Home Blog Page 189

ஆப்பிளின் மீது ஒட்டப் பட்டிருக்கும் sticker-ல் இருந்து ஆப்பிளின் தரத்தை கண்டறியலாம்!!

0

அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் காய்கறி,பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது என்பது குறித்த சந்தேகம் உங்களுக்கு எழும்.குறிப்பாக ஆரஞ்சு,ஆப்பிள் பொன்னிற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.பழம் நல்ல நிலையில் இருக்கின்றதா என்று பார்த்து வாங்கும் நாம் பழத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை கவனிக்க தவறுகின்றோம்.

அதேபோல் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அது தரமான பழம் என்று அனைவரும் நினைக்கின்றனர்.நாம் மார்க்கெட்டில் பழங்கள் வாங்கும் முன் நிச்சயம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.பழங்களில் ஸ்டிக்கர் இருக்கிறதா என்று மட்டும் பார்க்காமல் ஸ்டிக்கரில் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

நாம் வாங்கும் பழங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் பழம் எவ்வளவு புதியவை என்று பார்த்து வாங்க உதவியாக இருக்கிறது.உள்ளூர் சந்தையில் விற்கப்படும் பழங்களில் இந்த ஸ்டிக்கர் பார்ப்பது அரிது.ஆனால் பல் பொருள் அங்காடியில் உள்ள பெரும்பாலான பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

பழத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் அவை மரபணு மாற்றப்பட்டதா? இயற்கை சூழலில் விளைந்ததா என்று அறிந்து கொள்ள முடியும்.அதேபோல் பூச்சிக் கொல்லி போன்ற இரசாயனங்கள் தெளிக்கப்பட்ட பழமா? அலல்து ஆர்கானிக் பழமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.ஆப்பிள் போன்ற பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை பார்த்தால் அதில் எத்தனை இலக்க எண் இருக்கிறது என்பதை கவனியுங்கள்.

4 இலக்க எண் இருந்தால் பழம் கெமிக்கல் இல்லாமல் சாதாரணமாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.நீங்கள் வாங்கும் பழத்தில் ஐந்து இலக்க எண் இருந்து அதன் முதல் எண் 8 என்று தொடங்கினால் அது மரபணு மாற்றப்பட்டது என்று அர்த்தம்.

இதுவே ஐந்து இலக்கத்தில் 9 என்ற எண் முதலில் தொடங்கினால் அது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழம் என்று அர்த்தம்.இனி ஆப்பிள் மட்டுமின்றி ஆரஞ்சு,வாழை போன்ற எந்த பழங்கள் வாங்குவதற்கு முன்பும் அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை கவனித்து பார்த்து வாங்குவது நல்லது.

30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

0

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.பள்ளி செல்லும் வயதில் குழந்தை பெற்று வளர்த்தனர்.ஆனால் தற்பொழுது நிலைமை மாறிவிட்டது.பெண்கள் படிப்பு,வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பம் அவர்களிடம் குறைந்து வருகிறது.ஒருவேளை 25,26 வயதில் திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்கின்றனர்.

30 வயதை கடந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகின்றனர்.இப்படி வயது கடந்த பிறகு குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் சில விஷயங்களை நிச்சயம் கவனிக்க வேண்டும்.சில பெண்கள் 35 வயதை கடந்த பிறகு கருவுறுதலுக்கு திட்டமிடுகின்றனர்.இப்படி குழந்தைக்கு திட்டமிடுவதை காலம் தாமதம் செய்யும் தம்பதிகள் சில விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

30,35 வயதை கடந்த பெண்களுக்கு இரத்த அழுத்தம்,ஹார்மோன் குறைபாடு போன்ற காரணங்களால் எளிதில் கருவுற முடியாமல் போகும்.வயது கடந்த பின்னர் கருத்தரித்தலுக்கு திட்டமிடும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

30 வயதை கடந்த தம்பதிகள் கருவுறுதலுக்கு திட்டமிடும் முன்பு சில விஷயங்களை கவனியுங்கள்.உங்கள் உடல் எடையை பராமரிக்க வேண்டியது முக்கியம்.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.பெண்கள் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.ஆண்கள் விந்தணு தரத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.உடலை அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.அதேபோல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

30 வயதை கடந்தவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டால் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

0

நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில தவறுகள் தரித்திரம் உண்டாக காரணமாகிவிடும்.நமக்கு தரித்திரம் பிடித்தால் நினைத்த காரியங்கள் தடைபடும்.நல்ல செயல்கள் நடக்க காலதாமதமாகும்.தரித்திரம் பிடித்தால் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படும்.குறிப்பாக நாம் சாப்பிடும் பொழுது செய்யக் கூடிய விஷயங்களால் மட்டுமே அதிக தரித்திரம் பிடிக்கிறது.நாம் சில விஷயங்களை மதிக்காமல் செய்வதால் தரித்திரம் பிடிக்கிறது.

