Home Blog Page 191

வாங்கி வந்த சம்பள பணத்தின் மீது இதை வைத்தால்.. வீண் செலவே வராது!!

0

இன்றைய காலகட்டத்தில் பணம் மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது.நமக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் செய்ய பணம் அவசியமாகிறது.இந்த பணம் இருந்தால் மட்டுமே இந்த உலகம் நம்மை மதிக்கும்.அப்படி நமக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கும் பணத்தை வீண் விரயமாகாமல் சேர்ப்பது என்பது மிகவும் கடிமனமான விஷயமாக உள்ளது.

எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் ஏதோ ஒரு வழியில் செலவாகி பணப் பிரச்சனை ஏற்படுகிறது என்பது பலரது குமுறல்.சிலருக்கு அடிக்கடி மருத்துவ செலவு ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.இந்த பணப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இங்கு சொல்லப்பட்டுள்ளது.

பணம் மகாலட்சுமியின் மரு உருவமாகும்.இந்த பணத்திற்கு உரிய மரியாதை கொடுத்தால் மட்டுமே அவை நம் கையைவிட்டு போகாமல் இருக்கும்.பண வரவு அதிகரிக்க,பணம் வீண் விரயமாகாமல் இருக்க கீழே சம்பளம் வாங்கியதும் நாம் அதை பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு முன் வைக்க வேண்டும்.

அடுத்து அதன் மீது வாசனை நிறைந்த பூக்களை வைக்க வேண்டும்.வாசனை மலர்களில் லட்சுமி தேவி குடியிருக்கின்றார்.இப்படி செய்தால் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வீண் விரையமாகாமல் இருக்கும்.

அதேபோல் பணத்தை ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து பச்சை கற்பூரம்,பட்டை,கிராம்பு,சோம்பு போன்ற வாசனை பொருட்களை வைத்தால் பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்கும்.

அதேபோல் துளசி,வெற்றிலை போன்ற இலைகளை பணத்துடன் வைத்தால் வீண் விரையம் ஆகாமல் பணம் குவிந்து கொண்டே இருக்கும்.வாசனை நிறைந்த பொருட்களுடன் இந்த பணத்தை வைத்தால் அதன் வரவு அதிகரிக்கும்.

இனி நாமும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான தந்தூரி சிக்கன் செய்யலாம்!!

0

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் பிடித்த அசைவமாக கோழி இறைச்சி உள்ளது.இந்த கோழிக்கறி வைத்து ஹோட்டல் ஸ்டைலில் தந்தூரி சிக்கன் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*கோழிக்கறி – 1 Kg
*தயிர் – கால் கப்
*இஞ்சி பூண்டு விழுது – இரண்டு டேபுள் ஸ்பூன்
*கொத்தமல்லி தூள் – ஒரு டேபுள் ஸ்பூன்
*மிளகாய் தூள் – ஒரு டேபுள் ஸ்பூன்
*கரமசாலா தூள் – அரை டேபுள் ஸ்பூன்
*கஸ்தூரி மேத்தி – அரை டேபுள் ஸ்பூன்
*கேசரி பவுடர் – அரை டேபுள் ஸ்பூன்
*உப்பு – தேவையான அளவு
*எண்ணெய் – தேவையான அளவு
*எலுமிச்சை சாறு – இரண்டு டேபுள் ஸ்பூன்
*நெய் – ஒரு டேபுள் ஸ்பூன்
*சீரகத் தூள் – அரை டேபுள் ஸ்பூன்

தந்தூரி சிக்கன் செய்முறை:-

முதலில் நீங்கள் ஒரு கிலோ கோழி இறைச்சி துண்டுகள் வாங்கிக் கொள்ள வேண்டும்.தந்தூரி சிக்கன் செய்ய பெரிய சைஸ் கோழி இறைச்சி துண்டுகள் வாங்க வேண்டும்.

பின்னர் இதற்கு ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும்.அதற்கு ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கஸ்தூரி மேத்தி,சீரகத் தூள் கரமசாலா தூள் உள்ளிட்டவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து தயிர்,எலுமிச்சை சாறு,உப்பு ஆகியவற்றை போட்டு கலந்துவிட வேண்டும்.உங்களால் கைகளால் கலந்துவிட முடியவில்லை என்றால் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பேஸ்டாக அரைத்துக் கொள்ளலாம்.

