Home Blog Page 182

1000 வயகரா மாத்திரைக்கு இந்த பொடி சமம்!! டெய்லி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்!!

0

ஆண்,பெண் தங்கள் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அஸ்வகந்தா மற்றும் அதிமதுரப் பொடியை பாலில் கலந்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி
2)பூனைக்காலி பொடி ஒரு தேக்கரண்டி
3)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அஸ்வகந்தா மற்றும் அதிமதுரம் ஆகிய இரண்டு பொடிகளும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வையுங்கள்.பச்சை வாடை நீங்கும் கொதித்து வந்த பின்னர் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி,ஒரு தேக்கரண்டி பூனைக்காலி பொடியை போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பிறகு இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகினால் பாலியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஓரிதழ் தாமரை பொடி போட்டு கொதிக்க வையுங்கள்.

பால் நன்றாக கொதித்து வந்த பிறகு இதனை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு பாலில் ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து பருகுங்கள்.இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பால் – ஒரு கப்
2)பிஸ்தா பருப்பு – ஐந்து
3)முந்திரி பருப்பு – ஐந்து

செய்முறை விளக்கம்:-

பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலை கிளாஸிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அரைத்த தேங்காய் மற்றும் முந்திரி பேஸ்டை அதில் போட்டு கலந்து பருகுங்கள்.இப்படி செய்தால் ஆண்மை அதிகரிக்கும்.பாலியல் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும்.

நரம்பு பலம் அதிகரிக்க.. பாலில் இந்த பொடியை கலந்து குடிச்சிட்டு வாங்க!!

0

உங்கள் நரம்பு வலிமையை அதிகரிக்க நரம்பு தளர்ச்சி பிரச்சனை வராமல் இருக்க நீங்கள் பசும் பாலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொடியை கலந்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)கருப்பு எள் பொடி – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வந்த பிறகு ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை வறுத்து பொடித்து பாலில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் நரம்பு பலம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)முந்திரி – 10

செய்முறை விளக்கம்:-

தேங்காயை துருவி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு பத்து முந்திரி பருப்பை அரைத்து தேங்காய் பாலில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் நரம்பு பலம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)பாதாம் பருப்பு – 10

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் 10 பாதாம் பருப்பை அரைத்து பாலில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாதாம் பாலை பருகி வந்தால் நரம்பு பலம் பன் மடங்கு அதிகரிக்கும்.

பிபி சுகர் கண்ட்ரோலாக குடிக்க வேண்டிய ட்ரிங்க்!! மருத்துவர் சொன்ன மருத்துவம் இது!!

0

உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்க மருத்துவர் சொன்ன ஜூஸை செய்து தினமும் குடிங்க.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.மருந்து,மாத்திரையை வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவதைவிட இந்த ஒரு பானத்தை தினமும் செய்து பெருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)மாதுளம் பழம் – ஒன்று
2)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
3)புதினா இலைகள் – நான்கு
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு மாதுளம் பழத்தை நறுக்கி அதன் விதைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு மாதுளம் பழ விதைகளை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து நறுக்கிய பெரிய நெல்லிகாய் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.பின்னர் இந்த ஜூஸை கிளாஸிற்கு வடித்து பருக வேண்டும்.இந்த ஜூஸை பருகி வந்தால் பிபி,சுகர் போன்ற நோய்கள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)சிறுகுறிஞ்சாண் இலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சிறுகுறிஞ்சாண் இலை பொடியை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் முழுமையாக குணமாகும்.

தேவையான அளவு:-

1)செம்பருத்தி இதழ்கள் – நான்கு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு செம்பருத்தி இதழ்களை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.செம்பருத்தி பானம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் செம்பருத்தி பானத்தை பருகலாம்.

10 நோய்களை அசால்ட்டாக குணப்படுத்தும் மாதுளை இலை!! விரைவில் ரிசல்ட் கிடைக்க இப்படி யூஸ் பண்ணுங்க!!

0

மாதுளம் பழம் போன்று அதன் இலை,பூக்கள் போன்றவை அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் ஆகும்.இதில் மாதுளை இலை பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த இலையை வைத்து கஷாயம்,டீ போன்றவற்றை செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

1)இருமல் சளி

மாதுளை இலையை பொடித்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.

2)வயிற்று வலி

மாதுளை இலையை அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை வடிகட்டி பருகினால் வயிற்று வலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.

