Home Blog Page 195

இரும்பு போல் எலும்பு மாற.. முருங்கை விதையை இப்படி 21 நாட்கள் சாப்பிடுங்கள்!!

0

உடலில் எலும்புகள் வலிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எலும்புகள் உறுதியாக இருந்தால் மட்டுமே மூட்டு வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருப்போம்.எனவே எலும்புகள் வலிமையை அதிகரிக்க இந்த முருங்கை விதையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை விதை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)பசும் பால் – 150 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் முருங்கை விதையை எடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி அளவிற்கு பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அரைத்த முருங்கை விதை பொடியை கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பால் கொதித்து கெட்டியானதும் கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நன்றாக கலந்து பருக வேண்டும்.இந்த முருங்கை விதை பால் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு – 10
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பாதாம் நன்றாக ஊறி வந்த பிறகு அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.

அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து அரைத்த பாதாம் விழுதை அதில் போட்டு பருக வேண்டும்.இப்படி செய்தால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.தண்ணீர் சூடானதும் ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த முருங்கை கீரை பானத்தை பருகி வந்தால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.

வீட்டில் இந்த எண்ணையில் தீபம் போட்டால்.. எப்பேர்ப்பட்ட சொத்துப் பிரச்சனை நீங்கும்!!

0

இன்றைய உலகத்தில் பணம்,சொத்து போன்றவற்றை தேவையான அளவு சேமித்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் பிரச்சனை இல்லாத வகையில் அமைகிறது.சிலர் நகை,பணம்,சொத்து போன்றவற்றை அளவிற்கு அதிகமாக சேமித்தாலும் ஏதோ ஒரு காரணங்களால் அவை அவர்களின் கையை விட்டு நழுவி சென்றுவிடுகிறது.சிலருக்கு பல வருடங்களாக சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது.

எனவே சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகி இழந்த சொத்துக்களை மீட்டெடுக்க இந்த சொல்லப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள்.

ஒரு கருநீல நிறத்தில் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் சிறிதளவு வெண்கடுகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை முடிந்து விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த விளக்கை தொடர்ந்து எட்டு சனிக்கிழமை நாளில் ஏற்றி வழிபட வேண்டும்.இப்படி செய்தால் சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.சனிக்கிழமை நாளில் நல்லெண்ணெய் விளக்கு போடுவது போல் வெள்ளிக்கிழமை நாளில் இலுப்பை எண்ணையில் விளக்கு போட்டால் இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கலாம்.

வெள்ளிக்கிழமை நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து குளிக்க வேண்டும்.பிறகு வீட்டு பூஜை அறைக்கு சென்று மண் விளக்கு வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வெள்ளிக்கிழமை நாளில் தொடங்கும் இந்த தீபம் ஏற்றும் முறையை தொடர்ந்து 48 தினங்கள் செய்து வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாச்சம் உண்டாக.. இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!

0

எந்த ஒரு வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாரோ அந்த வீட்டில்தான் செல்வ செழிப்பு ஏற்படும்.லட்சுமி தேவிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் வீட்டில் பூஜை செய்து வழிபட்டால் கடன் பிரச்சனை வராமல் இருக்கும்.

மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.இன்றைய சூழலில் பணம் மட்டுமே எல்லாத்தையும் கொடுக்கிறது.பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

நமக்கு தடையின்றி பணம் வந்து கொண்டே இருக்க மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டுமென்று இங்கு சொல்லப்பட்டுள்ளது.லட்சுமி தேவிக்கு உகந்த பொருட்களை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வ செழிப்பு ஏற்படும்.

மகாலட்சுமிக்கு உகந்த பொருட்கள்:

மல்லிகை பூ,வெற்றிலை,நெல்லிக்காய்,கல் உப்பு போன்றவை மகா லட்சுமி குடியிருக்கும் பொருட்களாகும்.அதேபோல் ஏலக்காய்,பச்சை கற்பூரம்,சோம்பு போன்ற பொருட்கள் மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களாகும்.

இதுபோன்ற வாசனை நிறைந்த பொருட்களை மகாலட்சுமி தயார் படம் உள்ள இடத்தில் வைத்து வழிபட்டு வந்தால் தன யோகம் உண்டாகும்.அதேபோல் வீட்டில் பணம்,நகை வைக்கும் பீரோ,பணப் பெட்டி போன்றவற்றில் இந்த பொருட்களை வைத்தால் தன யோகம் உண்டாகும்.பணப் பிரச்சனை,வீண் விரயம் போன்றவை ஏற்படாமல் இருக்க லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமை நாளில் வணங்கி வரலாம்.

