Home Blog Page 194

மோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடி கலந்து குடித்தால்.. வயிற்றுப்புண்கள் குணமாகும்!!

0

வயிற்றுப்புண்,அல்சர்,வாய்ப்புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களை பின்பற்றலாம்.இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கின்ற பலனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சுண்டைக்காய் வற்றல் – 50 கிராம்
2)கற்றாழை வற்றல் – நான்கு
3)சுக்கு – ஒரு துண்டு
4)கருப்பு மிளகு – கால் தேக்கரண்டி
5)பெருங்காயத் தூள் – 10 கிராம்
6)வசம்புத் தூள் – 20 கிராம்
7)சீரகம் – கால் தேக்கரண்டி
8)அகத்திக் கீரை பொடி – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

சுண்டைக்காய்,கற்றாழை,அகத்திக் கீரை ஆகிய மூன்றையும் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இவை மூண்றையும் தனி தனியாக மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து சுக்கு,கருப்பு மிளக,வசம்பு,சீரகம் ஆகியவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்த பொருட்களை கிண்ணத்தில் கொட்டி கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு 10 கிராம் பெருங்காயத் தூளை அதில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து இதனை ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் முழுவதும் பசுந்தயிர் செய்யப்பட்ட மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த மோரில் தயாரித்து வைத்திருக்கும் பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு மிக்ஸ் செய்து பருகினால் வயிற்றுப்புண்கள் ஆறும்.

வயிற்றுப்புண்ணுக்கு மற்றொரு தீர்வு:

1)மணத்தக்காளி கீரை – ஒரு கப்
2)மணத்தக்காளி காய் – கால் கப்

இவை இரண்டையும் வெயிலில் நன்கு காயவைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை அரைத்து டப்பாவில்
கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு பொடியை தண்ணீரில் மிக்ஸ் செய்து பருகினால் வயிற்றுப்புண் குணமாகும்.

100 பிபி மாத்திரைக்கு இந்த ஒரு பூ சமம்!! இதில் டீ போட்டு குடித்தால் இரத்த அழுத்தம் கண்ட்ரோலாகும்!!

0

இன்றைய காலத்தில் உடல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வது அதிகரித்து வருகின்றது.நல்ல வாழ்க்கை முறையை யாரும் பின்பற்றுவதில்லை.இதன் காரணமாக உடலில் பல வியாதிகள் அண்டுகிறது.இதில் இரத்த நோய்களில் ஒன்றான உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

இனி மாத்திரை எதுவும் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க செம்பருத்தி பூவின் இதழில் டீ செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)செம்பருத்தி இதழ்கள்
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் பூச்சி விழாத செம்பருத்தி பூக்களை பறித்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து சேகரியுங்கள்.

அடுத்து செம்பருத்தி இதழ்களை நிழலில் போட்டு நன்றாக காய வைக்க வேண்டும்.இந்த செம்பருத்தி இதழை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.அதன் பிறகு அரைத்த செம்பருத்தி இதழ் பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.

நீர் நிறம் மாறி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த செம்பருத்தி பானத்தை கிளாஸிற்கு வடித்து தேவைக்கேற்ப தேன் அல்லது பனங்கற்கண்டு போன்ற இனிப்பு கலந்து குடித்து வர இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

இந்த செம்பருத்தி டீ குடிப்பதால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.செம்பருத்தி பானம் இரத்தத்தை தூய்மைப்படுத்த உதவுகிறது.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக செம்பருத்தி பூவில் டீ போட்டு குடிக்கலாம்.சருமப் பிரச்சனைகள் அகல செம்பருத்தி இதழில் டீ செய்து குடிக்கலாம்.

தீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!

0

சளி,ஆஸ்துமா,தொண்டை கட்டல்,தொண்டை எரிச்சல்,இருமல்,சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக ஆடாதோடை இலையை மருந்தாக சாப்பிடலாம்.ஆடாதோடை இலையை வைத்து மருந்து தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

ஆடாதோடை இலை
வெந்நீர்
தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதனை நிழல்பாங்கான இடத்தில் பரப்பிவிட்டு காய வைக்க வேண்டும்.

ஆடாதோடை இலை நன்றாக காய்ந்து வந்த பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.இந்த நீரில் ஒரு தேக்கரண்டி ஆடாதோடை இலை பொடி போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து பெருகினால் சளி,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆடாதோடை இலை
2)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு அல்லது மூன்று ஆடாதோடை இலையை இட்லி பாத்திரத்தில் போட்டு ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் ஆடாதோடை இலையின் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் ஊற்றி கலக்கி பருக வேண்டும்.தொடர்ந்து மூன்றுவேளை பருகினால் சளி,ஆஸ்துமா,தொண்டை கட்டல்,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

ஆடாதோடை இலையை பொடித்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு கலந்து குடித்து வந்தால் சுவாசம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0

நாட்டின் பிரபல தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கு விவரமாக விளக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: கனரா வங்கி

கல்வித் தகுதி:

கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

வங்கி அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய உள்ளவர்களுக்கு வயது வரம்பு குறித்த விவரத்தை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிட வேண்டும்.

மாத சம்பளம்:

பணிக்கு தேர்வாகும் நபர்கர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல்

மேனேஜர் பணிக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் www.canmoney.in என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் மே 31 ஆகும்.

