Home Blog Page 181

முக்கி மலம் கழிக்கும் நிலைமை வராமல் இருக்க.. இந்த பானத்தை காலையில் குடிங்க!!

0

உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை முழுமையாக சரி செய்யும் வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்:

1)நார்ச்சத்து குறைபாடு
2)செரிமானக் கோளாறு
3)மோசமான உணவுமுறை பழக்கம்
4)நீர்ச்சத்து குறைபாடு

மலச்சிக்கலை குணப்படுத்த பின்பற்ற வேண்டிய வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)மாவிலை – இரண்டு
2)கொய்யா இலை – இரண்டு
3)நுனா இலை – இரண்டு
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் மாவிலை,கொய்யா இலை,நுனா இலை ஆகியவற்றை தலா இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அரைத்த இலை விழுதை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த கஷாயம் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த கஷாயத்தை கிளாஸிற்கு வடித்து பருகலாம்.இப்படி தினமும் இந்த கஷாயத்தை செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு கொய்யா இலையை பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.கொய்யா இலை பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.அதேபோல் எலுமிச்சை பானம் பருகி வந்தால் குடல் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் சுடுநீர் பருகினால் மலச்சிக்கல் அடியோடு நீங்கும்.

மெலிந்த தேகம் கொளுகொளுன்னு மாற.. தேங்காய் பாலில் இந்த பழத்தை போட்டு குடிங்க!!

0

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் ஒல்லியாகவே இருப்பார்கள்.இப்படி உடல் எடையை அதிகப்படுத்த கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு சுலபமான வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)செவ்வாழைப்பழம் – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)பிஸ்தா – ஐந்து
5)முந்திரி – ஐந்து

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் பால் ஒரு கப் அளவிற்கு இருக்க வேண்டும்.அடுத்து கனிந்த செவ்வாழைப்பழம் ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் பாலில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து ஐந்து பிஸ்தா மற்றும் ஐந்து முந்திரி பருப்பை பொடியாக நறுக்கி தேங்காய் பாலில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த தேங்காய் பாலை தினமும் ஒரு கிளாஸ் என்று குடித்து வந்தால் 30 தினங்களில் உங்கள் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பால் – ஒரு கப்
2)பாதாம் பருப்பு – 10
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் ஊறவைத்த பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து தேங்காய் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அரைத்த பாதாம் பேஸ்ட்டை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

நீரிழிவு நோயில் இருந்து மீள.. இந்த தானியத்தில் இட்லி செய்து சாப்பிடுங்கள்!!

0

நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறு தானியமாக கம்பு உள்ளது.இந்த கம்பு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த கம்பை சாப்பிட்டு வந்தால் உடல் கொழுப்பு குறையும்.இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க கம்பில் இட்லி,தோசை செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கம்பு – 250 கிராம்
2)வெள்ளை உளுந்து பருப்பு – 150 கிராம்
3)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம:-

முதலில் கால் கிலோ அளவிற்கு கம்பு எடுத்து கிண்ணத்தில் கொட்டி கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி 6 முதல் 7 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இதற்கு இடையில் 150 கிராம் வெள்ளை உளுந்தை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

கம்பு நன்கு ஊறி வந்த பின்னர் அதன் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு வெள்ளை உளுந்தை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மிக்சர் ஜார் அல்லது கிரைண்டர் எடுத்து கம்பு மற்றும் வெள்ளை உளுந்து பருப்பை சேர்க்க வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.

கம்பு நன்கு அரைப்பட்ட பிறகு இதனை கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதனை இரண்டு முதல் மூன்று மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் கம்பு மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்க வேண்டும்.10 நிமிடம் காத்திருந்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு இட்லி ரெடி.இதற்கு தேங்காய் சட்னி,கடலை சட்னிதக்காளி சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.

தெரிந்து கொள்ளுங்கள்!! கோடி நன்மைகளை கொட்டி கொடுக்கும் நீர் ஆப்பிள்!!