3)தூக்கமின்மை

இரவில் ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு தேக்கரண்டி மாதுளை இலை பொடி போட்டு கலந்து பருக வேண்டும்.இந்த பால் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

4)தோல் அலர்ஜி

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மாதுளை இலை போட்டு காய்ச்சி பருக வேண்டும்.இப்படி செய்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.மாதுளை இலை பானத்தை பருகினால் சொறி,சிரங்கு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

5)இரத்த சோகை

மாதுளை இலையை அரைத்து பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இரத்த சோகை நோய் பாதிப்பு குணமாகும்.

6)உயர் இரத்த அழுத்தம்

ஒரு தேக்கரண்டி மாதுளை இலை பொடியை பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும்.

7)செரிமானப் பிரச்சனை

மாதுளை இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து பருகினால் செரிமானக் கோளாறு முழுமையாக குணமாகும்.

8)முடி வளர்ச்சி

மாதுளை இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து ஆறவைத்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

9)தூக்கமின்மை

மாதுளை இலை பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.மாதுளை இலை பொடியை பாலில் கலந்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

10)நோய் எதிர்ப்பு சக்தி

மாதுளை இலையை கொண்டு கஷாயம் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

இந்த ஆளு பெயர் கூட இனி இருக்க கூடாது.. திமுக அமைச்சரை அடியோடு விரட்டும் தலைமை!!

0

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை திமுக கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் மூத்த நிர்வாகியும் மற்றும் வனத்துறை அமைச்சுருமாக இருந்த பொன்முடியை பதவியிலிருந்து நீக்கம் செய்தது. இதற்கு முக்கிய காரணம் அவரது வாய் பேச்சு தான். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் வந்ததுலிருந்து தற்போது வரை பொதுமக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விதமாக பேசி மாட்டிக்கொள்கிறார்.

அந்த வகையில் முதலில், பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கேட்டார். அச்சமயமே தலைமைக்கு இது அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் தொகுதி ரீதியாக கோரிக்கை வைத்தால் நீங்கள் எல்லாம் எனக்கா ஓட்டு போட்டீர்கள் என்று ஒருமையில் பேச ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து பெண்களை ஒருமையில் பேசுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இதனால் தலைமைக்கு பெருமளவு நெருக்கடி வந்ததால் உயர் கல்வித் துறை அமைச்சர் பதவியிலிருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டார். அப்படி இருந்தும் தொடர்ந்து சைவ வைணவ இனத்தை வைத்து பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியது பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. ஆளும் கட்சிக்குள்ளேயே பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு இவர் பதவியும் பறிக்க கோரி கோரிக்கை விடுத்தனர்.

கட்சி தலைமை அதனை ஏற்று பொன்முடியின் பதவியை பறித்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில்இவருக்கு இருந்த மரியாதை தற்பொழுது குறைந்துள்ளது. அங்கு நடைபெற்ற செயற்குழு கூட்டம் பேனர்களில் இவரது படம் பெயர் என ஏதும் காணப்படவில்லை. இதிலிருந்து அவரை திமுக கட்சி புறக்கணிக்கிறது என்பதை காண முடிகிறது.

ED ரெய்டு வேண்டாம் “விட்டுடுங்க”.. மோடியிடம் சென்ற ஸ்டாலின்!! திமுக குட்டை உடைத்த சீமான்!!

0

DMK NTK: அதிமுக ஆட்சி காலத்தில் செய்த ஊழலால் அமலாக்கத்துறைப் பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜி அடுத்து மதுபான முறைகேட்டு வழக்கில் பல்வேறு திமுக முக்கிய புள்ளிகள் மாட்ட உள்ளனர். இது ரீதியாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உதயநிதிக்கு மிகவும் நெருங்கிய சினேகர்களான ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் இந்தியாவிலேயே இல்லை. இவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக இந்த விசாரணை வலைக்குள் உதயநிதி தான் என கூறி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கொலை கொள்ளை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் உதயநிதி மேல் குற்றம் சுமத்திவிட்டால் மீண்டும் வெற்றி பெற முடியாது. இதனை அறிந்து, தற்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் மோடியை காண டெல்லிக்கு சென்றுள்ளார். நாளை டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

கடந்த மூன்று முறை இந்த கூட்டம் நடந்தபோதும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. தற்போது தான் கலந்து கொள்ள வேண்டுமென டெல்லி சென்றுள்ளார். அதுமட்டுமின்றி மோடியை தனியாக சந்திக்க வேண்டும் என்றும் முன் அனுமதி கேட்டுள்ளார்களாம். மோடியை தனியாக சந்திக்கும் பட்சத்தில் ஸ்டாலின், அமலாக்கத்துறை விசாரணை குறித்து பேச உள்ளதாக அரசியல் தெரிந்த வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

இது ரீதியாக சீமான் கூறுகையில், மூன்று முறை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்ற போது ஸ்டாலின் செல்லவில்லை தற்போது மட்டும் ஏன் செல்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். அமலாக்கத்துறை விசாரணை என்று வந்துவிட்டாலே உடனடியாக மோடியை சந்தித்து விடுகின்றனர். ஆளும் கட்சிக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது, ஆனால் எங்களுக்கு கிடையாது. திமுகவும் அதிமுகவும் பரிசுகள் அளிப்பது, கொள்கைகள் என எந்த வேறுபாடு இல்லை. எல்லாமே ஒன்றுதான்.

அதிலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் இடையே கட்சி கொடிகள் மட்டும் தான் மாறி காணப்படும் என்று கூறியுள்ளார். இதே போல தான் திமுகவும் தேர்தல் சமயத்தில் வாக்குக்கு காசு கொடுக்கும் அதே போல அதிமுகவும் கொடுக்கும் இதில் மாற்று கருத்து என்பது இருக்காது. இப்படி இருவரும் ஒன்றாக இருப்பதில் இந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மரியாதையா நீரை கொடுத்திடுங்க.. இல்லைனா மூச்சை நிறுத்திடுவோம்- வார்னிங் கொடுத்த பாகி ராணுவம்!!

0

India Pakistan War: 1960 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை போடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது இந்திய வங்கியால் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருக்கும் பியாஸ், ரவி, சாட்லேஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் 30 சதவீதம் நீரானது இந்தியாவுக்கும் 70% பாகிஸ்தானுக்கும் கிடைத்து வந்தது. இதில் மேற்கு நதிகளான சிந்து செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது.

தற்போது நடைபெற்ற காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலால் மத்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. இதனால் செனாப் பகுதிக்கு செல்ல வேண்டிய நீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் முழுவதும் நீரில்லாமல் வற்றி காணப்படுகிறது. இனிவரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு நீர் தேவை அதிகரித்து நெருக்கடி ஏற்படும். அதேபோல பாகிஸ்தானின் ராணுவமும் அங்கிருக்கும் பயங்கரவாதிகளும் ஒருவருடன் ஒருவர் இணைந்து தான் இருப்பர்.

இருவருக்குள்ளும் வேறுபாட்டை பார்க்க முடியாது. அந்த வகையில், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததும் பாகிஸ்தானின் தீவிரவாதி சையத், நீங்கள் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் பாதிப்பை சந்திக்க மாட்டோம், இந்தியா தான் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியர்கள், உயிரைக் கூட விட நேரிடலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த தீவிரவாதி போலவே தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன் டைரக்டர் ஜெனரல் லிப்டினென்ட், இதே போலவே தற்பொழுது இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீங்கள் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால், உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம் என்று காட்டமாக பேசியுள்ளார். தற்போது இவர் பேசிய அந்த வீடியோ பெருமளவு வைரலாகி வருவதுடன் இந்தியர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவர் அவ்வாறு பேசியதற்கு தற்பொழுது உலக நாடுகள் மத்தியில் கவனம் ஏதும் பெறவில்லை.

நாளை சனிப் பிரதோஷம் – இப்படி வழிபட்டால் ராஜயோகம் தேடி வரும்!

0

சனி பிரதோஷம் என்பது பிரதோஷ நாட்களில் முக்கியமான நாளாகும். சனி பிரதோஷ நாளன்று சிவனை வழிபட்டால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

முக்கியமான சனிப் பிரதோஷம் – 2025 மே 24:

நாளை, மே 24 ஆம் தேதி சனிக்கிழமை, இந்த வருடத்தின் முக்கியமான சனிப் பிரதோஷமாகும். இதைத் தவற விடக் கூடாது, ஏனெனில் அடுத்த சனிப் பிரதோஷம் அக்டோபர் மாதத்தில் தான் வருகிறது. அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய இந்த பிரதோஷம், சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்கும், ராஜயோகம் தேடி வரச் செய்யக்கூடிய தீப பூஜைகளுக்கு உகந்த நாளாகும்.

பிரதோஷ வேளையில் (மாலை 4:30 – 6:00 மணி), அனைத்து தேவர்களும் சிவாலயத்தில் சிவனை வணங்குவார்கள் என்ற புராணக் கூறு உண்டு. இந்த நேரத்தில் சிவன் கோவிலில் நந்தி பகவானுக்கு நடைபெறும் அபிஷேகத்தைக் காண்க, சிவனை வணங்கி வரவும்.

வழிபாட்டு முறை:

சனிப் பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபடுவதால் சனி தோஷம் குறையும். இந்த நாளில் விரதம் இருந்து, அபிஷேகத்திற்கு தேவைப்படும் இளநீர், பால், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை சிவாலயத்திற்கு கொண்டு சென்று அர்ப்பணிக்கலாம். நந்திக்கு அருகம்புல் மாலை, சிவபெருமானுக்கு வில்வ இலை பூஜை செய்யலாம்.

