Home Blog Page 193

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

0

TN GOVERNMENT: திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வைத்து மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது. அதன்படி முதல் இரண்டு வருடங்கள் இந்த ரீதியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து மூன்றாவது வருடம் தான் இத்திட்டம் அமலுக்கு வந்தது. அதிலும் இத்திட்டம் குறித்து வரைமுறைகள் போடப்பட்டது. இதனால் பலருக்கும் இத்திட்டம் செல்லுபடியாகவில்லை.

அந்த வகையில் முதலில் ஒரு கோடி 63 லட்சத்து 57 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் ஒரு கோடி ஆறு லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கினர். இதனால் பெண்கள் பெரும்பாலானோர் அதிருப்தி அடைந்த நிலையில் மீண்டும் இது ரீதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்படி மேற்கொண்டு இதிலிருந்து 9 லட்சம் பேருக்கு மட்டுமே மீண்டும் கலைஞர் உரிமைத் தொகையானது கிடைத்தது.

இப்படி இருக்கையில் இந்த வருடம் பட்ஜெட் தாக்குதலில் 13 ஆயிரத்து 807 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. தற்போது வரை 1.15 கோடி பேருக்கு இத்திட்டம் பயனளிக்கிறது. அந்த வகையில் மாதம் ஆயிரம் என்றால் 1.15 கோடி பேருக்கும் 13,800 கோடி தேவை, மீதம் 7 கோடி மட்டுமே இருக்கும் நிலையில் தமிழக அரசு தற்போது திட்டத்தை விரிவாக்கம் செய்வதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் முதல் இதற்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட உள்ளது.

ஒன்பதாயிரம் மையங்கள் அமைத்தால் ஒரு மையத்திற்கு 100 பேர் என்றால் கூட ஒன்பது லட்சம் பேர் பட்டியலிட நேரிடும். அச்சமயம் இந்த 7 கோடி ரூபாய் போதுமானதாக இருக்காது. சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி திட்டமிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றும் செயல்முறை என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

0

NTK: நாம் தமிழர் கட்சியினருக்கும் டி ஐ ஜி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி அது நீதிமன்றம் வந்தடைந்தது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது சீமான் பேசிய ஆடியோ ஒன்றை இவர் வெளியிட்டதாக கூறி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் சீமான் பேசியுள்ளார். மேற்கொண்டு அவரது குடும்ப உறுப்பினரையும் அவ்வாறு பேசியதால் பொறுக்க முடியாமல் இது ரீதியாக நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் வருண் குமார் மனு அளித்தார்.

தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை முடிந்த பாடில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறை வழக்கு அமர்வுக்கு வரும்போதெல்லாம்  முறையாக சீமான் வருவதில்லை. மாறாக தனது வழக்கறிஞரையே அனுப்பி வைக்கின்றார். கடந்த முறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு அமர்வுக்கு வந்த போது சீமான் ஏப்ரல் ஏழாம் தேதிக்குள் ஆஜராகவில்லை என்றால் கட்டாயம் பிடிவாரண்ட் கொடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அந்த வகையில் சீமான் எட்டாம் தேதி ஆஜராகி இது ரீதியாக விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் வழக்குகளிலும் சீமான் வரவில்லை. அந்த வகையில் இம்முறையும் வராததால் சீமான் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு முறையும் இதை போல தான் ஏதேனும் காரணம் சொல்லி மலுப்புகிறீர்கள். கடந்த முறையே கட்டாயத்தினால் தான் சீமான் வர நேர்ந்தது, இனி வரும் நாட்களிலும் இது போல் நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளார். மீண்டும் இந்த வழக்கு அமர்வுக்கு வரும்போது சீமான் ஆஜராகவில்லை என்றால் கட்டாயம் பிடிவாரண்ட் கொடுக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக கட்டுமரம் கவிழப்போகுது.. எடப்பாடி போட்ட லிஸ்ட்!! கலக்கத்தில் திமுக!!