பூஜை அறையில் ஒரு பித்தளை தட்டில் வெற்றிலை வைத்து அதன் மீது மல்லிகைப்பூ,பாக்கு,வாழைப்பழம் போன்றவற்றை வைத்து லட்சுமி தேவியை வணங்கி வந்தால் பணப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

சண்டை சச்சரவு உள்ள குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க.. இந்த தீபத்தை போட்டு வழிபடுங்கள்!!

0

இந்த உலகில் பிரச்சனை இல்லாத குடும்பம் இல்லை.தினமும் ஏதேனும் ஒரு சண்டை வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.குடும்பம் என்றால் 1000 பிரச்சனைகள்,கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.இருப்பினும் தொடர்ந்து சண்டை மட்டுமே வரும் வீட்டில் ஒற்றுமை என்பதை பார்க்க முடியாமல் போய்விடும்.

குறிப்பாக கணவன்,மனைவி சண்டை அதிகமானால் குடும்பமே பிரிந்துவிடும்.குடும்பத்தில் தொடர்ந்து சண்டை முரண்பாடு இருந்தால் வீட்டில் நிம்மதி,சந்தோஷம் இலலாமல் போய்விடும்.அதேபோல் மாமியார்,மருமகள் சண்டை இருக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்.

இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும் சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் மீள தீபம் போட வேண்டும்.இதை எந்த நாளில் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை நாளில் போட வேண்டும்.வெள்ளிக்கிழமை நாளில் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற முருகன் கோயிலுக்கு சென்று தீபம் போட்டு வழிபட வேண்டும்.மண் விளக்கு ஒன்றில் நல்லெண்ணய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

இந்த எளிய வழிபாட்டை முழுமனதோடு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாளிலும் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் எந்த ஒரு சண்டை சச்சரவும் இன்றி நிம்மதியாக வாழலாம்.வெள்ளிக்கிழமை முடியாதவர்கள் புதன் அல்லது வியாழக் கிழமை நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி?

0

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி?

இந்திய வான்படையின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி என இந்திய ராணுவம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“ஆபரேஷன் சிந்தூர்” எனும் இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையின் விவரங்களை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில், பாகிஸ்தானுக்குச் சீனாவால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை இந்திய விமானப்படை (IAF) தடையை மீறி முக்கிய இராணுவ தளங்களை அழித்தது.

இந்த தாக்குதல்கள் நூர் கான் மற்றும் ரஹீம்யார் கான் என்ற பாகிஸ்தான் விமான தளங்களில் இடம்பெற்றன. இவை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. மொத்த நடவடிக்கையும் 23 நிமிடங்களுக்குள் முடிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களில் சீனாவின் PL-15 ஏவுகணைகள் மற்றும் துருக்கியின் Bayraktar மாதிரிப் பயிற்சி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்தியாவின் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட பல அடுக்குகள் கொண்ட காற்று பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தின.

இந்தியாவின் முக்கிய வெற்றிகள்:

சீன பாதுகாப்பு அமைப்புகளை ஜாம் செய்து மீறியது.

எல்லையை அல்லது சர்வதேச எல்லையை மீறாமல், இந்திய சொத்துகளுக்கேதும் சேதம் ஏற்படாமல் நடவடிக்கைகள்.

பாகிஸ்தான் பயன்படுத்திய வெளிநாட்டு ஆயுதங்களின் பாழடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இந்தியாவின் மின்னணு போர் அமைப்புகள் மேலதிகம் திறமையாக செயல்பட்டன.

மத்திய அரசின் அறிக்கையின்படி:

“ஆபரேஷன் சிந்தூர் என்பது அசிமெட்ரிக் போர்த் தோற்றத்தில் இந்தியாவின் திட்டமிட்ட, துல்லியமான மற்றும் மூலோபாய ரீதியான பதிலடி நடவடிக்கை. இது இந்தியாவின் தொழில்நுட்ப சுயாதீனத்தையும் பாதுகாப்பு கொள்கையின் வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.”

இந்த தாக்குதலின் மூலம், “மேட்இன் இந்தியா” என்ற கொள்கையின் தாக்கத்தை உலகம் முழுவதும் இந்தியா விளக்கியுள்ளது.

திருமா-வை பட்டென கவிழ்த்த அன்புமணி.. பாஜக – வை எகிறியடிக்கும் பாமக!!

0

PMK DMK: பாமக கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அப்பா மகனுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை பொது வெளியிலேயே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர். இதனால் நிர்வாகிகள் உட்பட பலரும் கட்சித் தலைமை மீது அதிருப்தி தான். இதற்கு முக்கிய காரணம் அன்புமணி முன்பு வகித்திருந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸ் அவர்கள் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அமர்த்தினார்.