அரச இலை தீப வழிபாடு:

அரச மரம் இல்லாத இடங்களில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காய்ந்த அரச இலையை பயன்படுத்தலாம். வீட்டில் சிவபெருமானின் படத்திற்கு முன்பு வழக்கமான விளக்கை ஏற்றிய பிறகு, சுத்தமான அரச இலையின் மேல் மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இல்லையெனில் குபேர விளக்கு அல்லது காமாட்சி விளக்கையும் பயன்படுத்தலாம். இத்தீப வழிபாடு வீட்டில் சௌபாக்கியத்தை அளிக்கும்.

ராஜயோகம் பெற செய்யவேண்டியது:

தீபம் எரிகின்றபோது “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை பலமுறை உச்சரிக்க வேண்டும். குடும்ப சாந்தி, செல்வம், வேலை வாய்ப்பு, திருமண தடை நிவாரணம் போன்ற வேண்டுதல்களுடன் மனதார ஜெபிக்கவும்.

தீபம் முழுவதும் எரியும் வரை பிரார்த்தனையை தொடரவும். இது ராஜயோகத்தை ஏற்படுத்தும்.

அரச இலையை பாதுகாக்க:

வாடாமல் இருக்கும்போது, அரச இலையை புத்தகம், நோட்டில் வைத்துப் பாதுகாக்கலாம். காய்ந்து விட்டால், அதை நீரில் போடலாம்.

புண்ணியமான தானம்:

சனிக்கிழமையில் தானம் செய்வது பத்து மடங்கு பலனளிக்கும். மருந்து வாங்குவதை தவிர்த்து, உணவு, துணி, எண்ணெய் போன்றவை தரலாம். இது உங்கள் வாழ்க்கையில் பாக்கியத்தை கூட்டும்.

இந்த சனிப் பிரதோஷத்தை தவறவிடாமல், சிவனை நினைத்து தீபம் ஏற்றி, மனமாரும் ஜெபம் செய்து, சிறு தானங்கள் செய்து வாழ்வில் வளம், சுபிட்சம், ராஜயோகம் பெற்று வாழ்வோம்.

தமிழகத்தில் கொரோனா பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் சமூக ஊடகங்களில் பரவி வருவது போல இதற்கு முன் விதிக்கப்பட்ட முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் எதுவும் உண்மையல்ல என்றும், மக்கள் அந்த தகவலை நம்ப வேண்டாம் எனவும், மேலும் கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர்! தீவிரவாதி ஹஃபிஸ் சயீதைப் போலவே மிரட்டல்

பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமத் ஷரீஃப் சௌதரி, இந்தியாவுக்கு எதிரான கடுமையான மிரட்டல்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் எங்கள் நீரை தடுத்து விட்டால், உங்கள் மூச்சை நாங்கள் நெரிக்கும்” என்று கூறிய அவர், இந்து நதிநீர் உடன்படிக்கையை இந்தியா செயலிழக்க செய்ததை கடுமையாக கண்டித்தார்.

அவர் பாகிஸ்தானின் ஒரு பல்கலைக்கழக நிகழ்வில் பேசும் போது இந்த கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்து நதிநீர் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை நிறுத்தியதை தொடர்ந்து இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.

அகமத் சௌதரியின் இந்த பேச்சு, 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின் மூளையாகக் கருதப்படும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹஃபிஸ் சயீதின் பேச்சுக்களை நினைவூட்டுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத உரைகளுக்கு பெயர் போன ஹஃபிஸ் சயீத், இதே வார்த்தைகளை ஒரு வீடியோவில் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தியா கடந்த ஏப்ரல் 23-ம் தேதி இந்து நதிநீர் ஒப்பந்தத்தின் சில அம்சங்களை இடைநிறுத்தியது. இந்த ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு உலக வங்கியின் நடுகாட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தானது. இந்த நதி மற்றும் அதன் துணை நதிகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதற்கான விதிமுறைகளை இது வகுக்கிறது.

இந்தியா மீண்டும் மீண்டும் “இரத்தமும் நீரும் ஒரே நேரத்தில் ஓட முடியாது; பேச்சும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது” என்று வலியுறுத்தி வருகிறது. இது பாகிஸ்தான் ஆதரிக்கும் எல்லை தாண்டும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை காட்டுகிறது.

மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பதிலடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மே 7-ம் தேதி “ஒப்பரேஷன் சிந்து” என்ற பெயரில், பாகிஸ்தானும் பாகிஸ்தான் வசிப்புக் காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.