Home Blog Page 201

7 நாளில் 3 கிலோ குறைய.. மருத்துவர் பரிந்துரைத்த இந்த ஜூஸ் குடிங்க!!

0

உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்தால் எடை அதிகரித்துவிடும்.எனவே உடலில் குவியும் கழிவுகளை அகற்ற இந்த ஜூஸ் செய்து குடிங்க.

தீர்வு ஒன்று:

*எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
*இஞ்சி – ஒரு பீஸ்
*தூள் உப்பு – சிட்டிகை அளவு
*பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு

எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த எலுமிச்சை சாறை கிளாஸிற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாறை எலுமிச்சை சாறுடன் மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து சிட்டிகை அளவு தூள் உப்பு மற்றும் பெருங்காயத் தூளை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றி பருக வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் கொலஸ்ட்ரால் குறையும்.

தீர்வு இரண்டு:

*வெற்றிலை – ஒன்று
*மிளகு – நான்கு
*இஞ்சி – ஒரு பீஸ்
*தேன் – ஒரு ஸ்பூன்

ஒரு முழு வெற்றிலையை காம்பு நீக்கவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட வேண்டும்.

பின்னர் அதில் நான்கு மிளகு,ஒரு துண்டு தோல் நீக்கப்பட்ட இஞ்சி ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.

இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி பருகினால் உடல் எடை வேகமாக குறையும்.

தீர்வு மூன்று:

*துளசி – 15 இலைகள்
*இஞ்சி – ஒரு பீஸ்
*மிளகு – இரண்டு

முதலில் துளசி இலைகளை மிக்சர் ஜாரில் போட வேண்டும்.பிறகு இஞ்சி பீஸை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு மிளகை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும.இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.

எந்நேரமும் தோல் அரிப்பா இருக்கா? இந்த ஒரு இலை போதும்!! தோல் பிரச்சனையே வாழ்நாளில் வராது!!

0

வெயில் காலத்தில் உடலில் இருந்து அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் வெளியேறுவதால் தோல் அரிப்பு,தோல் நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து மீள்வதற்கான வழியை பின்பற்றி பலனை பெறுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை
2)மிளகு
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வெயிலில் பரப்பி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை பவுடர் பதத்திற்கு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு குப்பைமேனி இலை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு நான்கு மிளகை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த மிளகுத் தூளை கொதிக்கும் குப்பைமேனி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை பருகினால் தோல் அரிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை
2)குப்பைமேனி வேர்
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

குப்பைமேனி இலை மற்றும் குப்பைமேனி வேரை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த சாறை கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்த குப்பைமேனி சாறை அதில் ஊற்றி பருகி வர தோல் அரிப்பு,தோல் எரிச்சல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

0

மாதம் ஒருமுறை சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி சரியான நேரத்தில் வெளிப்பட பூசணி விதை,ஆளிவிதை,எள் விதை ஆகியவற்றை பயன்படுத்தி பானம் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)எள் விதை – அரை தேக்கரண்டி
2)பூசணி விதை – அரை தேக்கரண்டி
3)ஆளிவிதை – கால் தேக்கரண்டி
4)பால் – ஒரு கப்
5)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து சிறிது சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் எள் விதை,ஆளிவிதை,பூசணி விதை ஆகிய மூன்றையும் சொல்லிய அளவுபடி போட்டு வாசனை வரும் வரை குறைவான தீயில் வறுக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த விதை ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.பின்னர் ஒரு கப் பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பாலில் அரைத்த பொடியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பால் கெட்டியாகும் வரை காந்திருந்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.இந்த பாலை மாதவிடாய் காலத்திற்கு முன்பு மூன்று தினங்கள் பருகினால் மாதவிடாய் கோளாறு சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தய விதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து வெந்தய விதை போட்டு வறுக்க வேண்டும்.வெந்தயம் பொன்னிறமாக வறுக்கப்பட்ட பிறகு ஆறவைக்க வேண்டும்.இந்த வெந்தயத்தை பொடித்து வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்த வெந்தயப் பொடியை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் பாதிப்பு குணமாகும்.

உடல் சூட்டை 100% தணிக்க.. காலையில் இந்த கூழில் தயிர் கலந்து குடிங்க!!

0

உங்கள் உடலில் இருக்கின்ற சூடு தணிய கம்பு மாவில் கூழ்,அடை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுங்கள்.சிறுந்தானிய உணவுப் பொருளான கம்பு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இந்த கம்பு உணவை சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும்.