பிறகு இதில் அரை டேபுள் ஸ்பூன் கேசரி பவுடர் போட்டு கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு ஐந்து பல் வெள்ளை பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சை பேஸ்டாக அரைத்து இதில் மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த விழுதில் சிக்கன் துண்டுகளை போட்டு குறைந்தது 6 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

சிக்கன் துண்டுகள் மசாலாவில் நன்கு ஊறி வந்த பின்னர் அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு மசாலாவில் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

இந்த தந்தூரி சிக்கனுக்கு புதினா சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.தந்தூரி சிக்கன் மீது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு வெங்காயத் துண்டுகளை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

தொப்பை மீது இந்த பேஸ்டை பூசினால்.. ஒரே நாளில் மொத்த கொழுப்பும் உருகிவிடும்!!

0

பெரும்பாலானவருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் அதிக கொழுப்பு படிந்து உடல் எடை கூடியது போன்று இருக்கும்.அதேபோல் தொப்பை,கை உள்ளிட்ட இடங்களிலும் அதிக கொழுப்பு படியும்.இந்த கெட்ட கொழுப்பை கரையும் எளிய வீட்டு வைத்தியம் இதோ.

தீர்வு 01:

வெண்கடுகு
உலர்ந்த இஞ்சி

நாட்டு மருந்து கடையில் வெண்கடுகு,உலர்ந்த இஞ்சி கிடைக்கும்.இவற்றை தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு உரல் அல்லது மிக்சர் ஜாரில் வெண்கடுகு ஒரு தேக்கரண்டி மற்றும் ஒரு துண்டு உலர்
இஞ்சியை போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை தொப்பை மீது பூசினால் கொழுப்புகள் கரையும்.

அதேபோல் உடலில் கெட்ட கொழுப்புகள் குவிந்து கிடக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டை பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 02:

நாட்டு பாதாம்
மஞ்சள் தூள்

ஐந்து அல்லது ஆறு நாட்டு பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் போட்டு மிக்ஸ் செய்து உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ள இடத்தில் பூச வேண்டும்.இதுபோன்று செய்து வந்தால் கொழுப்பு கரைந்துவிடும்.

தீர்வு 03:

தேங்காய் எண்ணெய்
நல்லெண்ணெய்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்,ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு இதை லேசாக சூடாக்கி வயிற்று தொப்பை மீது ஊற்றி தேய்த்தால் கொழுப்பு தானாக கரைந்துவிடும்.

தீர்வு 04:

எலுமிச்சை சாறு
தேன்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் உடல் கொழுப்பு தானாக கரையும்.

SOUTH INDIAN வங்கியில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலை!! மே 26 வரை விண்ணப்பிக்கலாம்!!

0

நம் நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் பிரபல தனியார் வங்கியான SOUTH INDIAN வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர்,பிசினஸ் புரோமஸ் ஆபிசர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்களுக்கு வருகின்ற 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: SOUTH INDIAN BANK

இந்த வங்கி கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

பதவி:

ஜூனியர் ஆபிசர்

பிசினஸ் புரோமஸ் ஆபிசர்

கல்வித் தகுதி:

SOUTH INDIAN வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர்,பிசினஸ் புரோமஸ் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

வங்கி அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது 33 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத சம்பளம்:

பணிக்கு தேர்வாகும் நபர்கர்களுக்கு மாதம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல்

ஜூனியர் ஆபிசர்,பிசினஸ் புரோமஸ் ஆபிசர் பணிகலுக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://www.southindianbank.com/ என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் மே 26 ஆகும்.

ஜூனியர் ஆபிசர்,பிசினஸ் புரோமஸ் ஆபிசர் பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் கேட்கப்பட்டுள்ள ஆவணத்தை விண்ணப்பத்துடன் இணைத்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர் போன்று ஊத்தும் விந்துவை கெட்டியாக்கணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை அவாய்ட் பண்ணுங்க!!

0

ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி என்பது தரமானதாக இருக்க வேண்டியது முக்கியம்.ஆரோக்கியமான விந்து கருத்தரித்தலை எளிதாக்குகிறது.ஆனால் இன்று பெரும்பாலான ஆண்கள் விந்தணு குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.

நீர்த்த விந்து பிரச்சனை தற்பொழுது தலைவிரித்தாடி வருகிறது.உங்களுக்கு தண்ணீர் போன்று விந்து ஊற்றுகிறது என்றால் அதை கெட்டியாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

1)கசப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பாகற்காய்,கோவைக்காய் போன்ற கசப்பு காய்கறி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2)மைதா மற்றும் கோதுமையில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

விந்தணு கெட்டியாக சாப்பிட வேண்டிய உணவுகள்:

1)உலர் பழங்கள்,உலர் விதைகளை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.வெண்ணெய் பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.

2)பாலில் தேன் சிறிதளவு கலந்து பருகலாம்.சிறுதானிய உணவுகளை சாப்பிடலாம்.வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம்.

