Home Blog Page 200

அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!! நோ எக்ஸாம்.. சீக்கிரம் விண்ணப்பம் செய்யுங்கள்!!

0

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையில் காலியாக இருக்கின்ற செவிலியர்,மருந்தாளுநர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.இந்த பணி குறித்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

பதவிகள்:

1)செவிலியர்

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனை மற்றும் சுகாதாரமேலாண்மை படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2)இடைநிலை சுகாதார பணியாளர்

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் மகப்பேறு மருத்துவத்தில் டிப்ளமோ படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிக்கு ஐந்து காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

3)துணை செவிலியர்

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் தமிழ்நாடு கவுன்சிலின் பதிவு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.14,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

4)மருந்தாளுநர்

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் டி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.பி.பார்ம் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

5)RMNCH Counsellor

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனை மற்றும் சுகாதாரமேலாண்மை படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

6)Occupational Therapist

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை வெறும் அழகுச்செடினு நினச்சிட்டீங்களா? இந்த நோய்க்கு அற்புத மருந்து இதுவே!!

நம் வீட்டை அழகுபடுத்த வைக்கப்படும் காகிதப் பூ செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை அறிந்தவர் குறைவானவர்களே.காகிதப் பூவில் ஆரஞ்சு,ரோஸ்,சந்தனம்,வெள்ளை என்று பல நிறங்கள் இருக்கிறது.

இந்த காகிதப் பூவை வைத்து தேநீர் செய்து பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)காகிதப் பூ
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:

முதலில் காகிதப் பூ சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.எந்த நிற காகிதப் பூவாக இருந்தாலும் சரி.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் சிறிதளவு காகிதப் பூவை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த காகிதப் பூ பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகலாம்.இந்த காகிதப் பூ பானம் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவுகிறது.

காகிதப் பூவில் டீ செய்து குடித்தால் மூட்டு வலி குணமாகும்.உடல் எலும்புகளை வலிமைப்படுத்த காகிதப் பூ டீ பருகலாம்.நீரிழிவு நோய் பாதிப்பு குணமாக காகிதப் பூ தேநீர் செய்து பருகலாம்.

காகிதப் பூவில் டீ செய்து குடித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள காகிதப் பூவில் டீ போட்டு குடிக்கலாம்.காகிதப் பூ சாறு சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம்! நன்றி மறந்த ஸ்டாலின் – வழக்கறிஞர் பாலு 

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் நன்றி மறந்து விட்டார் என பாமக வழக்கறிஞர் பாலு பேசியுள்ளார்.

பாமக சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையிலுள்ள திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டு திடலில் சுமார் 2 லட்சம் நபர்களுக்கு மேல் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் போதுமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் 5000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

pmk lawyer balu
pmk lawyer balu

இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணமேயுள்ளனர். இதில் காவல்துறையினர் கெடுபிடியால் பல்வேறு வாகனங்கள் வழிமாற்றி திருப்பி விட்டதாக ஆளும் அரசு மீது பாமகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மாநாட்டில் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு திமுகவை விமர்சித்து பேசியுள்ளார். அதாவது கலைஞருக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் கொடுத்ததே பாமகவால் தான் என அவர் திமுகவை விமர்சித்துள்ளார். ஆனால் அவரின் மகன் ஸ்டாலின் அதை மறந்து பாமக வின் கோரிக்கையான வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை இழுத்தடித்து வருகிறார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மருத்துவர் ராமதாஸ் அளித்த சமூக நீதியின் அடையாளமான மஞ்சள் துண்டை அணிந்து கொண்டு தான் கருணாநிதி தமிழக அரசியலில் வலம் வந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அதையெல்லாம் மறந்து செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.

ஆண்குறியில் குறைவான விந்தணு வருதா? பாலில் இதை கலந்து குடித்து பாருங்கள்!!