தேவையான பொருட்கள்:-

1)கம்பு – 100 கிராம்
2)தயிர் – கால் கப்
3)உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் 100 கிராம் கம்பை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள்.இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை வடித்துவிடுங்கள்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரைத்த கம்பு பொடியை கொட்டி கெட்டிப்படாமல் கிளற வேண்டும்.

தேவைப்பட்டால் அவ்வப்போது வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.கம்பு நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

கூழ் நன்றாக ஆறியப் பிறகு அதில் கால் கப் தயிர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பருகினால் உடல் சூடு தணியும்.

தேவையான பொருட்கள்:-

1)கம்பு பொடி – 100 கிராம்
2)சின்ன வெங்காயம் – 10
3)சீரகம் – கால் தேக்கரண்டி
4)கறிவேப்பிலை – ஒரு கொத்து
5)உப்பு – சிறிதளவு
6)தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

50 கிராம் அளவிற்கு கம்பு எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை வெயிலில் பரப்பி மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பாத்திரத்தில் கம்பு பொடியை கொட்டி கொள்ள வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி சீரகம்,ஒரு கொத்து நறுக்கிய கறிவேப்பிலையை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பு மாவை பிசைய வேண்டும்.

அடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் கம்பு மாவை அடை போல் தட்டி எண்ணெய் சேர்த்து சுட்டு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

வாட்டும் வெயிலிலும் உங்கள் சருமம் பொலிவாக இருக்கணுமா? அப்போ அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!!

0

கடுமையான வெயிலால் சருமம் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வருகிறது.சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள அரிசி மாவு பேஸ்பேக் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு – இரண்டு தேக்கரண்டி
2)தயிர் – ஒரு தேக்கரண்டி
3)தக்காளி – ஒன்று
4)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் பச்சரிசி இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த அரிசி பொடியை கிண்ணத்திற்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பசுந்தயிரை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் ஒரு தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை அரிசி பேஸ்ட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நான்றாக கலந்து சருமத்தில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் தோல் கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)முல்தானி மெட்டி – ஒரு தேக்கரண்டி
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கற்றாழை பேஸ்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.இதை சருமத்தில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்து குளித்தால் வெயில் கருமை நீங்கிவிடும்.

இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

கோடையில் உடல் சூட்டால் அக்கி புண் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த அக்கி புண்களை குணப்படுத்திக் கொள்ள இதை ட்ரை பண்ணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)விளாமிச்சை
2)காய்ச்சாத பால்
3)நெய்
4)கருங்குவலை

செய்முறை விளக்கம்:-

நீங்கள் மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து கிண்ணத்தில் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு பேஸ்டாக குழைத்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)அதிமதுரம்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் என்ற மூலிகை கிடைக்கும்.இதை அரைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த அதிமதுரப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் அக்கி புண்கள் சீக்கிரம் ஆறும்.

தேவையான பொருட்கள்:-

1)கோரைக்கிழங்கு

செய்முறை விளக்கம்:-

இந்த கோரைக்கிழங்கு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும.பிறகு ஒரு தேக்கரண்டி கோரைக்கிழங்கு பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகினால் அக்கி புண்கள் சீக்கிரமாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எருக்கன் பூ
2)விளக்கெண்ணெய்

செய்முடை விளக்கம்:-

முதலில் எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை வாணலியில் போட்டு லேசாக சூடாக்க வேண்டும்.அதன் பிறகு 100 மில்லி அளவு விளக்கெண்ணையை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகும்.

பிரியாணிக்கு மணம் சேர்க்கும் இந்த ஒரு பொருள்.. சிறுநீரக கல்லை கரைத்தெடுக்கும்!!

0

இன்று பலரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பாக சிறுநீரக கல் உள்ளது.எந்த வயதினருக்கும் இந்த கல்லடைப்பு பாதிப்பு ஏற்படலாம்.சிறுநீரகத்தில் கற்கள் வர முக்கிய காரணம் தண்ணீர் பருகாமை மற்றும் சிறுநீர் கழிக்காமையே.

சிறுநீரகத்தில் படியும் கற்களை கரைத்து வெளியேற்ற இந்த கை வைத்திய முறையை செய்து பயனடையலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பிரியாணி இலை – ஒன்று
2)ஏலக்காய் – ஒன்று
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டும் தரமான பொருளாக இருக்க வேண்டும்.

பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் ஒரு கிளாஸிற்கு வடித்துக் கொள்ள வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
2)வெண் பூசணி துண்டுகள் – கால் கப்
3)அருகம்புல் – சிறிதளவு
4)மாதுளை – கால் கப்

செய்முறை விளக்கம்:-

முதலாவதாக ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கீற்று வெண் பூசணிகையை தோல் நீக்கவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அருகம் புல் தேவையான அளவு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் மாதுளம் பழத்தை நறுக்கி அதன் விதைகளை சேகரித்து கொள்ள வேண்டும்.

பிறகு மிக்சர் ஜாரில் இந்த பெரிய நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து வெண் பூசணி துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அருகம் புல் மற்றும் மாதுளம் பழத்தை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை வடிகட்டி பருகினால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

ஒரு சேனை பலத்தை கொடுக்கும் சேனைக்கிழங்கு!! காலை கடன் கலகலன்னு வெளியேற இதை பண்ணுங்க!!

0

நாம் சாப்பிடும் கிழங்கு வகைகளில் அதிக சுவை நிறைந்த சேனைக்கிழங்கு கல்யாண வீட்டு விசேஷ இலை விருந்தில் தனி இடத்தை பிடிக்கிறது.இந்த சேனை கிழங்கில் செய்யப்படும் வறுவல் அதிக சுவை நிறைந்தவையாக இருக்கிறது.அசைவ உணவுகளே தோற்றுப் போகும் அளவிற்கு இந்த கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும்.

சேனைக்கிழங்கில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.வாரத்தில் இரண்டு தினங்கள் இந்த கிழங்கை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.இந்த கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.

சேனைக்கிழங்கு சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.சேனைக்கிழங்கில் பொட்டாசியம்,நார்ச்சத்து,இரும்பு,வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்டுகிறது.இந்த சேனைக்கிழங்கை உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கிழங்கை சாப்பிடலாம்.மூல நோய் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கிழங்கை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.வெயில் காலத்தில் அதிகரிக்கும் உடல் சூட்டை குறைக்க சேனைக்கிழங்கை சாப்பிடலம்.மூட்டு வலி பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் இந்த கிழங்கை சாப்பிடலாம்.

மூட்டு எலும்புகளின் வலிமையை அதிகரிக்க சேனைக்கிழங்கு பெரிதும் உதவுகிறது.இதில் இருக்கின்ற மெக்னீசியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.அடிக்கடி சேனைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் மன வலிமை அதிகரிக்கும்.

இரத்தத்தில் படிந்துள்ள கெட்ட கொழுப்பை கரைக்க சேனைக்கிழங்கை சாப்பிடலாம்.சேனைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.சேனைக்கிழங்கை வேகவைத்து உப்பு,மிளகு மிக்ஸ் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தால் மலச்சிக்கல் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து மீள மாத்திரைக்கு பதில் இந்த சேனைக்கிழங்கை சாப்பிடலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.27,500 ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!!

0

நம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடபட்டிருக்கிறது.தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் அதாவது Office Assistant பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பதவி:

அலுவலக உதவியாளர்(Office Assistant)

காலிப்பணியிடம்: Office Assistant பணிக்கு என்று மொத்தம் ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

Office Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பி.ஏ.,பி.காம். போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

Office Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 22 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

Office Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.27,500/- ஊதியமாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு
நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்:

Office Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக்கட்டணம் ரூ.200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தபால் வழி

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் www.iob.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முகவரி:

இயக்குநர்,RSETI திருச்சி,215 TELC வளாகம் முதல் தளம்,மதுரை சாலை,மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனை அருகில் IOB கன்டோன்மென்ட் கிளை – 620001.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 22-05-2025

CA படித்தவர்களுக்கு Rs.1,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

0

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய பருத்தி கழகத்தில் காலியாக இருக்கின்ற மேலாண்மை பயிற்சியாளர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த் Management Trainee பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இந்திய பருத்தி கழகம்

பதவி:

மேலாண்மை பயிற்சியாளர்(Management Trainee)

காலிப்பணியிடம்: Management Trainee பணிக்கு என்று மொத்தம் பத்து காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

Management Trainee பணிக்கு விண்ணப்பம் செய்ய அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் CA/CMA போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

Management Trainee பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிட வேண்டும்.

மாத ஊதியம்:

Management Trainee பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1,20,000/- ஊதியமாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்:

Management Trainee பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக்கட்டணம் ரூ.1,500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் www.cotcorp.org.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 24-05-2025