நாம் மடியில் தட்டு வைத்தபடி சாப்பிட்டால் தரித்திரம் பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.சிலர் சாப்பிட்ட தட்டை கழுவி சுத்தம் செய்யாமல் இருப்பர்.இந்த பழக்கம் இருப்பவர்களுக்கு தரித்திரம் பிடிக்கும்.அதேபோல் இலையை வலித்து சாப்பிடுதல்,கை விரல்களை சூப்பி சாப்பிடுதல் போன்றவற்றை செய்பவர்களுக்கு தரித்திரம் பிடிக்கும்.ஒழுக்கம் இல்லாமல் சாப்பிடுதல்,உணவிற்கு மரியாதை கொடுக்கலாமல் இருந்தால் தரித்திரம் பிடித்துக் கொள்ளும்.

அதேபோல் சாப்பிட்டு தட்டை கையில் ஏந்தியபடி சாப்பிடக் கூடாது.சாப்பிடும் தட்டில் எச்சில் துப்புதல்,தட்டில் கால் படுதல் போன்ற செயல்களை செய்தால் தரித்திரம் பிடிக்கும்.உணவை வீணாக்குதல்,சாப்பாட்டு தட்டை சுத்தமாக கழுவாமல் இருத்தல் போன்றவை தரித்திரம் பிடிப்பதற்கான செயல்கள்
ஆகும்.

எனவே இதுபோன்ற கெட்ட செயல்களை தவிர்த்துவிடுவது உங்களுக்கு நல்லது.உணவிற்கு மட்டுமின்றி சாப்பிடும் தட்டிற்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.உணவு நமக்கு உயிர் வாழ தேவைப்படும் அடிப்படை விஷயமாகும்.அப்படி இருக்கையில் நாம் உணவிற்கு மரியாதை கொடுத்தால் மட்டுமே உணவு பஞ்சம் வராமல் இருக்கும்.எனவே இனி சாப்பிடும் போது மேலே சொல்லப்பட்டுள்ள தவறுகளை செய்யாமல் இருங்கள்.

டெல்லியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!!

0

நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஊக்கமருந்து சோதனை ஆய்வகம்

பணி: டெக்னிக்கல் உதவியாளர்(Technical Assistant)

காலிப்பணியிடங்கள்: Technical Assistant பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிட அறிவிப்பு
வெளியாகி இருக்கின்றது.

கல்வித் தகுதி:

Technical Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய உள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் மருந்தாக அறிவியல்,மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்,உயிரியல் போன்ற பாடப் பிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

Technical Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.1,12,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு
நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம்:

பொது பிரிவினருக்கு ரூ.1000/-

இதர பிரிவினருக்கு ரூ.500/-

விண்ணப்பம் செய்யும் முறை: ஆன்லைன் வழி

Technical Assistant பணிக்கு தகுதி இருப்பவர்கள் www.ndtlindia.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26/05/2025

ராமதாஸ் இனி கட்சிக்கு வேண்டாம்.. ஒரேடியாக புறக்கணிக்கும் நிர்வாகிகள்!! இனி எல்லாமே அன்புமணி தான்!!