0

வாட்டர் ஆப்பிளை தான் நீர் ஆப்பிள் அல்லது தண்ணீர் ஆப்பிள் என்று அழைக்கிறோம்.இவை அதிக தண்ணீர் மற்றும் இனிப்பு நிறைந்த பழமாகும்.நமது மண்ணில் வளரும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீர் ஆப்பிளை உட்கொண்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தண்ணீர் ஆப்பிள் ஊட்டச்சத்துக்கள்:-

1)இரும்புச்சத்து
2)கால்சியம்
3)வைட்டமின் ஏ
4)வைட்டமின் சி
5)வைட்டமின் பி
6)பொட்டாசியம்

தண்ணீர் ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

1.வாட்டர் ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அளவு குறையும்.நீர் ஆப்பிளில் இருக்கின்ற சோடியம் சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

2.வாட்டர் ஆப்பிளில் இருக்கின்ற நீர்ச்சத்து உடல் வலியை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.அடிக்கடி வாட்டர் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

3.தொடர்ந்து வாட்டர் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.நீர் ஆப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.

4.நீர் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக நீர் ஆப்பிள் சாப்பிடலாம்.

5.நீர்ச்சத்து நிறைந்த இந்த வாட்டர் ஆப்பிளை சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.அதேபோல் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள நீர் ஆப்பிள் சாப்பிடலாம்.

6.வாட்டர் ஆப்பிள் உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த வாட்டர் ஆப்பிளை ஜூஸாக செய்து சாப்பிட்டால் உடல் சூடாகாமல் இருக்கும்.

7.தினமும் ஒரு வாட்டர் ஆப்பிள் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

உங்கள் வாழ்வில் சர்க்கரை நோய் என்டர் ஆகாமல் இருக்க.. தினமும் இந்த ஜூஸ் குடிங்க!!

0

சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்க கூடிய ஒரு நோய் பாதிப்பாகும்.இந்த சர்க்கரை பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் முயற்சி செய்து வாருங்கள்.மருந்து மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோய் கட்டுப்பட இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும்.

சர்க்கரை நோய் வர காரணங்கள்:-

**உணவுமுறை பழக்கம்
**சோம்பல் வாழ்க்கை
**இனிப்பு உணவுகள்
**பரம்பரைத் தன்மை

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள்:

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த கருஞ்சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பின்னர் இந்த பானத்தை ஆறவைத்து வடித்து குடியுங்கள்.

கருஞ்சீரக பானம் சர்க்கரை நோய் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த கருஞ்சீரக பானம் சர்க்கரை பாதிப்பு வராமல் காக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை – ஒரு துண்டு
2)வெந்தயம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் ஒரு துண்டு பட்டை,அரை தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.இதை தினமும் பருகினால சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

புரதம் வாரி வழங்கும் வேர்க்கடலையில் அதிக சுவையான சட்னி செய்வது எப்படி?

0

நமது உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்று.இவை வேர்க்கடலையில் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இது தவிர மேலும் சில ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் வேர்க்கடலையை வைத்து சுவையான சட்னி செய்வது குறித்த விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வேர்க்கடலை ஊட்டச்சத்துக்கள்:

**புரதம் **வைட்டமின்கள் **மெக்னீசியம் **தாமிரம் **பாஸ்பரஸ் **மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட்

புரதம் வாரி வழங்கும் வேர்க்கடலையில் சுவையான சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-

1)வேர்க்கடலை – ஒரு கப்
2)பூண்டு பற்கள் – ஐந்து
3)புளி – ஒரு துண்டு
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)வர மிளகாய் – மூன்று
6)உப்பு – தேவையான அளவு
7)கறிவேப்பிலை – ஒரு கொத்து
8)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
9)கடுகு – கால் தேக்கரண்டி
10)வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் வேர்க்கடலையை வாணலி ஒன்றில் போட்டு வறுக்க வேண்டும்.பின்னர் இதை தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம்,மூன்று வர மிளகாய் ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இப்பொழுது அனைத்து பொருட்களையும் ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மிக்சர் ஜார் எடுத்து வறுத்த வேர்கடலையை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு கொத்தமல்லி,சீரகம்,வர மிளகாய் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வெள்ளைப் பூண்டு பற்கள்,புளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

அடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை கிண்ணம் ஒன்றிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்குங்கள்.