0

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணியானது கட்டாயத்தினால் இணைக்கப்பட்டது என்று ஆளும்  கட்சியானது பல்வேறு கருத்துகளை கூறியது. அதிலும் குறிப்பாக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு விழாவில் பேசியபோது, எடப்பாடி-யாரின் சம்மந்தியார் 750 கோடி ஊழலில் அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இதிலிருந்து தப்பிக்கவே டெல்லிக்கு எடப்பாடி ஓடோடி சென்று கூட்டணிக்கு ஒப்பந்தம் தெரிவித்ததாக கூறியிருந்தார்.

இப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் திமுகவை எதிர்க்கவே இந்த கூட்டணியை வைத்துள்ளதாக கூறி வருகின்றனர். அதிலும் திமுக மீது அதிருப்த்தி நிறைந்த கட்சிகளை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கூட்டணியில் தேமுதிக வைக்கும் ஒரே கோரிக்கை எம் பி சீட் வேண்டும் என்பதுதான், அதனை கொடுத்து விட்டால் கூட்டணி உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இது ரீதியாக தொடர்ந்து தேமுதிகவிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல சீமானிடமும் எடப்பாடி நெருக்கம் காட்டி வருகிறார். அதாவது மக்கள் ஓட்டை சிதறவிடாமல் கூட்டணிக்குள் இணைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தை எடப்பாடி கையில் எடுத்துள்ளார். இதனால் ஒவ்வொரு கட்சியினரிடமும் அதன் தேவையை கேட்டு ஆலோசனை செய்து வருகிறார். இந்த லிஸ்டில் பாமக மற்றும் தவெக- மட்டும் தான் விடுபட்டுள்ளது. ஏனென்றால் பாமாவின் மொத்த செல்வாக்கும் பாஜக – வால் அதன் பெயர் மாறிவிட்டது என்று ராமதாஸ் முழுமையாக எண்ணுகிறாராம்.

இதனை மீட்டெடுக்க திமுக வுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறுகின்றனர். ஆனால் அவரது மகனை வைத்து கட்சிக்குள் இழுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்களாம், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதேபோல விஜய்யுடனும் பாஜக அறியாத முகங்கள் வைத்து பேச முயற்சிப்பதாகவும் கூறுகின்றனர். அந்தவகையில் தேர்தல் நெருங்கும் சமயத்திலேயே அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து தெரியவரும்.

பேரனை தூக்கி பிடிக்கும் ராமதாஸ்.. மகனே இனி வேண்டாம்!! ரிவெஞ் கொடுக்கப்போகும் அன்புமணி!!

0

PMK: அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவருக்கும் இடையே கட்சி தலைமை குறித்து மோதல் இருந்து வருகிறது. அதிலும் ராமதாஸ் அவர்கள் மீண்டும் நானே தான் தலைவர் என்று கூறிய போதிலும், அதனை அவரது மகன் ஏற்கவில்லை. அவரும் ஒரு பக்கம் நான் தான் தலைவர் என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி கட்சி தலைமைக்கு போட்டியிட்டு வருவது நிர்வாகிகள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது.

இதற்கு அடுத்த கட்ட பிரச்சனையாக யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தான் போட்டி நிலவுகிறது. அதாவது அதிமுக மற்றும் பாஜக இருவருடனும் கூட்டணி வைத்து எந்த பயனுமில்லை இதனால் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்பதை ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதனை அன்புமணி முற்றிலும் மறுப்பு தெரிவித்து பாஜகவுடன் கூட்டணி வேண்டும் அப்போதுதான் எனக்கு மீண்டும் எம்பி சீட் கிடைக்கும் என்கிறாராம்.

ஆனால் ராமதாஸ் அன்புமணி கூறுவதை துளி கூட ஏற்காமல், மகனுக்கு பதில் மகளின் பேரனை வைத்து கட்சியை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி வருகிறாராம். அதனால் தான் இது என் கட்சி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று கரார் காட்டுகிறார். அப்படி அன்புமணி கட்சியை விட்டு விலகும் பட்சத்தில் பாஜக அல்லது தமிழக வெற்றிக்  கழகத்துடன் கூட்டணி வைக்க நேரிடும் என்கின்றனர் நன்கு தெரிந்த அரசியல் வட்டாரங்கள். மேலும் அன்புமணிக்கு ஆதரவாக பலர் பாமக வை விட்டு வெளியேறலாம் என்றும் கூறுகின்றனர்.