0

இன்றைய காலகட்டத்தில் விந்தணு குறைபாடு ஆண்களுக்கு பொதுவான பாதிப்பாக மாறி வருகிறது.ஆண்கள் தங்கள் விந்தணு தரத்தை அதிகரிக்க சித்த வைத்தியத்தை பின்பற்றலாம்.நீர்த்த விந்து,குறைவான விந்து பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு வரப் பிரசாதமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)ஓரிதழ் தாமரை பொடி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த பாலை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவிற்கு ஓரிதழ் தாமரை பொடி போட்டு கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து இந்த இந்த பாலில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பருகி வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)பூனைக்காலி விதை பொடி – 10 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பசும் பாலை பாத்திரம் ஒன்றில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பூனைக்காலி விதை பொடி போட்டு காய்ச்சி கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் ஊற்றி பருகினால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)செவ்வாழைப்பழம் – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு செவ்வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் இதை காய்ச்சிய பாலில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

வெயில் கால சிறுநீர் கடுப்பு பிரச்சனை? ஒரு துண்டு புளியை இப்படி சாப்பிட்டால் உடனே யூரின் வரும்!!

0

கோடை காலத்தில் நீர்க்கடுப்பு பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள புளி மற்றும் கருப்பட்டியை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
2)கருப்பட்டி – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

சிறிய கிண்ணத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும்.

பிறகு புளியை கரைத்து தண்ணீரை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து புளி கரைசலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

புளி கரைசல் கொதிக்கும் தருவாயில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு கருப்பட்டி சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு இந்த பானத்தை வடிகட்டி பருக வேண்டும்.இந்த புளி பானம் பருகி வந்தால் சிறுநீர் கடுப்பு பிரச்சனை சரியாகும்.

அதேபோல் தினமும் உடலுக்கு தேவைப்படும் தண்ணீரை பருகி வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனையை சந்திக்காமல் இருக்கலாம்.வாழைப்பழம்,பேரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

நீர் கடுப்பை குணமாக்கும் மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)கற்கண்டு – சிறிதளவு

பயன்படுத்தும் முறை:-

வாணலி ஒன்றில் சீரகத்தை போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிதளவு கற்கண்டு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த சீரகத் தூள் மற்றும் கற்கண்டு பொடி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நீர் கடுப்பு பிரச்சனை சரியாகும்.

உங்களுக்கு அலாரம் வைத்து எழும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வரலாம்!!

0

இன்றைய காலத்தில் நிம்மதியான தூக்கத்தை அனுபபிப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.மன அழுத்தம்,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.இரவில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் சிலருக்கு தூக்கம் இல்லாமல் போகிறது.

கடந்த காலங்களில் அதிகாலை நேரத்தில் எழும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருந்தது.ஆனால் தற்பொழுது அலாரம் வைத்து எழுவது அதிகரித்து வருகிறது.அலாரம் இல்லாமல் எழுவது என்பது இன்றைய காலகட்டத்தில் முடியாத காரியமாகவே உள்ளது.

இப்படி அலாரம் வைத்து உறங்குவது நல்ல பழக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தினமும் உங்களை அலாரம் எழுப்புகிறது என்றால் அது உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்துவிடும்.சிலருக்கு அலாரம் வைத்தாலும் எழ முடியாத நிலை ஏற்படும்.சிலர் அலார நேரத்தை அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்து தூக்க நேரத்தை அதிகப்படுத்துகின்றனர்.இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு செயலாகும்.

இரவில் நேரம் கடந்து தூங்கினால் அதிகாலை நேரத்தில் ஆழ்ந்த நிலை தூக்கம் வரும்.இந்த நேரத்தில் அலாரம் சத்து கேட்டால் மன அழுத்தம்,டென்ஷன் போன்றவை ஏற்படும்.அதோடு அலாரம் வைத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுவதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

இதனால் இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.அதேபோல் பக்கவாதம்,சர்க்கரை நோய் போன்றவை ஏற்படக் கூடும்.ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது அலாரம் வைத்து எழுவதால் மூளை நரம்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.அதேபோல் நாம் அதிக நேரம் தூங்கினாலும் நமது உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

எனவே இனி அலாரம் வைத்து எழும் பழக்கத்தை கைவிட வேண்டும்.அலாரம் இல்லாமல் எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.அதற்கு நாம் நேரமாக உறங்க வேண்டும்.நாம் எவ்வளவு சீக்கிரம் உறங்க செல்கின்றோமோ அந்த அளவிற்கு அதிகாலை நேரத்தில் எழ முடியும்.நேரமாக தூங்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு அலாரம் தேவையில்லை.

