டத்தில் ஒரு சில மாற்றங்களை செய்த பிறகு தமிழக அரசு இத்திட்டத்தை அமல்படுத்தும் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீதம் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும் நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை தற்போது நிறைவேற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின் பொழுது திமுகவிற்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தனர். அவர்களின் ஆதரவு பாஜக மற்றும் அதிமுகவிற்கு மாறியது. கடந்த தேர்தலில் தபால் வாக்குகளை அளிக்கும் அரசு ஊழியர்கள் பாஜக மற்றும் அதிமுகவிற்கு வாக்களித்ததாக கூறப்படுகின்றது. அதனால் அரசு ஊழியர்களை தன் வசப்படுத்துவதற்காக பழைய ஓய்வூதிய திட்டம் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் கொண்டு கொண்டுவர திட்டமிட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. 

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநில அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாநில அரசு பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநில அரசு பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 2003 ஏப்ரல் மாதத்திற்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வு திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது.

பழைய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு குழு அமைத்திட அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த குழுவினர் மாநில அரசின் நிதி நிலைமை, பணியாளர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரை ஆணை அளிக்க குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் இந்த வருடம் இறுதிக்குள் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரலாம் என பலரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மானியத்துடன் கடன் வழங்கும் தமிழக அரசு!! இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் இதோ!!

0

தமிழக அரசு இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருவதினால் அவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. தற்போது அரசு வேலைக்காக படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. ஆனால் அரசு வேலை பெரும்பாலானவருக்கு எட்டாக்கனியாக மாறி வருகின்றது. அதனால் தமிழக அரசு இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக (unemployed youth employment generation program) என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது சொந்த தொழிலை தொடங்குவதற்காக இந்த திட்டம் பயன்படுகின்றது. பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் சுய தொழிலை மேம்படுத்துவதற்காகவும் இத்திட்டம் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் மூலமாக தகுதி உடைய இளைஞர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகின்றது. மேலும் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக அதாவது 2.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதால் இளம் தொழில் முனைவோர் மீதான நிதி சுமை குறைக்கப்படும். படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை குறிப்பாக சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள இளைஞர்களுக்கு இத்திட்டம் சுய தொழிலை மேம்படுத்த மிகவும் உதவியாக உள்ளது.

UYEGP திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 35 வரை மட்டுமே பொது பிரிவு விண்ணப்பிக்க முடியும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவினருக்கு 45 வயதுக்கு கீழ் வயதுவரம்பு நீடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம். பொருளாதார ரீதியாக அல்லது பின்தங்கியுள்ள இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் இத்திட்டத்திற்கு ஒரு சில வரைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ED யிடம் போட்டுக் கொடுத்த செந்தில் பாலாஜி.. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பெரும் ஆப்பு!!

0

DMK: திமுக என்று சொன்னாலே அமலாக்கத்துறை ரெய்டு குறித்து தான் பேச்சு இருந்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தார். இது ரீதியாக அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. மேற்கொண்டு மதுபான முறைகேடு வழக்கும் இவர் பக்கம் திருப்பியது. இதனிடையே இவர் அமைச்சரவையில் இருந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் எனக் கூறி பதவி விலகல் செய்யுமாறு கூறினர்.

அதன்படி இவரும் அமைச்சர் பதவியிவிலிருந்து ராஜினாமா செய்தார். தற்போது மதுபான முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்துள்ளதாகவும் அதில் தன்னை காப்பாற்றிக்க திமுக முக்கிய புள்ளிகளின் பெயரை கூறிவிட்டதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது ரீதியாக அவர் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளிக்கையில், அமலாக்கத்துறை சோதனை செய்த பிறகுதான் ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார்.

இது ரீதியாக செந்தில் பாலாஜியிடம் அவர் பேசுகையில், தைரியமாக இருங்கள் என கூறியுள்ளார். ஆனால் அதை செந்தில் பாலாஜி நம்பாமல் டெல்லியில் முக்கிய நபர் மூலம் வேறொருவரை தொடர்பு கொண்டுள்ளார். அதாவது டெல்லி மேலிடத்தில் அதானியை வைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இவர் தப்பிக்க செந்தில் பாலாஜி வாய் திறக்கும் நிலை உண்டாகிவிட்டது. அதனால்தான் இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது ஆகாஷ், பாஸ்கரன் ரத்தீஷ், விக்ரம் உள்ளிட்டவர்களின் பெயரானது அமலாக்கத்துறை கவனிப்பில் வந்துள்ளது.

இவர்களை காட்டி கொடுத்தது செந்தில் பாலாஜி தான். அதேபோல பல எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி வசம் உள்ளனர். இந்த அமலாக்கத்துறை பிரச்சனையால் இவர் மீண்டும் அதிமுகவிற்கு கூட செல்லலாம் என்று கூறியுள்ளார்.

ஒல்லி பின்னல்? கூந்தல் அடர்த்திக்கு இந்த விழுதை முடிக்கு பயன்படுத்துங்கள்!!

0

பெண்கள் தங்கள் தலைமுடியை அடர்த்தி மற்றும் நீளமாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கண்டால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

தேவையான பொருட்கள்:-

1)செம்பருத்தி இலைகள் – ஒரு கைப்பிடி
2)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
3)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி செம்பருத்தி இலை மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

செம்பருத்தி இலை மற்றும் கறிவேப்பிலை இலையில் தூசி,அழுக்கு இல்லாத அளவிற்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைக்க வேண்டும்.