3)அதிக புரதம் நிறைந்த உணவுகளை தினசரி சாப்பிட வேண்டும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

4)வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.பேரிச்சம் பழத்தை பால் மற்றும் தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.

5)பாலில் முருங்கை விதை பொடி,பாதாம் பொடி கலந்து குடிக்கலாம்.பிஸ்தா பருப்பை ஊறவைத்து சாப்பிடலாம்.முருங்கை பூ பொடியை பாலில் கலந்து குடித்தால் விந்தணு அடர்த்தி அதிகமாகும்.

முடங்கிய கால்களை எழுந்து ஓட வைக்கும் இந்த பொடி!! தண்ணீரில் கலந்து குடுச்சிட்டு வாங்க!!

0

தற்பொழுது முடக்குவாத பாதிப்பை முதியவர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரும் அனுபவித்து வருகின்றனர்.மூட்டு எலும்புகள் வலிமை இல்லாததால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த முடக்குவாத பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நிலவேம்பு
2)முடக்கத்தான் கீரை
3)ஆடாதோடை இலை
4)சீந்தில்
5)வாதநாராயணன் இலை
6)கருப்பு மிளகு
7)திப்பிலி
8)சித்திரத்தை
9)கடுக்காய்
10)அதிமதுரம்
11)சுக்கு
12)பூனைக்காலி விதை
13)அமுக்கிரா கிழங்கு

செய்முறை விளக்கம்:-

முதலில் முடக்கத்தான் கீரை,ஆடாதோடை இலை,வாதநாராயணன் இலை,சீந்தில் கொடி ஆகியவற்றை சம அளவு எடுத்தல் கொள்ள வேண்டும்.

இவற்றை வெயிலில் நன்றாக காயவைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கருப்பு மிளகு,திப்பிலி,சித்தரத்தை,கடுக்காய்,அதிமதுரம்,சுக்கு,பூனைக்காலி,அமுக்கிரா கிழங்குக்கு ஆகிய ஒவ்வொன்றையும் தலா 10 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது இவற்றை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த இரண்டு வகை பொடியையும் ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு கலந்து காலை மற்றும் மாலை நேரத்தில் பருக வேண்டும்.அதேபோல் குழம்பு,கீரை கூட்டு,சூப் போன்றவற்றிலும் இந்த பொடியை கலந்து சாப்பிடலாம்.இப்படி நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி இல்லாமல் வாழலாம்.

முடக்குவாத பிரச்சனை இருப்பவர்கள் இந்த பொடியை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனை அனுபவிக்கலாம்.மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் நாட்டு மருந்து கடை,சித்த வைத்தியசாலை போன்றவற்றில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி வைத்து பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை போதும்!! 2 நிமிடத்தில் சுவையான தோசை ரெடி!!

0

அடிக்கடி தோசைக்கு மாவு அரைக்க முடியாத இல்லத்தரசிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஈஸி பொட்டுக்கடலை ரவை தோசை ரெசிபி செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பொட்டுக்கடலை
2)வெள்ளை ரவை
3)காய்ந்த மிளகாய்
4)சீரகம்
5)கறிவேப்பிலை
6)கொத்தமல்லி தழை
7)தயிர்
8)உப்பு
9)இஞ்சி
10)எண்ணெய்

செய்முறை விளக்கம்:-

நீங்கள் முதலில் 50 அளவிற்கு பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து 50 கிராம் அளவிற்கு வறுத்த வெள்ளை ரவை,நான்கு வர மிளகாய்,ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு பீஸ் தோல் நீக்கிய இஞ்சி ஆகியவற்றை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த மாவை கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் அரைத்த மாவை ஊற்றி தோசை வார்க்க வேண்டும்.பிறகு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தோசை சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் பொட்டுக்கடலை ரவை தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த தோசைக்கு தக்காளி சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.அதற்கு நான்கு தக்காளி பழம்,ஒரு பெரிய வெங்காயம்,ஒரு வர மிளகாய்,இரண்டு பல் பூண்டு,ஒரு பீஸ் இஞ்சி ஆகியவற்றை வாணலி ஒன்றில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும்.

பச்சை வாடை நீங்கும் வரை வதக்கிய பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரிய வைக்க வேண்டும்.இதை செய்து வைத்துள்ள சட்னியில் கலந்து தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

தோசை மாவு இல்லாத நேரத்தில் இதுபோன்று ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த தோசை செய்து குடும்பத்துடன் ருசித்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு அடிக்கடி தோள்பட்டை வலிக்குதா? அப்போ இந்த கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்!!

0

இந்த உலகில் தீவிர நோயாக இருக்கும் கேன்சர் மாரடைப்பிற்கு அடுத்த இடத்தை பிடிக்கிறது.இந்த கேன்சரால் வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.இந்த கேன்சர் உடல் உறுப்புகளில் தோன்றி மெல்ல மெல்ல மரணத்தை கொடுக்கும்.

