Home Blog Page 190

உங்கள் உதடுகள் பிங்க் நிறத்திற்கு மாற.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து பூசுங்கள்!!

0

எல்லோருக்கும் அழகான பிங்க் நிறம் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் கருப்பு நிற உதடுகளே பலருக்கும் இருக்கின்றது.உதடுகள் மீதுள்ள கருமை நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள லிப் பாம் செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஆமணக்கு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

சுத்தமான ஆமணக்கு எண்ணையை கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு சிறிய பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை உதடுகள் மீது அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இந்த எண்ணையை உதட்டிற்கு அப்ளை செய்து வந்தால் கருமை நீங்கி பிங்க் நிறத்திற்கு உதடுகள் மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)கேரட் – ஒன்று
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் வாணலி வைத்து கேரட் சாறை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணையை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.குறைவான தீயில் இதை
கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆறவைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை ஒரு டப்பாவில் ஊற்றி வைத்து தினமும் உதட்டிற்கு பயன்படுத்தி வந்தால் கருமை நிறம் நீங்கும்.

டாக்டர் சொன்ன இந்த ஜூஸை 30 நாட்கள் குடித்தால்.. உடலில் ஒரு கொழுப்பு கூட இருக்காது!!

0

நமது ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக குவிந்துவிடுகிறது.இதனால் உடல் பருமன் ஏற்பட்டு நோய்கள் உருவாகிவிடுகிறது.எனவே உடலில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் செய்து 30 நாட்கள் குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)வெண்பூசணி துண்டுகள் – ஒரு கப்
2)நெல்லிக்காய் – ஒன்று
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் வெண்பூசணி கீற்றின் தோலை நீக்கிவிட வேண்டும்.அடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.

இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி கால் தேக்கரண்டி அளவிற்கு மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)சுரைக்காய் துண்டுகள் – ஒரு கப்
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் சுரைக்காய் ஒரு கீற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.சுரைக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு எலுமிச்சையின் சாறை பிழிந்துவிட வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பருகினால் ஒரு மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

மூட்டு வலிக்கு ஆட்டுக்கால் சூப் நல்லதா? மருத்துவர் சொல்வது என்ன?

0

இந்த காலத்தில் மூட்டு வலி,முழங்கால் வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.உடல் எலும்பின் வலிமை குறைவதால் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.பெரியவர்கள் மட்டும் அனுபவித்து கொண்டிருந்த எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தற்பொழுது இளம் வயதினரும் அனுபவித்து வருகின்றனர்.

பொதுவாக அந்த காலம் முதல் இந்த காலம் வரை மூட்டு வலி வந்தால் ஆட்டுக்காலில் சூப் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி குறையும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு விஷயம்.

உண்மையில் ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி குணமாக என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் விளக்கி இருக்கிறார்.ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுக்கால் ஆகிய இரண்டும் உடலுக்கு வெவ்வேறு நன்மைகளை வழங்குகிறது.ஆட்டிறைச்சி புரதம் நிறைந்த அசைவமாகும்.ஆட்டுக்கால் கொலாஜன் சத்து நிறைந்த அசைவமாகும்.

நமது மூட்டிற்கு கொலாஜன் சத்து அவசியமான ஒன்றாக இருக்கிறது.அப்படி இருக்கையில் இந்த கொலாஜன் சத்து நிறைந்த ஆட்டுக்காலை உணவாக சாப்பிடும் பொழுது நமது மூட்டு ஜவ்வுகளுக்கு வலிமை கிடக்கிறது.ஆகவே ஆட்டுக்கால் சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலி பாதிப்பை குறைக்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.

ஆட்டுக்கால் சூப் ரெசிபி:

தேவையான பொருட்கள்:-

1)ஆட்டுக்கால் – இரண்டு
2)பூண்டு பல் – பத்து
3)கரு மிளகு – கால் தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
5)கொத்தமல்லி தழை – சிறிதளவு
6)கொத்தமல்லி தூள் – ஒரு தேக்கரண்டி
7)உப்பு – தேவையான அளவு
8)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
9)இஞ்சி – ஒரு துண்டு
10)சீரகம் — கால் தேக்கரண்டி
11)வர மிளகாய் – இரண்டு
12)தக்காளி – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் சீரகம்,வர மிளகாய்,கரு மிளகு ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள அளவுபடி எடுத்து வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு ஆட்டுக்கால் எடுத்து வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பூண்டு மற்றும் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு இஞ்சி பூண்டு விழுதை அதில் போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தக்காளி பழத்தை அரைத்து அதில் ஊற்றி வதக்க வேண்டும்.