பிறகு கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரிவிட வேண்டும்.இதை வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து கொள்ளவும்.இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

சைவப் பிரியர்களே இனி நீங்களும் மீன் குழம்பு சாப்பிடலாம!! எப்படினு தெரியுமா?

0

மீன் சுவையை ஒத்திருக்கும் வாழக்கையில் சுவையான மீன் குழம்பு செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.வாழைக்காயில் வறுவல்,பொரியல் என்று பல வகை உணவுகள் செய்யப்படுகிறது.அந்த வகையில் வாழைக்காய் வைத்து சைவ மீன் குழம்பு செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைக்காய் – ஒன்று
2)சின்ன வெங்காயம் – 10
3)பூண்டு பற்கள் -10
4)தக்காளி – ஒன்று
5)மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
6)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
7)கொத்தமல்லி தூள் – ஒரு தேக்கரண்டி
8)புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
9)தேங்காய் துருவல் – அரை கப்
10)சீரகம் – கால் தேக்கரண்டி
11)வெந்தயம் – கால் தேக்கரண்டி
12)எண்ணெய் – மூன்று தேக்கரண்டி
13)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் சீரகம்,வெந்தயம் போட்டு பொரிய வைக்க வேண்டும்.

அடுத்து சின்ன வெங்காயம்,பூண்டு பல்,தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.இவை நன்கு வதங்கி வந்த பிறகு அரை கப் தேங்காய் துருவலை போட்டு நன்கு வதக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிடுங்கள்.பிறகு ஒரு வாழைக்காய் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு வாழக்கையை ஓவல் வடிவத்தில் நறுக்கி கொள்ளுங்கள்.மீன் வடிவம் கிடைக்க வாழைக்காய் துண்டுக்கு நடுவில் துளை போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் மண் சட்டி வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள.பிறகு வெந்தயம்,சீரகம் போட்டு பொரிய விடுங்கள்.ஆடுது கறிவேப்பிலை போட வேண்டும்.

பிறகு நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு வதக்குங்கள்.

அதற்கு அடுத்து அரைத்த விழுதை போட்டு வதக்க வேண்டும்.பின்னர் மஞ்சள்
தூள்,கொத்தமல்லி தூள்,மிளகாய் தூள் போட்டு வதக்க வேண்டும்.அதற்கு அடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

பிறகு ஊறவைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றி பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

இறுதியாக வாழைக்காய் துண்டுகளை போட்டு குறைவான தீயில் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.வாழைக்காய் நன்றாக வெந்து வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.இப்படி மீன் குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

இனி பார்லரில் காசை கொட்ட வேண்டாம்!! வீட்டிலேயே அதிக செலவாகாத ஃபேஷியல் செய்யலாம்!!

0

பெண்கள் தங்கள் முக அழகை அதிகரிக்க பார்லர் செல்ல வேண்டாம்.வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு முகத்தை வெள்ளையாக்கும் ட்ரிக்கை தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 01:

முதலில் காய்ச்சாத பால் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் காட்டன் பஞ்சை போட்டு நினைத்து முகத்தை துடையுங்கள்.இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு இப்படி செய்ய வேண்டும்.

ஸ்டெப் 02:

பின்னர் கிண்ணம் ஒன்றில் அரிசி மாவு ஒரு தேக்கரண்டி,சுத்தமான தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.விருப்பம் இருப்பவர்கள் இதில் பால் சேர்த்துக் கொள்ளலாம்.10 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு பாத்திரத்தில் சூடு நீர் ஊற்றி முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும்.இது மூன்றாவது படியாகும்.