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் பதவி கொடுத்து விட்டால் இதுவும் வாரிசு அரசியல் ஆகிவிடும் எனக் கூறி அப்பாவையே அன்புமணி எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் ராமதாஸ் இது என் கட்சி, என் உரிமை என்று நேரடியாகவே தெரிவித்தது மட்டுமின்றி தானே தலைவர் என்றும் கூறிக்கொண்டார். இப்படி இருக்கையில் சித்திரை முழு நிலவு மாநாட்டையும் வெற்றி கரமாக நடத்தி முடித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த மாநாட்டில் சிறுபான்மை கட்சியினருக்கு அன்புமணி ஆதரவாக பேசியிருந்தார்.

இதற்கு திருமா அன்புமணியின் மனம் மாறிவிட்டது என அவரைப் பாராட்டி பேசியுள்ளார். இதற்கு முன்னதாகவே ராமதாஸ் திமுகவுடன் இந்த தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை செய்து வருவதாகவும் இதற்கு அன்புமணி முழு எதிர்ப்பு தெரிவிப்பதாக பல தகவல்கள் வெளியானது. ஏனென்றால் அன்புமணி வகித்து வரும் எம்பி பதவியானது கால அவகாசம் முடிவதையொட்டி மீண்டும் பாஜக கூட்டணியில் இருந்தால் மட்டுமே சீட்டு கிடைக்கும்.

இதனால் திமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி வருகிறார். ஆனால் ராமதாஸ், அதிமுக பாஜக கூட்டணியே வேண்டாம் திமுகவுடன் பழைய கூட்டணியில் மீண்டும் இணைவோம் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கையில் திருமா அன்புமணி பேசியதற்கு பாராட்டியுள்ளது அரசியல் ரீதியாக சற்று உற்று கவனிக்க வேண்டி உள்ளது. மேலும் அன்புமணி திருமா பேச்சுக்கு பாஜக-விடம் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அந்தவகையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் இவர்கள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரியும்.

சீமானின் அந்தர்பல்டி.. சற்றும் எதிர்பாரா எடப்பாடி!! குதூகலத்தில் பாஜக தலைமை!!

0

ADMK NTK: பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு முக்கிய காரணம் திமுக – வை முழுவதுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எண்ணித்தான். மேற்கொண்டு எடப்பாடியும் பாஜக வுடன் கூட்டணி வைக்க பல கட்டுப்பாடுகளையும் போட்டுள்ளார். இந்த கூட்டணியால் தான் அண்ணாமலையும் பதவியை இழக்க நேரிட்டது. இது ரீதியாக ஆரம்பக் கட்டத்திலிருந்தே பாஜக திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில்இறங்கியது.

இதனால் சீமானை தன் வசப்படுத்த, அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் அளிக்கும் முன்னரே பாஜக முயற்சித்து வந்தது. ஆரம்ப கட்டத்தில் இவர்கள் கூட்டணி உறுதியென கூறி வந்த நிலையில் நாங்கள் தனித்து தான் போட்டு விடுவோம் யாருடனும் கூட்டணி இல்லை என்று சீமான் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து பாஜக அதிமுகவை வைத்து கூட்டணிக்குள் இணைக்க அடுத்த திட்டத்தை போட்டது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவே சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இந்த பேச்சு வார்த்தையினால் தான் எடப்பாடி குறித்து சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் அதிமுக ரீதியாகவும் இணக்கம் காட்டி வருகிறார். இவர்கள் பேச்சு வார்த்தையில் தற்போது வரை எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்களாம். தொகுதி பங்கீடு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் இது ரீதியாக அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதற்குள் அதிமுக சீமானை கூட்டணிக்குள் இணைத்து விடும் என கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

உடல் சூட்டை குறைக்கும் சோம்பு!! இப்படி சாப்பிட்டால் 10 நன்மைகள் தாராளமாக கிடைக்கும்!!

நமது உடல் சூடு தணிய பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடிக்கலாம்.இது தவிர பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பெருஞ்சீரக பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வந்ததும் வடிகட்டி கொள்ள வேண்டும்.இந்த பானத்தை பருகினால் உடல் சூடு முழுமையாக குறையும்.

பெருஞ்சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள்:-

1.பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பெருஞ்சீரகத்தில் தேநீர் செய்து பருகினால் கண் பார்வை திறன் மேம்படும்.கண் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் பெருஞ்சீரக தேநீர் செய்து பருகலாம்.