இந்த பேஸ்டை கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை தலை முழுவதும் முடியின் மயிர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து குறைந்தப்பட்சம் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இந்த கலவை நன்கு ஊறி வந்த பிறகு சீகைக்காய் அல்லது அரப்பு பொடி கொண்டு தலையை அலசி எடுக்க வேண்டும்.

இப்படி வாரம் இரண்டு தடவை செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.இந்த ஹேர்பேக் தலை முடியை அடர்த்தியாக வளர வைக்க உதவும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த ஹேர் பேக்கில் செம்பருத்தி பூ,நெல்லிக்காய் போன்றவற்றையும் விருப்பம் இருந்தால் சேர்த்து பயன்படுத்தலாம்.

உடல் சூடு இருபவர்கள் வெட்டி வேர்,வெந்தயம்,கற்றாழை போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.

ட்ரை பண்ணுங்க.. இந்த ஒரு காய் ஜூஸ் ஒட்டுமொத்த உடல் நோய்களையும் குணப்படுத்திவிடும்!!

0

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்கிறது.சுரைக்காய் சாப்பிட்டால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.சுரைக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சுரைக்காய் ஜூஸ் பருகி வந்தால் புளித்த ஏப்பம் வராமல் இருக்கும்.அதேபோல் செரிமானப் பிரச்சனை குணமாக சுரைக்காய் ஜூஸ் செய்து பருகலாம்.

சுரைக்காய் – ஒரு கப்
மிளகுத் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – சிட்டிகை அளவு
சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி

1.முதலில் ஒரு பிஞ்சு சுரைக்காய் வாங்கிக் கொள்ளுங்கள்.இதனை தண்ணீரில் போட்டு நன்றாக தேய்த்து கழுவுங்கள்.

2.பின்னர் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு சுரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இந்த சுரைக்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.

3.இந்த சுரைக்காய் ஜூஸை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் கால் தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

4.பிறகு அதில் சிறிதளவு உப்பு கலந்து பருகுங்கள்.இந்த ஜூஸை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து பருகி வந்தால் புளித்த ஏப்பம் வருதல் கட்டுப்படும்.சுரைக்காய் ஜூஸை பருகினால் உடலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.

பாலில் இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால்.. உடலுறவில் முழு சுகத்தை அனுபவிக்கலாம்!!

0

ஆண்கள் விந்து உற்பத்தியை அதிகரிக்க பசும் பாலில் செவ்வாழைப்பழம் போட்டு சாப்பிடுங்கள்.செவ்வாழைப்பழம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவு சுமுகமாக போகும்.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு சோர்வு பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.செவ்வாழைப்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.இந்த செவ்வாழைப்பழத்தை வைத்து விந்து உற்பத்தி அதிகரிக்கும் பானம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)செவ்வாழைப்பழம்
2)பசும் பால்
3)கற்கண்டு

தயாரிக்கும் முறை:-

முதலில் ஒரு செவ்வாழைப்பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு செவ்வாழையின் தோலை நீக்கிவிட்டு பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த செவ்வாழைத் துண்டின் மீது தேன் சிறிதளவு ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வையுங்கள்.பிறகு இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.பின்னர் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

வாழைப்பழத்தில் தேன் சேர்த்தால் பனங்கற்கண்டு போட தேவையில்லை.இந்த பாலை தினமும் ஒருமுறை குடித்து வரும் ஆண்களுக்கு தரமான விந்து உற்பத்தியாகும்.நீர்த்த விந்து பிரச்சனை இருப்பவர்கள் இந்த செவ்வாழைப்பழ பால் பருகலாம்.தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகரிக்க செவ்வாழைப்பழ பால் பருகலாம்.

முடி அடர் கருப்பாக வளர.. இந்த இலையை தேங்காயில் எண்ணெய் ஊறவைத்து தேயுங்கள்!!

0

உங்கள் வெள்ளை முடியை அடர் கருப்பாக மாற்ற தேங்காய் எண்ணையில் வெப்பாலை ஊறவைத்து பயன்படுத்துங்கள்.ஹேர் டை பயன்படுத்துவதைவிட இந்த ஹேர் ஆயில் தலைமுடியை சீக்கிரம் கருப்பாக மாற்றுவதோடு தலைமுடியை வளர வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
2)வெப்பாலை இலை – 10

செய்முறை விளக்கம்:-

முதலில் மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 250 மில்லி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த எண்ணையை ஈரம் இல்லாத ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் வெப்பாலை இலைகளை ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை தேங்காய் எண்ணெயில் போட்டு மூடி ஒரு வாரம் வரை ஊறவிடுங்கள்.தேங்காய் எண்ணெய் நிறம் மாறி வரும் வரை ஊறவைக்க வேண்டும்.

அதன் பிறகு எண்ணையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.இந்த எண்ணையை தலைக்கு அப்ளை பண்ணிட்டு வந்தால் தலையில் இருக்கின்ற வெள்ளை முடி நாளடைவில் கருமையாக மாறும்.

வெப்பாலை எண்ணெய் பயன்கள்:-

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெப்பாலை எண்ணையை பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.வெப்பாலை எண்ணெய் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

தலை அரிப்பு இருப்பவர்கள் இந்த எண்ணையை பயன்படுத்தலாம்.அதேபோல் வெப்பாலை எண்ணெய் பொடுகு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

வெப்பாலை எண்ணெய் தேமல்,சொறி சிரங்கு போன்ற பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.சருமத்தில் அழுக்குகள் படியாமல் இருக்க வெப்பாலை எண்ணையை பயன்படுத்தலாம்.வெப்பாலை எண்ணெய் படர் தாமரை,தோல் அரிப்பு போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.