Home Blog Page 192

இந்த பழங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் சுகர் லெவல் எகிறாமல் அப்படியே குறையும்!!

0

நமது நாட்டில் நோய் பட்டியலில் முதலிடம் வகிப்பது சர்க்கரை நோய்தான்.இன்றைய சூழலில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருப்பதுதான் நிதர்சனம்.உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதையே சர்க்கரை நோய் என்கின்றோம்.இந்த சர்க்கரை நோய் பெரும்பாலும் உணவுப் பழக்கத்தாலே ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:

1.அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்
2.கண் பார்வை மங்குதல்
3.அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்
4.திடீர் உடல் எடை குறைவு
5.உடலில் ஏற்படும் காயங்கள் குணமாகாம தாமதமாதல்
6.உடல் சோர்வு

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பழங்கள்:

1)கொய்யாப்பழம்

ஆன்டி ஆக்ஸிடன்டஸ் அதிகம் நிறைந்து காணப்படும் கொய்யா பழத்தை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.

2)நாவல் பழம்

இந்த பழம் மற்றும் அதன் விதை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

3)நெல்லிக்காய்

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த காயில் ஜூஸ் செய்து பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

4)ஆப்பிள்

இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.ஆப்பிளில் இருக்கின்ற நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

5)சிட்ரஸ் பழங்கள்

இதில் இருக்கின்ற வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

6)கிவி

அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்களில் கிவியும் ஒன்று.இதை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட கிவி பழத்தை சாப்பிடலாம்.

7)கருப்பு திராட்சை

தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்படும்.அதேபோல் பேரிக்காய்,பிளம்ஸ்,பீச் போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

தமிழக அரசு வேலை!! 12 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்!!

0

நம் தமிழக அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த பணிக்கான தகுதி,சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை)

நிறுவனம்: தமிழக அரசு மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகம்

காலியிடங்கள்: மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: தென்காசி

பதவி:

1)ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர்

இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.MSW/MBA போன்ற படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் தரப்படும்.

2)கணினி உதவியாளர்

இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 ஊதியம் தரப்படும்.

3)வட்டார வள மைய பயிற்றுநர்

இந்த பணிக்கு மொத்தம் 10 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் தரப்படும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://tenkasi.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 30-05-2025

உங்கள் கிட்னி ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட இந்த கெட்ட பழக்கங்களே காரணம்!!

0

இன்று சிறுநீரகக் கோளாறால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இளம் வயதில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில் அதை கவனிக்காமல் விட்டால் கடுமையான பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட முதல் காரணம் நாம் போதிய அளவு தண்ணீர் பருகாமைதான்.அதேபோல் சில நோய்களாலும் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.நமது சிறுநீரகம் செயலிழக்க என்ன காரணம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணங்கள்:

1)அதிக உப்பு உணவுகள்
2)உடல் பருமன்
3)இரத்த அழுத்தம்
5)சர்க்கரை நோய்
6)நீர்ச்சத்து குறைபாடு
7)மோசமான உணவுப் பழக்கம்

நாம் சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டே இருந்தால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் சிறுநீரக ஆரோக்கியம் மோசமாக்கிவிடும்.சமச்சீரற்ற உணவுப் பழக்கம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்:

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

சிறுநீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.உலர் விதைகள்,பால் மற்றும் பால் பொருட்கள்,முழு தானிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

சிறுநீரகத்தில் குவிந்த அழுக்குகளை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)ரணகள்ளி இலை
2)தண்ணீர்

இரண்டு அல்லது மூன்று ரணகள்ளி இலைகளை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த ரணகள்ளி பானத்தை வடித்து பருகி வந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயை இந்த பொருட்களுடன் தப்பி தவறியும் சாப்பிட்டுவிடாதீர்!!

0

கோடை காலத்தில் நாம் சாப்பிட வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த காய்களில் ஒன்றாக வெள்ளரிக்காய் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக் கூடியவை ஆகும்.கோடை காலத்தில் மக்கள் ஆதிக்கம் விரும்பி சாப்பிடும் காயாக இது உள்ளது.

இந்த வெள்ளரிக்காய் உடல் தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.வயிறு தொடர்பான பாதிப்புகளை சரி செய்யும் மருந்தாக வெள்ளரி உள்ளது.வெள்ளரிக்காய் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கிறது என்றாலும் இதை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் நமது ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.

அப்படி வெள்ளரிக்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத மூன்று உணவுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

1)தயிர்

குளிர்ச்சி நிறைந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்று தயிர்.இவற்றுடன் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிட்டால் சைனஸ் பிரச்சனை ஏற்படலாம்.தயிர் மற்றும் வெள்ளரி ஆகிய இரண்டும் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் இவற்றை சேர்த்து சாப்பிட்டால் சளி பிரச்சனை வரக் கூடும்.

2)தக்காளி

தயிருடன் தக்காளி சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.தயிர் மற்றும் தக்காளி ஆகிய இரண்டும் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்த இரண்டு உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் pH மதிப்பு பாதிக்கப்பட்டுவிடும்.தக்காளி மற்றும் வெள்ளரி ஆகிய இரண்டையும் சாலட்டியில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை பலர் கொண்டிருக்கின்றனர்.இனி இந்த தவறை செய்யாமல் இருப்பது நல்லது.