வீட்டு அலமாரி மற்றும் சுவற்றில் எண்ணெய் கறை படிந்திருக்கா? 2 நிமிடத்தில் நீக்கும் மேஜிக் இதோ!!

0

உங்கள் வீட்டில் படிந்திருக்கும் அழுக்கு,எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
வினிகர் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு வினிகர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை வீட்டில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடத்தில் ஊற்றி தேய்த்தால் அவை எளிதில் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

எலுமிச்சம் பழம் – ஒன்று
உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு வீட்டில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடத்தில் ஊற்றி தேய்த்தால் கறைகள் சீக்கிரம் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

பாத்திரம் கழுவும் திரவம் – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவிற்கு பாத்திரம் கழுவும் திரவத்தை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை வீட்டில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடத்தில் ஊற்றி தேய்த்தால் அவை முழுமையாக நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பிரஷ் – ஒன்று
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
3)பாத்திரம் கழுவும் திரவம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி பாத்திரம் கழுவும் திரவத்தை ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு அதில் பிரஸ் நினைத்து எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பகுதியில் வைத்து தேய்த்தால் அவை சீக்கிரம் நீங்கிவிடும்.

உங்கள் பிறந்த மாதம் இதுவா? அப்போ நீங்கள் கோடீஸ்வர யோகக்காரர்!!

0

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் ஆளுமையை அறிய முடியும் என்றால் நம்ப முடிகிறதா.ஒவ்வொரு வருக்கும் அவர்கள் பிறந்த மாதத்தை பொறுத்து எதிர்கால பலன்கள் மாறும்.சிலர் பிறக்கும் போதே கோடீஸ்வர யோகம் கொண்டிருப்பார்கள்.அந்தவகையில் பிறக்கும் போதே பணக்கார யோகம் சில மாதத்தில் பிறந்தவர்களுக்கு கிடைக்கும்.

இந்த காலத்தில் பணத்தின் தேவை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அனைவரும் ஆடம்பர வாழ்க்கையை வாழ பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.அப்படி இருக்கையில் பிறக்கும் போதே தன யோகம் பெற்றிருந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்.

பிறக்கும் பொழுதே கோடீஸ்வர யோகம் பெற்ற மாதக்காரர்கள் யார்?

1)பிப்ரவரி
2)மே
3)ஜூலை
4)நவம்பர்

இந்த நான்கு மாதத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் பொழுது பண யோகம் பெற்றவர்கள் ஆவர்.பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஆடம்பரத்தை அதிகமாக விரும்புவார்கள்.ஆடம்பர வாழ்க்கையை வாழ அயராது உழைக்க கூடியவர்கள்.இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தின் அருமை நன்கு புரிந்தவர்கள்.

அதேபோல் மே மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் பணக்கார யோகம் பெற்றவர்கள்.இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை நம்புவார்கள்.

ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் முதலீட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் கடின உழைப்பால் பணத்தை ஈட்டி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.இம்மாதத்தில் பிறந்தவர்கள் பணம் மற்றும் அறிவை திறம்பட நிர்ணயிப்பார்கள்.

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எந்த தொழில் தொடங்கினாலும் அதில் லாபத்தை மட்டுமே பார்ப்பார்கள்.இந்த மே மாதத்தில் பிறந்தவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

உடல் எடையை குறைக்க முடியலையா? அப்போ இந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

0

உங்கள் உடல் எடையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடல் எடை கூடி நோய்கள் உருவாகிவிடுகிறது.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தய பானம் செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)எலுமிச்சை ஜூஸ் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

நீங்கள் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடுபடுத்துங்கள்.

தண்ணீர் சிறிது சூடானதும் ஒரு அளவிற்கு வெந்தயத்தை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.வெந்தய பானம் நன்றாக கொதித்து வரும் வரை காத்திருக்க வேண்டும்.