0

PMK: பாமக வில் உட்கட்சி மோதல் போக்கானது தீவிரமடைந்து வருகிறது. அப்பா மகன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அது தலைமை பதவியை பங்கபோடும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது இளைஞரணி தலைவர் பதவிக்கு மகள் வழி பேரனான முகுந்தனை ராமதாஸ் நியமித்ததை அடுத்து அன்புமணிக்கு அதில் துளி கூட விருப்பமில்லை. இதன் எதிர்ப்பை பொதுக்கூட்டம் ஒன்றிலேயே வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு நான் தான் கட்சித் தலைவர் அன்புமணி கிடையாது என்ற அறிவிப்பையும் ராமதாஸ் வெளியிட்டிருந்தார். ஒரு சில தினங்கள் மௌனம் காத்த அன்புமணி, அனைத்து நிர்வாகிகள் தலைமையில் நான் தான் தேர்வு செய்யப்பட்டேன், அதனால் தலைமை பதவி எனக்கு தான் என்று பதிலுக்கு அவரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இப்படி இருக்கையில் இருவரும் மனம் ஒத்து சித்திரை பௌர்ணமி முழுநிலவு மாநாட்டை வெற்றி கரமாக நடத்து முடித்தனர்.

இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல முகுந்தனுக்கும் இந்த மாநாட்டில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தவே தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துவதாக ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால் நேற்று முதல் நாளிலேயே வெறுமனே பத்து நபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அன்புமணியும்  கலந்து கொள்ளவில்லை.

இரண்டாவது நாளான இன்று வழக்கம் போல் அன்புமணி இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பு செய்துள்ளார். அதேபோல பாமக முக்கிய நிர்வாகிகள் பலரும் அன்புமணி பின்னணியில்தான் இருக்கின்றனர். மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். உட்கட்சிக்குள் இப்படி மோதல் போக்கு இருக்கும்போது எப்படி வெற்றி பெற முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இராணுவ மரியாதையுடன் மேஜர் சுபதார் பவன் குமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!!

0

பூஞ்சில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த சுபேதார் மேஜர் பவன் குமார், இமாச்சலப் பிரதேசத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டார்.ஒயிட் நைட் கார்ப்ஸ் (GoC) பொது அதிகாரி கமாண்டிங் (GoC) லெப்டினன்ட் ஜெனரல் பி.கே. மிஸ்ரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆபரேஷன் சிந்தூர் போது வீரமரணம் அடைந்த சுபேதார் மேஜர் பவன் குமாருக்கு அஞ்சலி செலுத்தி , அவரது துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் சுபேதார் மேஜர் குமார் கொல்லப்பட்டார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

#OpSindoor நிகழ்வின் போது உச்சபட்ச தியாகத்தைச் செய்த #துணிச்சலான சுபேதார் மேஜர் பவன் குமாரின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு #GOC மற்றும் #WhiteKnightCorps இன் அனைத்து அணிகளும் வணக்கம் செலுத்துகின்றன. அவரது வீரமும் கடமைக்கான அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். துக்கத்தில் துக்கமடைந்த குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம்,” என்று கார்ப்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

குமாரின் மகன் இறுதிச் சடங்கை ஏற்றியபோது உணர்ச்சிகரமான காட்சிகள் வெளிப்பட்டன, அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான துக்கப்படுபவர்கள் அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர், “சுபேதார் மேஜர் பவன் குமார் அமர் ரஹே” (சுபேதார் மேஜர் பவன் குமார் வாழ்க) மற்றும் “பாகிஸ்தான் முர்தாபாத்” (பாகிஸ்தான் ஒழிக) என்ற கோஷங்களை எழுப்பினர்.

மூவர்ணக் கொடி போர்த்தப்பட்ட அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஜம்முவிலிருந்து ஷாபூருக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரை வரவேற்கும்போது துக்கக் குரல்கள் காற்றில் எதிரொலித்தன.

இமாச்சலப் பிரதேச சட்டமன்ற சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா மாநில அரசு சார்பாக அஞ்சலி செலுத்தினார். வேளாண் அமைச்சர் சந்தர் குமார், துணை துணை ஆணையர் ஹேம்ராஜ் பைர்வா, காவல் கண்காணிப்பாளர் ஷாலினி அக்னிஹோத்ரி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் விபின் பர்மர், முன்னாள் அமைச்சர் சர்வீன் சவுத்ரி, முன்னாள் எம்எல்ஏ அருண் குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, “அவரது துணிச்சலுக்கு நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் மாநில அரசு உறுதியாக நிற்கிறது” என்று கூறியுள்ளார்.