ஸ்டெப் 04:

அடுத்து பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கிவிட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதாம் பேஸ்ட்டில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை முகத்தில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.பிறகு பன்னீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

ஸ்டெப் 05:

இறுதியாக இரண்டு தேக்கரண்டி கடலை மாவு,ஒரு தேக்கரண்டி தேன்,ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்,ஒரு தேக்கரண்டி தயிர் போட்டு நன்கு கலக்க வேண்டும்.இதை பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.

பிறகு காய்ச்சாத பால் கொண்டு முகத்தை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்தால் பார்லர் பேஷியல் உணர்வு கிடைக்கும்.

கையில் டிகிரி இருக்கா? அப்போ இந்தியன் வங்கி வேலைக்கு அப்ளை பண்ண தயாராகுங்கள்!!

0

நமது நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிப்பது குறித்த முழு விவரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: இந்தியன் வங்கி(INDIAN BAN)

பதவி:

**ஆலோசகர்

காலிப்பணியிடங்கள்:

ஆலோசகர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

ஆலோசகர் பணிக்கு விண்ணப்பம் செய்ய அதிகபட்ச வயது வரம்பு 65 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

ஆலோசகர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் அடைப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.indianbank.in என்ற இணையதளம் வாயிலாக ஆலோசகர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

தலைமை பொது மேலாளர்(CDO & CLO),இந்தியன் வங்கி,கார்ப்பரேட் அலுவலகம்,HRM துறை,ஆட்சேர்ப்பு பிரிவு 254-260,அவ்வை சண்முகம் சாலை,ராயப்பேட்டை,சென்னை 600 014.

விண்ணப்பக்கட்டணம்:

பொது பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.1000/-

இதர வகுப்பினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/-

விண்ணப்பிக்க இறுதி நாள்:

மே 31 ஆலோசகர் பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாளாகும்.விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

கறை பிடித்த பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற உதவும் 2 பொருள்!! இனி கை வலிக்க தேய்க்க வேண்டாம்!!

0

சில நேரம் அடுப்பில் வைத்த பாத்திரம் கருகி சுத்தம் செய்ய முடியாத அளவிற்கு மாறிவிடும்.இந்த கறை படிந்த பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்ய எளிய வழிகள் இதோ.

தேவையான பொருட்கள்:-

1)சமையல் சோடா – இரண்டு தேக்கரண்டி
2)டிஷ் வாஷ் லிக்விட் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி சமையல் சோடா அதாவது சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு தேக்கரண்டி டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி நன்றாக கலக்குங்கள்.பிறகு இதை கொண்டு கருகி போன பாத்திரத்தை தேய்த்தால் அழுக்குகள் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சோடா உப்பு – இரண்டு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – மூன்று தேக்கரண்டி
3)இஞ்சி சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் இரண்டு தேக்கரண்டி சோடா உப்பை போட்டுக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பலத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை சோடா உப்பில் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு துண்டு இஞ்சை இடித்து சாறு சேர்த்து சோடா உப்பில் கலக்க வேண்டும்.நன்கு மிக்ஸ் செய்த பிறகு கருகிய பாத்திரத்தை தேய்க்க பயன்படுத்த வேண்டும்.இப்படி செய்தால் பாத்திரம் புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை தோல் பொடி – ஒரு தேக்கரண்டி
2)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு கைப்பிடி எலுமிச்சம் பழத்தை வெயிலில் நன்கு காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த எலுமிச்சை தோல் பொடியை போட்டுக் கொள்ளவும்.

பின்னர் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும்.இந்த கலவையை கொண்டு பாத்திரம் தேய்த்தால் கறை,அழுக்கு அனைத்தும் நீங்கிவிடும்.