பிறகு இந்த வெந்தய பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை வெந்தய பானத்தில் பிழிந்துவிட வேண்டும்.பின்னர் இந்த பானத்தை பருகினால் உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பெருஞ்சீரக பானத்தை வடித்து தேன் ஊற்றி பருகி வந்தால் உடல் எடை தானாக குறைந்து கட்டுப்படும்.அதேபோல் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பருகி வந்தால் உடல் கொழுப்பு கரையும்.அதேபோல் கருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பருகி வந்தால் உடல் எடை குறையும்.

முடி கொட்டலுக்கு நிரந்தர தீர்வு இந்த எண்ணெய்!! முயற்சித்தால் 100% பலன் உண்டு!!

0

உங்களுளால் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த முடியவில்லையா.அப்போ நீங்கள் கலவைப்படாமல் இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம் – 10
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறாக்கவும்.

அடுத்து கிண்ணம் ஒன்றில் இந்த வெங்காயச் சாறை பிழிந்து வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணையை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து கற்றாழை மடலில் இருந்து ஜெல் எடுத்து அதை வெங்காயச்சாறுடன் சேர்க்க வேண்டும்.இதை நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனை தலைக்கு தடவ வேண்டும்.முடியின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு மேல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

இதுபோன்று செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.நீண்ட வருடங்களாக தலைமுடி உதிர்வு பாதிப்பை அனுபவித்து வருபவர்கள் இந்த வெங்காயச் சாறை தலைக்கு பயன்படுத்தி பலனடையலாம்.

அதேபோல் வெங்காயத்தை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தடவி வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.அதேபோல் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வெந்தயம் போட்டு ஊறவைத்து அதை தலை முடிகளுக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

நம்புங்க.. இந்த ட்ரிங்க் குடல் புழுக்களை மலத்தில் வெளியேறச் செய்யும்!!

0

உங்கள் குடலில் தேங்கிய புழுக்களை முழுமையாக வெளியேற்ற அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பூசணி விதை
2)தண்ணீர்
3)விளக்கெண்ணெய்

செய்முறை விளக்கம்:-

முதலில் 100 கிராம் அளவிற்கு பூசணி விதை வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த விதையை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

பூசணி விதை பொன்னிறமாக வறுபட்ட பிறகு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு டப்பாவில் இந்த பூசணி விதை பொடியை கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பூசணி விதைப்பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பூசணி விதை பானம் கொதித்து வந்த பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி சில துளிகள் விளக்கெண்ணெய் ஊற்றி பருகினால் குடலில் காணப்படும் புழுக்கள் மலத்தில் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)பாகற்காய் விதை – 50 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து 50 கிராம் பாகற்காய் விதை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பாகற்காய் விதை பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கிளாஸ் வெந்நீர் கலந்து பருகினால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.

அதேபோல் பாகற்காய் இலை,வேப்பிலை ஆகியவற்றை கொண்டு ஜூஸ் செய்து பருகினால் குடற்புழுக்கள் நீங்கிவிடும்.

கழுத்து சுற்றி கருப்பா இருக்கா? இதை காணாமல் போகச் செய்யும் சூப்பர் அழகு குறிப்பு!!

0

உங்கள் கழுத்திற்கு கீழ் கருமையாக இருந்தால் உங்கள் முக அழகு குறைந்துவிடும்.எனவே கழுத்தை சுற்றியிருக்கும் கருமையை நீக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஆரஞ்சு தோல்
2)சமையல் சோடா

செய்முறை விளக்கம்:-

தரமான ஆரஞ்சுத் தோலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஆரஞ்சுத் தோலை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு கிண்ணத்தில் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு சமையல் சோடா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் கழுத்து கருமை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)சமையல் சோடா

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த கற்றாழை ஜெல்லில் அரை தேக்கரண்டி அளவிற்கு சமையல் சோடா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் கழுத்தை சுற்றியிருக்கும் கருப்பு தானாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு சாறு
2)சமையல் சோடா

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த உருளைக்கிழங்கு சாறில் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து கழுத்துப் பகுதியை சுற்றி அப்ளை செய்து ஸ்க்ரப் செய்தால் கருமை நீங்கும்.