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கைவிட்டு நழுவுவது நல்லதா கெட்டதா?

0

நாம் நல்ல காரியங்களில் ஈடுபடும் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைப்பதை இந்துக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வேண்டுதல் வைத்தால் சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது.இப்படி உடைக்கும் சிதறு தேங்காய் சில சமயம் உடைக்கும் முன் கை நழுவி போகலாம்.இப்படி நடப்பது நல்லதா கெட்டதா என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்துக்கள் பூஜையில் தேங்காய் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காயில் பூ இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதுவே தேங்காய் அழுகி இருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு ஆபத்து வரப் போகிறது என்று அர்த்தம்.வீட்டில் ஏதேனும் விசேஷம் நடந்தால் கோயிலுக்கு சென்று சிதறு தேங்காய் உடைப்பது வழக்கம்.

சிதறு தேங்காய் கை நழுவி போவது நல்ல பலனை தரும்.உடைக்கும் பொழுது சிதறு தேங்காய் உங்கள் கை நழுவி போவது நல்ல பலனுக்கான அறிகுறியாகும்.இது கடவுளின் அருள் கிடைக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

தேங்காய் உடைக்கும் பொழுது தெரியாமல் கை நழுவினால் அது தடைகள் நீங்குவதறகான அறிகுறியாகும்.நீண்ட நாட்களாக நீடித்துவந்த தடைகள் விலகி வெற்றி கிடைக்கும் என்று அர்த்தம்.சிதறு தேங்காயை பெரும்பாலும் விநாயகப் பெருமானுக்கே உடைக்கப்படுகிறது.அப்படி இருக்கையில் சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கை நழுவி போனால் விநாயகர் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது அவை கழுவின் போனால் அது நல்ல காரியத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது அறியாமல் நழுவினால் மட்டுமே இந்த பலன்கள் கிடைக்கும்.

இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!

0

வீடு என்பது அனைவரும் வசிக்க கூடிய ஒரு இடமாகும்.வாழ்நாள் முழுவதும் வசிக்க கூடிய இடத்தை வாஸ்துப்படி அமைக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் சிலரது வீடுகள் பல வாசல்கள் கொண்டவையாக இருக்கும்.சிலரது வீடுகள் முன்புறம் மற்றும் பின்புறம் என்று இரு வாசல்கள் கொண்டிருக்கும்.ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் மூன்று வாசலுக்கு மேல் இருக்க கூடாது.அதிக வாசல் கொண்ட வீட்டில் சதோஷமாக வாழ முடியாத நிலை ஏற்படும்.

நமது வீட்டு வாசற்படி வழியாகத் தான் செல்வதை அள்ளிக்கொடுக்கும் மகாலட்சுமி உள்ளே நுழைகின்றார்.அப்படி இருக்கையில் வீட்டு வாசல் அமைய வேண்டிய திசை என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

வீட்டு வாசல் கிழக்கு,மேற்கு,வடக்கு ஆகிய மூன்று திசை பார்த்தவாறு அமைக்கலாம்.ஆனால் தெற்கு திசை நோக்கியவாறு மட்டும் அமைக்க கூடாது.கிழக்கு திசை நோக்கியவாறு வாசற்படி இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.அதேபோல் மேற்கு நோக்கியவாறு வாசற்படி இருந்தால் அதிக நன்மைகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.வடக்கு திசை நோக்கியவாறு வாசற்படி இருந்தால் சிலருக்கு அது நன்மை தராது.

அதேபோல் வீட்டின் தென் கிழக்கு திசை பார்த்தவாறு வாசற்படி அமைய கூடாது.அதேபோல் தென் மேற்கு பகுதியை நோக்கி வாசற்படி இருக்கக் கூடாது.இந்த இரு திசைகளில் வாசற்படி அமைந்தால் வாழ்வில் எந்த ஒரு நல்லதும் நடக்காது.

நம் வீட்டை வாஸ்துப்படி கட்டுவது எள்ளளவு முக்கியமோ அதேபோல் வீட்டு வாசற்படியும் வாஸ்துப்படி இருக்க வேண்டியது முக்கியம்.வீட்டு வாசற்படி சரியான திசையில் இருந்தால் மட்டுமே செல்வ செழிப்புடன் வாழ முடியும்.வீட்டில் பணம் சேர,கடன் பிரச்சனை வராமல் இருக்க உரிய திசையில் வாசற்படி அமைக்க வேண்டும்.