பின்னர் சீரகக் கலவையை அதில் கொட்டி வதக்க வேண்டும்.அடுத்து வெட்டி வைத்துள்ள ஆட்டுக்கால் போட்டு கொத்தமல்லி தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 முதல் 7 விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.பிறகு கொத்தமல்லி தழை தூவி ஆட்டுக்கால் சூப்பை பருகலாம்.

இளம் வயது தோல் சுருக்கம்? இந்த கொட்டை அரைத்து பூசினால் 10 வயது குறைந்த பீல் கிடைக்கும்!!

0

இந்த காலத்தில் 30 வயதை தாண்டாதவர்களுக்கு கூட தோல் சுருக்கம் ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறை தான்.இளம் வயதில் தோல் சுருக்கப் பிரச்சனையை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவத்தை பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தேற்றான் கொட்டை விதை – 50 கிராம்
2)கரிசலாங்கண்ணி கீரை – ஒரு கட்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் தேற்றான் கொட்டையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இந்த விதையை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கட்டு கரிசலாங்கண்ணி கீரையை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேற்றான் கொட்டையை அதில் போட்டு நாள் முழுவதும் ஊறவிட வேண்டும்.இப்படி 10 தினங்களுக்கு கரிசலாங்கண்ணி கீரை சாறு செய்து தேற்றான் கொட்டையை போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பிறகு இதை நிழலில் காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு ஸ்பூன் இந்த பொடி சாப்பிட்டு வந்தால் இளமை தோற்றத்துடன் வாழலாம்.இந்த பொடியை மோர் அல்லது நீரில் கலந்தும் பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு – 10
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பத்து பாதாமை தோல் உரிந்து வரும் வரை ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் சரும சுருக்கம் ஏற்படாமல் இருக்கும்.

அடிக்கடி இளைப்பு வருதா? இந்த இரண்டு பொருளை சாப்பிட்டால் தடையின்றி சுவாசிக்கலாம்!!

0

உங்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்திக் கொள்ள இஞ்சி,மஞ்சள் போன்ற மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி துண்டு – ஒன்று
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
4)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் நீங்கள் ஒரு துண்டு இஞ்சி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை போட்டு கொதிக்க வையுங்கள.பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இதை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து பருகி வந்தால் சளி,இருமல்,சுவாசம் சம்மந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு – ஒரு துண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த சுக்கு தூளை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.
அதேபோல் கருமிளகை இடித்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் சளி,இருமல் பிரச்சனை குணமாகும்.தினமும் துளசி இலைகளை பறித்து சாப்பிட்டு வந்தால் சுவாசப் பிரச்சனை வராமல் இருக்கும்.

டிகிரி முடித்தவர்களுக்கு தியாகராஜர் கல்லூரியில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!

0

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தியாகராஜர் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற மே 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தியாகராஜர் கல்லூரி

காலிப்பணியிடங்கள்: Assistant professor,Lap Technician,Lap Technician Chemistry உள்ளிட்ட பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: மதுரை மாவட்டம்

கல்வித் தகுதி:

தியாகராஜர் கல்லூரி அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சம்மந்தபட்ட துறையில் டிகிரி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 22/05/2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் www.tce.edu என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.வருகின்ற 22 ஆம் தேதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்க இதை செய்யுங்கள்!!

0

நமது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருக்கும் CSIR – National Metallurgical Laboratory நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Secretariat,Junior Stenographer பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: CSIR – National Metallurgical Laboratory

பதவி:

**Junior Secretariat

**Junior Stenographer

காலிப்பணியிடங்கள்: இந்த இரண்டு பணிகளுக்கும் மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Secretariat கல்வித் தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,000/- முதல் ரூ63,000/– ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 27 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Junior Stenographer கல்வித் தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.81,000/– ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 27 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு htt://nml.res.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30/05/2025

சாப்பிடும் தயிரில் இந்த ஒரு பொருளை சேர்த்துக் கொண்டால்.. 30 நாளில் அல்சர் குணமாகிவிடும்!!