புற்றுநோய் வகைகள்:

நுரையீரல் புற்றுநோய்
கணைய புற்றுநோய்
மூளை புற்றுநோய்
வாய் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்
குடல் புற்றுநோய்
தொண்டை புற்றுநோய்

பொதுவாக எந்தஒரு புற்றுநோய் பாதிப்பையும் ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாது.இதன் காரணமாகவே உயிரிழப்பை தடுக்க முடியாமல் போய்விடுகிறது.ஆனால் ஒரு சில அறிகுறிகளை வைத்து புற்றுநோய் அபாயத்தை நம்மால் நிச்சயம் கண்டறிய முடியும்.

உங்களுக்கு அடிக்கடி தோள்பட்டையில் வலி இருப்பின் அது ஒரு புற்றுநோய்க்கான அறிகுறி என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் தோள்பட்டை வலி நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.கழுத்து வலி,தோள்பட்டை வலிக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது.

நுரையீரல் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டால் அது தோள்பட்டையில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.நுரையீரல் புற்றுநோயால் இரத்த நாளங்களில் அழுத்தம் உண்டாகி தோள்பட்டை வலி ஏற்படும்.எனவே உங்களுக்கு அடிக்கடி தோள்பட்டை வாலி ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்:

தொடர் இருமல்
நிமோனியா
மூச்சுத் திணறல்
தொண்டை வலி
மார்பு வலி
எடை இழப்பு

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணங்கள்:

புகைப்பழக்கம்
காற்றுமாசுபாடு
பரம்பரைத் தன்மை
மார்பு புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும்.மூலிகை பானம் செய்து பருகி வந்தால் நுரையீரலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் நீர் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

10வது படிச்சிருக்கீங்களா? குட் நியூஸ்.. உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு வந்தாச்சு!!

0

நமது அண்டை மாநிலமான புதுவையில் அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள Village Assistant,Multi Tasking Staff உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: புதுவை அரசு வேலை

நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை(புதுவை)

பணி:

1)Village Assistant

2)Multi Tasking Staff

காலிப்பணியிடங்கள்:

இந்த இரு பணிகளுக்கென்று மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Village Assistant

காலிப்பணியிடம்: 63

கல்வித் தகுதி:

Village Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Multi Tasking Staff

காலிப்பணியிடம்: 09

கல்வித் தகுதி:

Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இந்த பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இவ்விரு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**எழுத்து தேர்வு

**சான்றிதழ் சரிபார்ப்பு முறை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://recruitment.py.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: Village Assistant,Multi Tasking Staff பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் 16 இறுதி நாள் ஆகும்.

உங்களுக்கு பைல்ஸ் இருக்கா? எச்சரிக்கை.. இந்த உணவுகள் எமனாக மாறலாம்!!

0

ஆசனவாய் பகுதியில் வரும் புண்களை மூலம் அதாவது பைல்ஸ் நோய் என்று சொல்கின்றோம்.இந்த மூல நோய் வந்தால் மலத்தை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும்.சில நேரம் இரத்தம் கலந்த மலம் வெளியேறும்.ஆசனவாய் புண்களால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படும்.இந்த பைல்ஸ் பாதிப்பு வருவதற்கு பல காரணங்கள் உண்டு.

செரிமானப் பிரச்சனை
மலம் அடக்கி வைத்தல்
ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்

பைல்ஸ் பாதிப்பு அறிகுறிகள்:

ஆசனவாய் பகுதியில் அரிப்பு
ஆசனவாய் எரிச்சல்
மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வருதல்
மலம் கழிப்பதில் சிரமம்

பைல்ஸ் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:-

அதிக காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதிக புளிப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகள்,கத்தரிக்காய்,அவரைக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.பதப்படுபடுத்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

பைல்ஸ் பாதிப்பை குணப்படுத்தும் உணவுகள்:-

துத்திக் கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.பப்பாளி,ஆப்பிள்,மாதுளை போன்ற பழங்களை சாப்பிடலாம்.

புரதம் நிறைந்த பால்,முட்டை போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடலாம்.அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

மூலத்திற்கு வீட்டு வைத்தியம்:

1)துத்தி கீரை
2)சின்ன வெங்காயம்
3)நல்லெண்ணெய்
4)உப்பு

முதலில் சிறிதளவு துத்தி கீரையை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அடுத்து 10 சின்ன வெங்காயத்தை நறுக்கி எண்ணையில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து சுத்தப்படுத்தி வைத்துள்ள துத்தி கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.

பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.