3)முள்ளங்கி

வெள்ளரிக்காய் மற்றும் முள்ளங்கி ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இரத்த ஓட்டம் தடைப்பட்டுவிடும்.முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

தெரிந்து கொள்ளுங்கள்! தினமும் நாம் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் தெரியுமா?

0

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.உயிர் வாழ அடிப்படை விஷயமே தண்ணீர்தான்.அப்படி இருக்கையில் நாம் தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

தண்ணீர் ஆரோக்கிய பலன்கள்:-

நமது உடலுக்கு தேவையான தண்ணீரை பருகினால் உறுப்புகள் சீராக இயங்கும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்க உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.உடல் சுறுசுறுப்பாக இயங்க தண்ணீர் பருக வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,சிறுநீர் மாற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சரும வெடிப்பு,சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.அதேபோல் அளவிற்கு அதிகமாக தண்ணீர் பருகினால் மூளை ஆரோக்கியம் மோசமாகிவிடும்.வயிறு வீக்கம்,வாந்தி,குமட்டல் உணர்வு போன்றவை அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படுகிறது.அதேபோல் அதிகளவு தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.வயது மற்றும் உடல் எடையை பொறுத்து தண்ணீர் அளவு மாறுபடும்.19 வயதை கடந்தவர்கள் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.

30 வயதை கடந்தவர்கள் தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.அதாவது தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.குழந்தைகள் தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.உடல் களைப்பு பிரச்சனையை சந்திப்பவர்கள் கட்டாயம் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! மாரடைப்பு வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி!!

0

இன்றைய காலத்தில் இளம் தலைமுறையை அதிகம் பாதிக்கும் நோயாக மாரடைப்பு உள்ளது.மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் மாரடைப்பு ஏற்படுகிறது.தற்பொழுது இந்த நோய் பாதிப்பின் அதிகரிப்பு தீவிரமாக உள்ளது.

30 வயதிற்குள் இருப்பவர்களுக்கே இந்த இதய நோய் ஏற்படுகிறது.இதன் காரணமாக கொடிய நோயான மாரடைப்பு தற்பொழுது சாதாரண ஒரு நோய் பாதிப்பாக மாறிவிட்டது.வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோயாக இருந்த நிலையில் தற்போதைய வாழ்க்கை முறையில் வயது பேதமின்றி அனைவருக்கும் வரக் கூடிய நோயாகவே இது மாறிவிட்டது.

இதய நோய்களில் மாரடைப்பு,மார்பு வாலி,இருதய அடைப்பு என்று பல வகைகள் இருக்கின்றது.இதில் மாரடைப்பு பாதிப்பை சில அறிகுறிகள் வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

மாரடைப்பு அறிகுறிகள்:-

1)மார்பு பகுதியில் ஊசி குத்தல் வலி
2)மூச்சடைப்பு
3)மயக்க உணர்வு
4)கணுக்கால் வீக்கம்
5)தாடை வலி
6)தோள்ப்பட்டை வலி
7)அதிகமாக வியர்த்தல்
8)குளிர் உணர்வு
9)கழுத்து வலி

மாரடைப்பு பாதிப்பு யாருக்கு வர வாய்ப்பிருக்கிறது?

**நீரிழிவு நோய்
**இரத்த அழுத்தம்
**புகைப்பழக்கம்
**உடல் பருமன்
**மன அழுத்தம்

மாரடைப்பு வந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்?

ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடி மருத்துவ சேவையை வழங்க வேண்டும்.மாரடைப்பு தீவிரத்தை குறைக்க அவருக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கலாம்.

மாரடைப்பு ஏற்பட்டவரை பதட்டமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவர்களை நடக்க வைக்கக் கூடாது.ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் வரும் வரை பாதிக்கப்பட்டவரை பதட்டமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு CPR சிகிச்சை அளிக்கலாம்.இதுபோன்ற உதவிகள் செய்வதன் மூலம் மாரடைப்பு உயிரிழப்பை தடுக்க முடியும்.

2026 சட்டமன்ற தேர்தலில் இவருடன் தான் கூட்டணி.. முக்கிய முடிவை அறிவிக்கப்போகும் ராமதாஸ்!!!

0

PMK: பாமகவின் அப்பா மற்றும் மகனுக்கிடையே உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டமானது தைலாபுரத்தில் நடக்க உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாகவே நடந்து முடிந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்த்தி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பேரன் முகுந்தனுக்கு நாற்காலியும் ஒதுக்கப்படவில்லை.

இதற்கெல்லாம் காரணம் புரியாமல் நிர்வாகிகள் உள்ளனர். இவையனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இருக்குமென அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். குறிப்பாக வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது எந்த பக்கம் நமக்கு பலம் அதிகம் என்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளாராம்.

ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற விருப்பத்திற்கு நிர்வாகிகள் எந்த அளவிற்கு ஆதரவு உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள இருக்கிறாராம். அதேபோல இந்த கூட்டத்தில் உட்க்கட்சிக்குள் நடக்கும் மோதலை முடிக்கும் படியான முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 வது திருமணத்துக்கு ரெடியான சமந்தா.. தீயாக பரவும் போட்டோ கிளிக்ஸ்!!

0

CINEMA: நாக சைதன்யாவும் சமந்தாவும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் திருமண பந்தம் நெடு நாட்களாக தொடரவில்லை. இருவரும் மனமுவந்து விவாகரத்து பெற்ற நிலையில் நாக சைதன்யா சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா தனது கேரியரிலேயே முழு கவனத்தை செலுத்தினார். இதனிடையில் உடல் ரீதியாகவும் பாதிப்படைந்திருந்தார். ஆனால் இவர் இயக்குனர் ராஜ் நிதி மோரை ரகசியமாக காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

இவர்கள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டுள்ளனர். அது மட்டும் நன்றி சமந்தாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தை எடுத்து மேலும் இரண்டு படங்களில் ஒன்றாக வேலை செய்துள்ளனர். இதனால் இவர்கள் மீது பல கிசுகிசுக்கள் வைக்கப்பட்டது. அவ்வாறு பேசும் பட்சத்தில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்குமாறான புகைப்படங்களை சமந்தா இணையத்தில் வெளியிட்டார். இதனைப் பார்த்தவர்கள் இயக்குனர் மற்றும் நடிகை போல் இல்லாமல் அப்பாற்பட்ட உறவு இருப்பது போலவே புகைப்படம் மூலம் தெரிகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என்று பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது. தற்போது சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் இவரின் சுபம் என்ற படத்தை எடுத்துள்ளது. இது ரீதியான போட்டோ க்ளிக்சும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வதால் திரையுலகில் இப்படி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் பாஜக-வுடன்  கூட்டணி.. 100% உறுதி எந்த மாற்றமும் இல்லை!! தவெக முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி!! 

0

TVK BJP: பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சிடி ஆர்  பாஜகவுடன் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளது. இதனால் தன் வசப்படுத்த முடியாத கட்சிகளை எடப்பாடி கொண்டு பேச முடிவு செய்துள்ளனர்.

அதேபோல விஜய்யும் எடப்பாடியும் கூட்டணி எனக் கூறி வந்த நிலையில் திடீரென்று அவரும் கைவிரித்து விட்டார். இதனால் வரும் நாட்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் அதுமட்டுமின்றி பாஜகவின் ரகசிய கைக்கூலி தான் விஜய் என்றும் ஆளும் கட்சி  பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்தது. இது ரீதியான தெளிவான விளக்கத்தை தான் தற்போது சி டி ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அதில் செய்தியாளர் ஒருவர் நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்?? நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவெடுப்பார்.

அதே போல கொள்கை எதிரியையும் நாங்கள் கூறிவிட்டோம். அந்த வகையில் பாஜக-வுடன் கூட்டணி கிடையாது என்பது 100 சதவீதம் உறுதி அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவித்துவிட்டார். அதுமட்டுமின்றி கூட்டணி சம்பந்தமாக பேச இன்னும் நாட்கள் உள்ளது. உரித்த நேரத்தில் இது ரீதியாக தலைவர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

0

CINEMA: திரை பிரபலங்களின் விவாகரத்தானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதில் பெரும் பரபரப்பாக பேசப்படும் ஜோடி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தான். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் ஆர்த்தி நான் விவாகரத்து அளிக்க மாட்டேன் என பிடிவாதமாக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இதற்கு முக்கிய காரணம் பாடகியான கெனிஷா தான் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது ஜெயம் ரவி அதனை முழுமையாக மறுத்து வந்தார். அவர் எனது தோழிதான் மேலும் எனது ஹீலிங் பிரச்சினைகளுக்கு உதவிகரமாக இருந்தார் என தெரிவித்தார்.

ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் இல்லத் திருமண விழாவில் ஜெயம் ரவி கெனிஷா உடன் தான் கலந்து கொண்டார். இவர்களுடைய புகைப்படங்கள் சோசியல் மீடியா எங்கும் தீயாக பரவியது. இதனையடுத்து ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உருக்கமான பதிவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனால் ஒட்டுமொத்த கவனமும் அவர் மீது திரும்பியது. தற்போது அதனை எதிர்த்து ஜெயம் ரவி பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், நான் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் உள்ளேன், அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு.

என் மகன்களை பார்க்க அனுமதிப்பதில்லை. என் மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுக்கிறேன். அதேபோல நான் பிரிவது மனைவியை தான் தவிர குழந்தைகளை கிடையாது. பொருளாதார ரீதியாக அவர்களை தொல்லை செய்வதாக கூறுவது மிகவும் நகைச்சுவையாக உள்ளது. எனது இன்னல்களில் கூட இருந்தவர் கெனிஷா தான். தோழியாக இருந்தவர் தற்போது துணையாக மாறி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து கிடைத்ததும் கட்டாயம் ஜெயம் ரவி கெனிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவது உறுதியாகியுள்ளது.