மேனேஜர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் கேட்கப்பட்டுள்ள ஆவணத்தை விண்ணப்பத்துடன் இணைத்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0

நமது தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்து சமய அறநிலைத் துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி இந்து சமய அறநிலைத் துறைக்கு கீழ் செயல்பபட்டு கொண்டிருக்கும் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயிலில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த கோயில் சென்னை எழும்பூரில் அமைந்திருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை,அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயில்(சென்னை எழும்பூர்)

பதவி:

1)மேளக்குழு – 01
2)பரிசாரகர் – 01
3)அலுவலக உதவியாளர் – 01
4)காவலர்(பகல் மற்றும் இரவு) – 06
5)திருவலகு – 03

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

1)மேளக்குழு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000/- முதல் ரூ.48,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

2)பரிசாரகர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.13,000/- முதல் ரூ.42,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

3)அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.39,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

4)காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11,000/- முதல் ரூ.36,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

5)திருவலகு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு

மேளக்குழு,பரிசாரகர்,அலுவலக உதவியாளர்,காவலர்,திருவலகு ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல்

இந்த பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://hrce.tn.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 09 ஆகும்.

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

0

தலைநகர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்து சமய அறநிலைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் அலுவலகம்(சென்னை)

பதவி:

**அலுவலக உதவியாளர் – 06

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதோடு தமிழில் நன்றாக எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர் இந்து மதத்தை கடைப்பிப்பவராக இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.58,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது 37 என்று என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல்

இந்த பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://hrce.tn.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் மே 28 ஆகும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர்,இந்து சமய அறநிலைத்துறை,எண்.119,உத்தமர் காந்தி சாலை,நுங்கம்பாக்கம்,சென்னை – 600 034.

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

0

கோயம்புத்தூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனம்: கடற்படை குழந்தைகள் பள்ளி

பணியிடம்: கோயம்புத்துர்

பணி:

1)பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்
2)வாட்ச்மேன்

கல்வித் தகுதி:

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்:

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் பி.ஏ,பி.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாட்ச்மேன் பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 08 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகப்பட்ச வயது 35 என்று என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல்

இந்த பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://ncscoimbatore.nesnavy.in/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 05 ஆகும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

recruitmentncscbe16@gmail.com

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

0

மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு கொண்டிருக்கும் நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி:

*Deputy Manager

காலிப்பணியிடங்கள்:

Deputy Manager பணிக்கு மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்:

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங் துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது 30 என்று என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

இந்த பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Deputy Manager பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: ஜூன் 09

Deputy Manager பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் 09 இறுதி நாள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டீ காபி வேண்டாம்.. காலையில் சுறுசுறுப்பாக இருக்க இந்த ட்ரிங்க் குடிங்க!!

0

காலை நேரத்தில் பருகும் ஒரு பானம் டீ,காபி.பாலில் தயாரிக்கப்படும் இந்த பானத்திற்கு பலரும் அடிமையாக இருக்கின்றனர்.ஆனால் இந்த பானங்களால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது.இதற்கு மாறாக உடல் ஆரோக்கியம்தான் கெடத் தொடங்கும்.எனவே இனி டீ,காபிக்கு பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானங்களை செய்து பருகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

1)நெல்லிக்காய் நீர்

முதலில் நான்கு பெரிய நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.இதை பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த நெல்லிக்காய் பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு இந்த பானத்தில் தேன் கலந்து பருக வேண்டும்.நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

2)மஞ்சள் நீர்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.

3)ஆளிவிதை நீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆளிவிதை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த ஆளிவிதை பானத்தை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

4)அருகம்புல் நீர்

அதேபோல் காயவைக்கப்பட்ட அருகம்புல்லை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைக்க வேண்டும்.பிறகு ஒரு கிளாஸ் வெந்நீரில் இந்த அருகம்புல் பொடியை போட்டு கலக்கி பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. உடலில் கோடை சூடு அப்படியே குறையும்!!

0

கொளுத்தி எடுக்கும் வெயிலால் உடல் அதிக சூடாகிவிடுகிறது.இதனால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.உடல் சூட்டால கண,சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.எனவே உடல் சூடு தணிய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி குளிர்ச்சி தரும் பானம் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலை – 10
2)இஞ்சி துண்டு – ஒன்று
3)உப்பு – சிறிதளவு
4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.எலுமிச்சை விதையை மட்டும் நீக்கிவிடுங்கள்.

அடுத்து கிண்ணம் ஒன்றை எடுத்து பத்து புதினா இலைகளை போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு சிறிய துண்டு இஞ்சு எடுத்து தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை இடித்து புதினா தழையுடன் சேர்க்க வேண்டும்.

அடுத்து பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதில் ஊற்ற வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)நன்னாரி வேர் – சிறிதளவு
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)சர்க்கரை பாகு – ஒரு தேக்கரண்டி
4)புதினா இலைகள் – ஐந்து

செய்முறை விளக்கம்:-

கிளாஸில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு நன்னாரி வேர் போட்டு ஊறவைக்க வேண்டும்.நன்னாரி வேர் நன்றாக ஊறிய பிறகு இந்த நீரை வேறொரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் எலுமிச்சை சாறு,புதினா இலை ஆகியவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை பாகுவை அதில் போட்டு கலக்க வேண்டும்.இந்த பானத்தை பருகினால் உடல் சூடாகாமல் இருக்கும்.