2.உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் பெருஞ்சீரகத்தில் டீ செய்து பருகலாம்.இரத்த கொதிப்பு பாதிப்பு இருப்பவர்கள் சோம்பு பானம் செய்து பருகலாம்.

3.இரத்த சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பட பெருஞ்சீரக பானம் செய்து பருகலாம்.பெருஞ்சீராகத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் சருமம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து மீள சோம்பு பானம் செய்து பருகலாம்.

4.வாய் துர்நாற்றம் நீங்க பெருஞ்சீரக பானம் செய்து பருகலாம்.பெருஞ்சீரகத்தில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பெருஞ்சீரகத்தில் பானம் செய்து பருகலாம்.

5.தினமும் பெருஞ்சீரகம் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

6.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெருஞ்சீரக பானம் செய்து பருகலாம்.மூட்டு வலி,கை
கால் வலி போன்றவை குணமாக பெருஞ்சீரக பானம் செய்து பருகலாம்.

கோடையில் தயிர் புளிக்காமல் பிரஸாக இருக்க.. அசத்தல் டிப்ஸ் இதோ!!

0

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருள் தயிர்.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.தயிரை பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தயிர் சாப்பிடலாம்.சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள தயிர் சாப்பிட வேண்டும்.தயிரில் இருக்கின்ற நல்ல பாக்டீரியா வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும்.இப்படி பல நன்மைகள் கொண்டிருக்கும் தயிர் பிரஸாக இருந்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.

ஆனால் வெயில் காலத்தில் தயிர் பிரஸாக இருப்பது கடினம்.அதிக வெப்பத்தால் எளிதில் தயிர் புளித்துவிடும்.எனவே இந்த வெயில் காலத்தில் தயிர் புளிக்காமல் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

வெயில் காலத்தில் தயிர் புளிக்காமல் இருக்க டிப்ஸ்:

1)குளிர்ச்சி நிறைந்த இடத்தில் தயிரை வைக்க வேண்டும்.இப்படி செய்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்.

2)பிளாஸ்டிக் பாத்திரத்தில் தயிர் போடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் தயிரில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்துக் கொண்டால் அவை சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.

3)தயிர் எடுக்க பயன்படுத்தும் கரண்டியை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.தயிர் போடும் பால் பிரஸாக இருந்தால் சீக்கிரம் தயிர் கெடாமல் இருக்கும்.

4)உறைமோர் அதிகம் புளிக்க கூடாது.அதிகம் புளித்த உறைமோர் கொண்டு தயிர் தயாரித்தால் அவை சீக்கிரம் கெட்டுவிடும்.

5)அதேபோல் அதிக வாசனை நிறைந்த பொருட்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக பூண்டு,வெங்காயம்,மசாலா பொருட்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

சில எதிர்பாரா நேரங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு கொப்பளங்கள் உருவாகிவிடுகிறது.தீக்காயங்கள் சிறியதாக இருந்தாலே அதிக வலி மற்றும் எரிச்சலை கொடுக்கும்.அப்படி இருக்கையில் பெரியளவில் தீக்காயங்கள் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் சீக்கிரம் அதை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலர் தீக்காய எரிச்சல் குணமாக ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரை அதன் மீது ஊற்றுகின்றனர்.இப்படி செய்வது மிகவும் ஆபத்தான பழக்கமாகும்.இப்படி செய்தால் தீக்காயங்கள் சீழ் பிடித்துவிடும்.எனவே தீக்காயங்கள் மீது ஐஸ் வாட்டர்,குளிர்ந்த நீர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ்கட்டி வைத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவிடும்.

தீக்காயங்களை குணப்படுத்த அற்புத வழிகள்:

**சிறிதளவு வெண்ணெய் எடுத்து தீக்காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

**முட்டையின் வெள்ளைக்கருவை தீக்காயங்கள் மீது பூசினால் காயம் சீக்கிரம் ஆறிவிடும்.

**அதேபோல் தீக்காயங்கள் மீது நெய் தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

**ஓடும் நீரில் தீக்காயம் ஏற்பட்ட பகுதியை வைத்தால் காயங்களின் பாதிப்பு தீவிரமாகாமல் இருக்கும்.

**தீக்காயம் ஏற்பட்ட இடத்தை சோப் பயன்படுத்தி லேசாக கழுவலாம்.தீயக்காயம் உள்ள இடத்தில் கற்றாழை ஜெல் அப்ளை செய்யலாம்.

**தீக்காய அபாயத்தை தடுக்க ஆன்டிபயாடிக் மருந்து பயன்படுத்தலாம்.தீக்காய பாதிப்பு அதிகமாக இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகலாம்.இப்படி செய்தால் தீப்புண்ங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.