Home Blog Page 202

கெட்ட சக்தி அண்டாமல் இருக்க.. பண வரவு அதிகரிக்க வசம்பை இந்த இடத்தில் வையுங்கள்!!

0

நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் பல்வேறு கஷ்டங்கள் நம்மை வந்து சேரும்.சம்பாதிக்கும் பணதிற்கு வரவிற்கு மேல் செலவு வருதல்,உடல் நலக் கோளாறு ஏற்படுதல்,சுப காரியங்கள் தடைபடுதல் போன்றவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதை உணர்த்துகிறது.

அதேபோல் கண்திருஷ்டி இருந்தால் வீட்டில் கெட்ட விஷயங்கள் அதிகமாக நடைபெறும்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் வீட்டில் லட்சுமி கடாச்சம் இருக்காது.இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும்.

எனவே வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்ற,நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வசம்பை மந்திர பொருளாக பயன்படுத்தலாம்.வசம்பு ஒரு மூலிகை பொருள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.இந்த வசம்பு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இந்த வசம்பு ஒரு கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும்.

கொடிய விஷத்தையும் எளிதில் முறித்து தள்ளும் ஆற்றல் வசம்பிடம் உள்ளது.இந்த வசம்பு குழந்தைகளின் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் மருந்தாக திகழ்கிறது.வசம்பை நெருப்பில் வாட்டி பொடித்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வாந்தி,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சரி செய்கிறது.

இப்படி பல அம்சங்களை கொண்டிருக்கும் வசம்பை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.வீட்டு பூஜை அறையில் வசம்பு வைத்து வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும்.

வசம்பு துண்டை பன்னீரில் நினைத்து மஞ்சள்,குங்குமம் வைத்து பூஜை அறையில் இருக்கின்ற லட்சுமி தேவி படத்திற்கு அருகில் இதை வைக்க வேண்டும்.தினமும் இந்த வசம்பு துண்டிற்கு பூஜை செய்து வழிபட்டால் பண விரையம் ஆவது கட்டுப்படும்.

அதிமுக பாஜக கூட்டணி பரபரப்பு!!கடிதத்தில் 2 தொகுதிகளுக்கு புதிய கோரிக்கை!!

ADMK BJP: 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அதிமுக தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள குழப்பமும் சிக்கலும் மிகுந்துள்ளன. கடிதத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் இந்த கடிதத்தை படிப்பதன் மூலம், அக்கட்சியின் எதிர்கால நிலை பாதிக்கப்படும் என்பதில் கவலையும் கொண்டுள்ளனர்.

இந்தக் குழப்பம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றதற்குப் பிறகு அதிகமானது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தென் மாவட்டங்களில் அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் 2 வது இடத்தையும் கூட பெற முடியவில்லை. இந்த சூழலில் தென் மாவட்டங்களில் அதிமுக – பாஜக கூட்டணி ஆளுமைகளின் இடையே இருந்த பிரச்சனைகள் வேறு ஒரு பரிமாணம் கண்டுள்ளன.

இதனால், அதிமுக தொண்டர்கள் கடிதத்தில் கடுமையாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அதிமுகவே வேட்பாளர்களை நிறுத்தவிடாமல் செய்தால், நெல்லையில் அதிமுக திரட்டிய வாக்கு வங்கி அழிந்துவிடும் என்பது. இதன் விளைவாக  கூட்டணி அமைப்பின் நிலை இரு கட்சிகளுக்கு பல சிக்கல்களை சந்திக்க வைக்கின்றது. இந்த பிரச்சனையின் மூலம், குறைந்தது அதிமுக – பாஜக கூட்டணி ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் தெளிவாக வெளிப்படுகின்றது.

இந்தியாவின் அதிரடி தாக்குதல் – பாகிஸ்தானின் மூன்று விமான தளங்கள் மண்ணாகியது!!

0

INDIA-PAKISTAN: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பாதுகாப்பு பதற்றம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் மூன்று முக்கியமான விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய ஒத்துழைப்பு மையங்களான நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி) ஷோர்கோட்டில் உள்ள PAF ரஃபிகி தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரிட் விமான தளம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நூர் கான் தளம் பாகிஸ்தானின் முக்கியமான VIP போக்குவரத்து மையமாகவும், தேசிய அவசர நடவடிக்கைகளுக்கான முக்கிய கட்டுப்பாட்டு மையமாகவும் விளங்குகிறது. இங்கு உள்ள ஏர் மொபிலிட்டி கமாண்ட்  என்பது நாட்டின் முழுமையான விமானப்படை இயக்கங்களை கண்காணிக்கின்றது. மேலும் இது பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து செயல்படுவதால் இராணுவ மற்றும் சிவில் போக்குவரத்து ஒருங்கிணைப்பு இங்கே நடைபெறுகிறது.