வீட்டிற்கு அதிகபட்சம் 3 வாசற்படி இருக்கலாம்.அதேபோல் வீட்டு வாசற்படி சரியான திசையில் இருக்க அமைய வேண்டியது முக்கியம்.வீட்டு நுழைவாயில் வாஸ்துப்படி இல்லாவிட்டால் நிச்சயம் ஏதேனும் ஒரு தடை,பணப் பிரச்சனை போன்றவை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.நீங்கள் வாடகை வீட்டிற்கு செல்பவராக இருந்தாலும் இந்த வாசற்படி வாஸ்துவை கட்டாயம் பார்க்க வேண்டும்.

ஒரே பேன் கடியா இருக்கா? இந்த கீரையை அரைத்து தலைக்கு தடவி குளித்தால் ஒரு மணி நேரத்தில் பேன் ஒழியும்!!

0

உங்கள் தலையில் உள்ள பேன்களை ஒழித்துக் கட்ட வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.நீண்ட வருட பேன் தொல்லைக்கு ஒரு பயனுள்ள தீர்வு இங்கு தரப்பட்டிருக்கிறது.

தீர்வு 01:

1)வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – தேவைக்கேற்ப

நீங்கள் பிரஸான வெந்தயக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தலைக்கு வெந்தய கீரை பேஸ்டை அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

அரை மணி நேரம் வெந்தயக் கீரையை விழுதை ஊறவைத்த பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் பேன் தொல்லை ஒழியும்.

தீர்வு 02:

1)வேப்பிலை – ஒரு கைப்பிடி
2)வேப்பங்கொட்டை – 20 கிராம்
3)தண்ணீர் – தேவைக்கேற்ப

முதலில் வேப்பிலை மற்றும் வேப்பங் கொட்டையை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.இதனை தண்ணீர் விட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு தலையை ஈரப்படுத்திவிட்டு அரைத்து வைத்துள்ள வேப்பிலை பேஸ்டை அப்ளை செய்து குளித்து வந்தால் பேன் தொல்லை ஒழியும்.

தீர்வு 03:

1)மிளகு – ஒரு தேக்கரண்டி
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி

கருப்பு மிளகை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு தயிர் சேர்த்து பேஸ்டாக கலந்து கொள்ள வேண்டும்.பிறகு இதை தலைக்கு தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் பேன் தொல்லை முழுமையாக ஒழியும்.

தீர்வு 04:

1)ஆவாரம் பூ – 20 கிராம்
2)தண்ணீர் – சிறிதளவு

ஆவாரம் பூவை தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தலைக்கு தடவி குளித்தால் பேன் தொல்லை ஒழியும்.

தலைமுடி கருமைக்கு தேங்காய் எண்ணெய் + மேஜிக் இலை போதும்!! ஒரு வாரத்தில் நரைமுடிக்கு டாட்டா!!

0

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக மாற்ற இந்த எண்ணையை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெட்பாலை
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து முதல் பதினைந்து வெட்பாலை இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு இரும்பு பாத்திரத்தில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெட்பாலை இலைகளை அதில் போட்டு 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த எண்ணையை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு வாரம் வரை ஊறவைக்க வேண்டும்.பிறகு இந்த எண்ணையை சுத்தமான பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இந்த வெட்பாலை எண்ணையை தலைக்கு தடவ வேண்டும்.இதை நாம் தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி இயற்கையாக கருப்பாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை
2)பொன்னாங்கண்ணி கீரை
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை விளக்கம்:-

நீங்கள் முதலில் கறிவேப்பிலை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பாத்திரத்தில் 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு கறிவேப்பிலை மற்றும் பொன்னாங்கண்ணி கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எண்ணையை ஆறவைக்க வேண்டும்.இந்த எண்ணையை பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி அடர் கருமையாக மாறும்.

அதேபோல் அவுரி இலையை தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க வைத்து பிறகு ஆறவைத்து வடித்து தலையில் தடவி வர வெள்ளை முடி தென்படாது.