சுபேதார் மேஜர் பவன் குமார் ஷாபூரில் உள்ள வார்டு எண் 4 ஐச் சேர்ந்தவர் மற்றும் 25 பஞ்சாப் படைப்பிரிவில் பணியாற்றினார். அவரது தந்தை கரஜ் சிங், இந்திய ராணுவத்தில் ஓய்வு பெற்ற ஹவில்தார் ஆவார். அவருக்கு பெற்றோர், மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மூலிகை பொடி!! தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

0

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கிண்ணம் ஒன்றில் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

நாட்டு மருந்து கடையில் அமுக்கிரா கிழங்கு பொடி கிடைக்கும்.இதை 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து கிண்ணம் ஒன்றில் அமுக்கிரா கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)நிலப் பனங்கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு நிலப் பனங்கிழங்கை வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.பின்னர் கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு பனங்கிழங்கு பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி கலந்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கல்லீரலில் சேர்ந்த கொழுப்பை கரைக்க.. பூண்டு + எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்கள்!!

0

உடலில் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் கொழுப்பு படிவதால் அதன் ஆரோக்கியம் மோசமாகிறது.இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து மீள வெள்ளைப்பூண்டு மற்றும் எலுமிச்சையை மருந்தாக பயன்படுத்துவது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளைப்பூண்டு பற்கள் – நான்கு
2)எலுமிச்சம் பழம் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தோல் நீக்கிய பூண்டு பற்களை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.எலுமிச்சை சாறில் பூண்டு பற்கள் நன்றாக வெந்து வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.

பிறகு இதை மசித்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.பூண்டு பற்கள் கல்லீரல் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.இதை எலுமிச்சை சாறில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் கொழுப்பு கரையும்.

வியர்க்குரு கொப்பளங்கள் குணமாக.. வேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

0

கோடை காலத்தில் வியர்க்குரு கொப்பளம் அதிகமாக வருவது பொதுவான விஷயம்தான்.இந்த வியர்க்குரு கொப்பளங்கள் குணமாக வேப்பிலை,சந்தனம் உள்ளிட்ட பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம்.தினமும் குளிப்பதற்கு முன் இதை செய்து வந்தால் உடலில் வியர்க்குரு கொப்பளங்கள் வாராமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கைப்பிடி
2)சந்தனம் – ஒரு துண்டு
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
4)பன்னீர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு சந்தனத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து பேஸ்டாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைக்க வேண்டும்.இந்த வேப்பிலை பேஸ்ட் மற்றும் சந்தன பேஸ்ட்டை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இப்பொழுது தயாரித்து வைத்துள்ள கலவையை உடல் முழுவதும் பூசி காய வைத்து குளித்து வந்தால் வியர்க்குரு கொப்பளங்கள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கப்
2)ரோஸ் வாட்டர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த பேஸ்டை கிண்ணம் ஒன்றில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரை அதில் ஊற்றி மிக்ஸ் செய்யுங்கள்.இந்த கலவையை உடல் முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் வியர்க்குரு கொப்பளம் வராமல் இருக்கும்.

பேன் கடிக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

0

பள்ளி பருவத்தில் அனைவரும் பேன் தொல்லையை அனுபவித்து வந்திருப்போம்.தலையில் பேன் உருவானால் நிச்சயம் தலை அரிப்பு ஏற்படும்.அதேபோல் பேன்கள் நம் இரத்தத்தை உரிவதால் உடல் சோர்வு ஏற்படுகிறது.இந்த பேன் தொல்லையை ஒழிக்க என்ன செய்தும் தீர்வு இல்லை என்று புலம்புபவர்கள் ஏராளம்.

இந்த பேன் தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை பயன்படுத்துங்கள்.

வேப்ப எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
தேயிலை மர எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி தேயிலை மர எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை தலையில் தடவி வந்தால் பேன் தொல்லை முழுமையாக ஒழியும்.

பூண்டு பற்கள் – இரண்டு
தேங்காய் எண்ணெய் – மூன்று தேக்கரண்டி

முதலில் இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து தாளிப்பு கரண்டி ஒன்றில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

எண்ணெய் சிறிது சூடானதும் பூண்டு பற்களை பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதை குறைந்த தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த பூண்டு எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை முழுமையாக ஒழியும்.

வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – மூன்று தேக்கரண்டி

அடுப்பில் வாணலி வைத்து மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி வேப்பம் பூ போட்டு காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை நிரந்தரமாக ஒழியும்.