இதேபோல் ஷோர்கோட்டில் உள்ள ரஃபிகி தளம் JF-17 தண்டர் மற்றும் F-7PG போர் விமானங்களுக்கு பயிற்சி மற்றும் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் முக்கிய போர் தளமாகும். இது பாகிஸ்தானின் கிழக்கு, மேற்குக் களங்களுக்கு உடனடி விமான ஆதரவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

முரிட் தளத்தில் ஏவுகணை செயல்பாடுகள் ரேடார் கண்காணிப்பு மற்றும் மின்னணு போர் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதுவும் தாக்குதலில் சீர்குலைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலால் பாகிஸ்தானின் விமான பாதுகாப்பு அமைப்பில் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள்  எதிர்காலத்தில் மேலும் பதற்றங்களை உருவாக்கும் அபாயம் காணப்படுகிறது.

பகல்ஹாம் தாக்குதல் முழுவதும் இந்தியாவின் நாடகம்!! பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட பகீர் வீடியோ!!

0

பகல்ஹாம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்திய ராணுவப்படை ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. முதலில் காஷ்மீர் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்பது மையங்கள் அழிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இதற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பாகிஸ்தான் அதனைத் தொடர்ந்து போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தியாவில் எல்லையரைப் பகுதியான பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதலில் நடத்தி வருகிறது. ஆனால் 2019 ஆம் ஆண்டு தேர்தல் நிறுவனம் சமயத்தில் புல்வானத் தாக்குதல் முழுவதும் தங்கள் மீது ஆதரவு கிடைக்க பாஜக நடத்திய நாடகம் இன்று காஷ்மீர் கவர்னர் கூறியிருந்தார். இது ரீதியாக காங்கிரஸ் மத்திய அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்டிருந்தது.

https://x.com/TimesAlgebraIND/status/1920894525309947945

அச்சமயத்தில் ராகுல் காந்தி மற்றும் காஷ்மீர் கவர்னர் பேசிய வீடியோவை பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பிலும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா ஆதரவை திரட்டுவதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மீது அந்த பழியை போடுவதாக தெரிவித்துள்ளார். இது ரீதியாக இந்திய நாட்டின் காஷ்மீர் பகுதியுடைய கவர்னரை புல்வாமா தாக்குதல் குறித்து பேசியுள்ளார் என்ன தெரிவித்து அந்த வீடியோவையும் வெளியிட்டார். தற்போது பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பெண்களுக்கு மகிழ்ச்சி!! ரூ.1000 உரிமை தொகைக்கு புதிய வாய்ப்பு – என்ன மாற்றம் வந்துள்ளது!!

0

தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மேலும் விரிவாக்கத்துடன் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டுகள் பெற்ற பெண்களுக்கும் ரூ.1000 தொகை கிடைக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.தற்போது புதிய பயனாளிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூன் 4ம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது 1.25 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தில் நேரடியாகப் பயனடைந்து வருகின்றன. இதனால் கூடுதலாக 10–15 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதனால், மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 கோடியாக உயரக்கூடும் என அரசு எதிர்பார்க்கிறது.இதற்கு இடையிலான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த முறை ஆவணப் பிழைகளால் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது. குறிப்பாக விவாகரத்து பெற்ற பெண்கள், குடும்ப தலைவியாக இல்லாதவர்களும், தனி ரேஷன் கார்டு உள்ள நிலையில் உதவித் தொகைக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.ஒரே வீட்டில் பல பெண்கள் இருந்தாலும், ரேஷன் கார்டில்  குடும்ப தலைவி என குறிப்பிடப்பட்டவர் பென்ஷன் பெறாதவராகவும், அரசு ஊழியராக இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

அவர்கள் மற்ற தகுதிகளை பூர்த்தி செய்தால்  ரூ.1000 தொகை அவர்களுக்கே வழங்கப்படும்.இதனுடன் மக்கள் புதிய ரேஷன் கார்டுகளில் மாற்றங்களை செய்து தகுதிகளைச் சரி செய்யும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. அரசின் இத்திட்டம், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, மிகுந்த பரப்பளவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.இந்த காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி அவசியமானதாக இருக்கின்றது.

நடைபயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:

1)உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க நடைபயிற்சி அவசியமாகும்.

2)வாழ்நாள் முழுவதும் உடல் பருமனை சந்திக்காமல் இருக்க நடைபயிற்சி அவசியமாகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி செய்யலாம்.

3)கால் வலிமையை அதிகரிக்க தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.நடைபயிற்சி செய்வதால் பக்கவாதம்,மனச்சோர்வு போன்ற பாதிப்புகளில் இருந்து மீளலாம்.

தினமும் பெரியவர்கள் பத்தாயிரம் காலடிகள் எடுத்து வைக்க வேண்டுமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.20 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் தினமும் 12,000 காலடிகள் நடக்க வேண்டும்.40 வயதை கடந்தவர்கள் தினமும் 11,000 காலடிகள் எடுத்து வைக்க வேண்டும்.60 வயதை கடந்தவர்கள் தினமும் 10,000 காலடிகள் நடக்க வேண்டும்.

சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் குறைந்தபட்சம் 12,000 காலடிகள் நடக்க வேண்டும்.தினமும் காலை நேரத்தில் 30 நிமிடங்கள் மற்றும் மாலை நேரத்தில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு மணி நேரம் வரை நடந்தால் 150 மில்லி கிராம் சர்க்கரை அளவு குறையும்.தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் இதய தசைகள் வலிமை அதிகரிக்கும்.ஆனால் உணவு உட்கொண்ட பிறகு நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டு மாடியில் சிறிது நேரம் நடைபயிற்சி செய்யலாம்.தினமும் வெறுங்களில் நடந்தால் கால் பாத ஆரோக்கியம் மேம்படும்.

ISRO-வில் பணிபுரிய வாய்ப்பு!! குறைந்தபட்ச கல்வித் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!!

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(இஸ்ரோ) காலியாக இருக்கின்ற இன்ஜினியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO)

வேலை:

இன்ஜினியர்

காலிப்பணியிடங்கள்:

இப்பணிக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

*இன்ஜினியர்(Electronic) – 22
*இன்ஜினியர்(Mechanical) – 33
*இன்ஜினியர்(Computer Science) – 8

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 28 என்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித்தகுதி
கேட் தேர்வு மதிப்பெண்கள்
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருப்பவர்கள் https://www.isro.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் ரூ.250 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 19-05-2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) அறிவித்துள்ள பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் கூடுதல் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்.

டிகிரி படித்தவர்களுக்கு பால்வள மேம்பட்டு கழகத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0

நமது மத்திய அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மார்க்கெட்டிங் மேனேஜர்,திட்ட மேனேஜர்,மாவட்ட மேனேஜர்,கிளார்க்,கணக்காளர் உள்ளிட்ட பணிகளுக்கு என்று மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய பால்வள மேம்பாட்டு கழகம்

வேலை:

மார்க்கெட்டிங் மேனேஜர்,திட்ட மேனேஜர்,மாவட்ட மேனேஜர்,கிளார்க்,கணக்காளர் உள்ளிட்ட பல பணிகள்

காலிப்பணியிடங்கள்:

இப்பணிகளுக்கு மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதேபோல் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.2,16,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருப்பவர்கள் https://ddcil.org.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக்கட்டணம் ரூ.675 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.SC,ST மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களுக்கு ரூ.390 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: மே 24

இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் கூடுதல் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்.

இதை 5 மில்லி குடித்தால்.. மலட்டு தன்மை நீங்கும்!! விந்து அருவி போல் கொட்டும்!!

ஆண்கள் சந்தித்து வரும் மலட்டு தன்மை பிரச்சனையை சரி செய்ய இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்க விளக்கெண்ணெய்,கற்றாழை,சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய் – 250 மில்லி
2)கற்றாழை – இரண்டு மடல்
3)சின்ன வெங்காயம் – 20
4)சீரகம் – இரண்டு தேக்கரண்டி
5)பனங்கற்கண்டு – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதை தண்ணீரில் போட்டு நான்கு அல்லது ஐந்து முறை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து இருபது சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி வைத்து 250 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள கற்றாழை துண்டுகளை அதில் போட்டு காய்ச்ச வேண்டும்.அடுத்து தோல் நீக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை இடித்து விளக்கெண்ணெயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டு அடுப்பு தீயை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு 50 கிராம் அளவிற்கு பனங்கற்கண்டை பொடித்து அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

விளக்கெண்ணெய் கலவை நன்றாக கெட்டியாக கொதித்து வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணையை ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை தினமும் 10 மில்லி அளவு சாப்பிட்டு சாப்பிட்டால் மலட்டு தன்மைநீங்கும்.மூலச்சூடு,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.அதேபோல் தினமும் சிறிதளவு ஓரிதழ் தாமரை பொடியை பாலில் கலந்து குடித்தால் மலட்டு தன்மை குணமாகும்.

உதட்டு ஓரத்தில் புண்கள் உள்ளதா? ஒரே இரவில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

வாய் அல்சர் இருப்பவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்தால் ஒரே நாளில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தீர்வு 01:

ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
சிறிதளவு தண்ணீர்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை வாய்ப்புண் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

தீர்வு 02:

கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
ஒரு கிளாஸ் தண்ணீர்

முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த நீரை பருகினால் வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 03:

ஒரு தேக்கரண்டி கசகசா
ஒரு கப் தேங்காய் பால்

முதலில் ஒரு மூடி தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலில் ஒரு தேக்கரண்டி கசகசா போட்டு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 04:

ஒரு தேக்கரண்டி மணத்தக்காளி கீரை பொடி
ஒரு கிளாஸ் தேங்காய் பால்

மணத்தக்காளி கீரையை உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பாலில் மணத்தக்காளி கீரை பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 05:

ஒரு தேக்கரண்டி சுண்டக்காய் வற்றல்
ஒரு கிளாஸ் மோர்

முதலில் சுண்டக்காய் வற்றலை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கிளாசில் மோர் ஊற்றி அரைத்த சுண்டைக்காய் பொடியை மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இப்படி வாரத்தில் மூன்று தினங்கள் பருகி வந்தால் வாய்ப்புண் பாதிப்பு குணமாகும்.