0

இன்று பலருக்கு அல்சர் இருக்கின்றது.உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது,மோசமான உணவுகள் போன்ற காரணங்களால் வயிறு,வாய் ஆகிய இடங்களில் அல்சர் புண்கள் உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.இந்த அல்சர் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்யலாம்.

அல்சர் அறிகுறிகள்:-

வயிறு எரிச்சல்
ஆசனவாய் எரிச்சல்
அடிக்கடி மலம் கழித்தல் உணர்வு
உடல் எடை இழப்பு
நெஞ்செரிச்சல்

தேவையான பொருட்கள்:-

1)கெட்டி பசுந்தயிர்
2)சீரகம்
3)கற்றாழை ஜெல்
4)உப்பு

செய்முறை விளக்கம்:-

முதலில் பசுந்தயிர் கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் கொட்டி லேசாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு சிறு துண்டு கற்றாழை எடுத்து அதன் மேல் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கற்றாழை ஜெல்லை பசுந்தயிரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து வறுத்து அரைத்து வைத்திருக்கும் சீரகத்தை தயிரில் போட்டு கலக்க வேண்டும்.

அதன் பிறகு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.இதை தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் அல்சர் புண்கள் ஆறிவிடும்.தயிருடன் வெந்தயம் சேர்த்து சாப்பிட்டாலும் அல்சர் புண்கள் ஆறும்.

இம்சை கொடுக்கும் எலிகளை ஓட விரட்ட.. வெங்காயத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!!

0

வீட்டில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் எலிகளை ஓட விரட்ட வைக்கும் அற்புத டிப்ஸ் இதோ.

தேவையான பொருட்கள:-

1)வெங்காயத் தோல் – ஒரு கைப்பிடி
2)பூண்டு தோல் – ஒரு கைப்பிடி

செய்முறை விளக்கம்:-

வெங்காயத் தோல் மற்றும் பூண்டு தோலை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.இதை எலி நடமாடும் இடத்தில் தூவினால் எலி நடமாட்டம் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
2)மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பற்கள் – நான்கு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

பிறகு இந்த பூண்டு நீரை ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.இந்த பூண்டு நீரை எலிகள் நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை நீங்கும்.

அதேபோல் புதினா இலைகளை அரைத்து தண்ணீரில் மிக்ஸ் செய்து எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு – 10
2)பட்டை – இரண்டு

செய்முறை விளக்கம்:-

உரலில் கிராம்பு மற்றும் பட்டை ஆகிய இரண்டையும் போட்டு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஸ்ப்ரே பாட்டிலில் கொட்டி தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை எலிகள் நடமாடும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.

தோலில் தொங்கிய மருக்களை உதிர வைக்க.. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

0

சரும மருக்களை எளிதில் நீக்க இந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றை தொடர்ந்து வாருங்கள்.உங்களுக்கு ஒரு வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)சுண்ணாம்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வெற்றிலை எடுத்து அதன் காம்பை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு வெற்றிலையை அரைத்து அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த கலவையை மருக்கள் மீது பூசி நன்கு காயவிட வேண்டும்.இப்படி செய்தால் தோல் மருக்கள் தானாக உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)சுண்ணாம்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.இதை தோல் மருக்கள் மீது அப்ளை செய்து காயவிட்டால் அவை தானாக உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

ஒரு பீஸ் இஞ்சி எடுத்து தோல் நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை இடித்து மருக்கள் மீது பூச வேண்டும்.இதை தொடர்ந்த ஒரு வாரம் செய்து வந்தால் தோல் மருக்கள் உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெங்காயம் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சின்ன வெங்காயம் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை இடித்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த வெங்காய சாறை மருக்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி மிக்ஸ் செய்யுங்கள்.

இதில் காட்டன் பஞ்சு ஒன்று நினைத்து மருக்கள் மீது வைத்து ஒத்தி எடுக்க வேண்டும்.இப்படி செய்தால் மருக்கள் சீக்கிரம் உதிர்ந்துவிடும்.